ஆண்டிமனி தெலூரைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஆண்டிமனி தெலூரைடு, ஆண்டிமனி(III) தெலூரைடு, டை ஆண்டிமனி டிரைதெலூரைடு
| |
இனங்காட்டிகள் | |
1327-50-0 | |
ChemSpider | 21241420 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6369653 |
| |
பண்புகள் | |
Sb2Te3 | |
வாய்ப்பாட்டு எடை | 626.32 g·mol−1 |
தோற்றம் | சாம்பல் நிறத்திண்மம் |
அடர்த்தி | 6.50 கி செ.மீ−3[1] |
உருகுநிலை | 580 °C (1,076 °F; 853 K)[1] |
தீங்குகள் | |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 0.5 மி.கி/மீ3 (Sb ஆக)[2] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 0.5 மி.கி/மீ3 (Sb ஆக)[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | Sb2O3 Sb2S3 Sb2Se3 |
ஏனைய நேர் மின்அயனிகள் | As2Te3 Bi2Te3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆண்டிமனி தெலூரைடு (Antimony telluride) என்பது Sb2Te3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சாம்பல்நிற படிகத்திண்மமான இச்சேர்மத்தின் உருகுநிலை, அடர்த்தி, நிறம் போன்ற பண்புகள் இச்சேர்மம் ஏற்கும் படிகவடிவத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன.
தொகுப்பு முறை தயாரிப்பு
[தொகு]ஆண்டிமனியுடன் தெலுரியம் 500- 900 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து ஆண்டிமனி தெலூரைடு உருவாகிறது [1]. 2Sb(நீ) + 3Te(நீ) → Sb2Te3(நீ)
பயன்கள்
[தொகு]ஆண்டிமனி, பிசுமத் போன்ற தனிமங்களின் மற்ற இரட்டை சால்கோகெனைடுகள் போல ஆண்டிமனி தெலூரைடும் இதனுடைய குறைகடத்திப் பண்புகளுக்காக ஆராயப்படுகிறது. இதனுடன் பொருத்தமான மாசு கலக்கப்பட்டு என் – வகை, பி – வகை குறைகடத்திகள் தயாரிக்கப்படுகின்றன [1]. போலியிரட்டை உலோகமிடை திட்ட அமைப்பில் செருமேனியம்-ஆண்டிமனி-தெலூரியம் உடன் செருமேனியம்-தெலூரைடு உருவாகிறது (GeTe) [3].
பிசுமத் தெலூரைடு (Bi2Te3,) போலவே ஆண்டிமனி தெலூரைடும் பெரிய அளவில் வெப்பமின் விளைவைக் கொண்டுள்ளது. இதனால் திடநிலை குளிரூட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது [1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 581–582. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ 2.0 2.1 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0036". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Wełnic, Wojciech; Wuttig, Matthias (2008). "Reversible switching in phase-change materials". Materials Today 11 (6): 20–27. doi:10.1016/S1369-7021(08)70118-4.