தங்கம் சால்கோசெனைடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தங்கம் சால்கோசெனைடுகள் (Gold chalcogenides) என்பவை தங்கம் உலோகத்துடன் தனிம வரிசை அட்டவணையின் நெடுங்குழு 16 தனிமங்களான சால்கோசென்களில் ஒன்று வினைபுரிந்து உருவாகும் சேர்மத்தைக் குறிக்கும். ஆக்சிசன், கந்தகம், செலீனியம், தெலுரியம், பொலோனியம், லிவர்மோரியம் போன்ற தனிமங்கள் சால்கோசென்களாகும்.

  • தங்கம்(III) ஆக்சைடு Au2O3 : 160° செல்சியசு வெப்பநிலைக்கு மேற்பட்ட வெப்பநிலையில் தங்கம் மற்றும் ஆக்சிசனாக சிதைவடைகிறது. அடர் காரங்களில் இது கரைந்து [Au(OH)4]− அயனியாக உருவாகிறது.
  • தங்கம்(I) சல்பைடு (Au2S) தங்கம்(I) சேர்மங்களின் கரைசல் வழியாக ஐதரசன் சல்பைடை செலுத்தி வினைபுரியச் செய்வதன் வழியாக தங்கம்(I) சல்பைடு உருவாகிறது.
  • தங்கம்(III) சல்பைடு: Au2S3, தண்ணீரின் முன்னிலையில் இது நிலப்புத்தன்மை அற்றதாக உள்ளது.
  • தங்கம் தெல்லூரைடுகள்: Au2Te3, Au3Te5, and AuTe2 (தோராயமான வாய்ப்பாடு) போன்ற சேர்மங்கள் யாவும் விகிதவியல் முறைப்படி உருவாகாத சேர்மங்கள் ஆகும். இவையனைத்தும் உலோகங்களைப் போல கடத்தும் பண்பு கொண்டவையாக உள்ளன. Au3Te5 என்ற தங்க தெல்லூரைடு மிகக் குறைந்த வெப்பநிலையிலும் மீக்கடத்தியாகச் செயல்படுகிறது.

காலாவெரைட்டு, கிரென்னரைட்டு (AuTe2) பெட்சைட்டு ( Ag3AuTe2) மற்றும் சில்வனைட்டு (AgAuTe4) போன்ற இயற்கையில் தோன்றும் தங்கத் தெல்லூரைடுகள் அனைத்தும் தெல்லூரியம் மற்றும் தங்கம் ஆகிய தனிமங்கள் இரண்டுக்கும் பொதுவான சிறுபாண்மை கனிமங்களாகும். தெல்லூரைடின் கனிமங்களின் பட்டியலைக் கண்டால் இயற்கையில் தோன்றும் கனிமங்களான இவற்றைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற முடியும்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Luo, H.L.; Merriam, M.F.; Hamilton, D.C. (1964). "Superconducting Metastable Compounds". Science 145: 581-583. doi:10.1126/science.145.3632.581. பப்மெட்:17735806. Bibcode: 1964Sci...145..581L. http://www.sciencemag.org/content/145/3632/581. பார்த்த நாள்: 25 October 2015.