ஆண்டிமனி தெலூரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆண்டிமனி தெலூரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஆண்டிமனி தெலூரைடு, ஆண்டிமனி(III) தெலூரைடு, டை ஆண்டிமனி டிரைதெலூரைடு
இனங்காட்டிகள்
1327-50-0 Yes check.svgY
ChemSpider 21241420 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6369653
பண்புகள்
Sb2Te3
வாய்ப்பாட்டு எடை 626.32 g·mol−1
தோற்றம் சாம்பல் நிறத்திண்மம்
அடர்த்தி 6.50 கி செ.மீ−3[1]
உருகுநிலை
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 0.5 மி.கி/மீ3 (Sb ஆக)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.5 மி.கி/மீ3 (Sb ஆக)[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் Sb2O3
Sb2S3
Sb2Se3
ஏனைய நேர் மின்அயனிகள் As2Te3
Bi2Te3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஆண்டிமனி தெலூரைடு (Antimony telluride) என்பது Sb2Te3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சாம்பல்நிற படிகத்திண்மமான இச்சேர்மத்தின் உருகுநிலை, அடர்த்தி, நிறம் போன்ற பண்புகள் இச்சேர்மம் ஏற்கும் படிகவடிவத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன.

தொகுப்பு முறை தயாரிப்பு[தொகு]

ஆண்டிமனியுடன் தெலுரியம் 500- 900 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து ஆண்டிமனி தெலூரைடு உருவாகிறது [1]. 2Sb(நீ) + 3Te(நீ) → Sb2Te3(நீ)

பயன்கள்[தொகு]

ஆண்டிமனி, பிசுமத் போன்ற தனிமங்களின் மற்ற இரட்டை சால்கோகெனைடுகள் போல ஆண்டிமனி தெலூரைடும் இதனுடைய குறைகடத்திப் பண்புகளுக்காக ஆராயப்படுகிறது. இதனுடன் பொருத்தமான மாசு கலக்கப்பட்டு என் – வகை, பி – வகை குறைகடத்திகள் தயாரிக்கப்படுகின்றன [1]. போலியிரட்டை உலோகமிடை திட்ட அமைப்பில் செருமேனியம்-ஆண்டிமனி-தெலூரியம் உடன் செருமேனியம்-தெலூரைடு உருவாகிறது (GeTe) [3].

பிசுமத் தெலூரைடு (Bi2Te3,) போலவே ஆண்டிமனி தெலூரைடும் பெரிய அளவில் வெப்பமின் விளைவைக் கொண்டுள்ளது. இதனால் திடநிலை குளிரூட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 581–582. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  2. 2.0 2.1 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0036". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. Wełnic, Wojciech; Wuttig, Matthias (2008). "Reversible switching in phase-change materials". Materials Today 11 (6): 20–27. doi:10.1016/S1369-7021(08)70118-4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிமனி_தெலூரைடு&oldid=2688175" இருந்து மீள்விக்கப்பட்டது