காலியம்(III) தெலூரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காலியம்(III) தெலூரைடு
Gallium(III) telluride[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
காலியம் தெலூரைடு, காலியம் செசுகியுதெலூரைடு, டைகாலியம்(III) டிரைதெலூரைடு
இனங்காட்டிகள்
12024-27-0 Yes check.svgY
பண்புகள்
Ga2Te3
வாய்ப்பாட்டு எடை 522.25 கி/மோல்
தோற்றம் கனசதுரப் படிகங்கள்
அடர்த்தி 5.57 கி/செ.மீ3
உருகுநிலை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் காலியம்(III) ஆக்சைடு, காலியம்(III) சல்பைடு, காலியம்(III) செலீனைடு, காலியம்(III) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

காலியம்(III) தெலூரைடு (Gallium(III) telluride) என்பது Ga2Te3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உலோகத் தெலூரைடாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் . அறை வெப்பநிலையில் கருப்பு நிறத்திலும் நெடியற்றும் காணப்படுகிறது. எளிதில் நொறுங்கும் தன்மை கொண்ட இப்படிகத்திண்மம் III-VI வகையான ஒரு குறைக்கடத்தியாகும். மேலும் காலியம் தெலுரைடு அணிக்கோவை கட்டமைப்பில் படிகமாகிறது [2].

தயாரிப்பு[தொகு]

உயர் வெப்பநிலையின்கீழ் தெலூரைடு ஆக்சைடு அணைவுச் சேர்மமும் மும்மெத்தில் காலியமும் ஈடுபடும் திண்ம-நிலை வினையின் வழியாக காலியம் தெலுரைடு பொதுவாகத் தயாரிக்கப்படுகிறது. தனிமநிலை காலியம் மற்றும் தனிமநிலை தெலுரியம் இரண்டும் உயர்வெப்ப நிலையில் வினைபுரிவதாலும் இதைத் தயாரிக்க இயலும் [3].

பண்புகள்[தொகு]

இயற்பியல் பண்புகள்[தொகு]

அறை வெப்பநிலையில் காலியம்(III) தெலூரைடு கருப்பு நிறங்கொண்டு, நெடியற்று, எளிதில் நொறுங்கக் கூடிய ஒரு படிகமாகும். நான்கு ஒருங்கிணைவுகள் கொண்ட நான்முகக் கட்டமைப்பில் காலியம்(III) தெலூரைடு படிகமாகிறது. உடனடியாக தீப்பற்றும் பண்போ வினைபுரியும் பண்போ இதற்குக் கிடையாது. இருப்பினும் தேவையான பாதுகாப்பு உடையுடன் இதை கையாளவேண்டும். காலியம்(III) தெலூரைடின் உருகுநிலை 788° செல்சியசு முதல் 792° செல்சியசு வெப்பநிலை வரை இருக்கும். நீரில் இச்சேர்மம் கரைவதில்லை [4].

வேதிப்பண்புகள்[தொகு]

அறைவெப்பநிலையில் காலியம்(III) தெலூரைடு நிலைப்புத்தன்மை கொண்டதாக இருக்கிறது. வினை திறன் அற்ற சேர்மமாக இருப்பதாலும் இதனுடன் இணக்கமாகச் சேர்ந்துள்ள வேதிப்பொருட்கள் ஏதும் அறியப்படவில்லை [5]. நாட்பட்ட காலியம்(III) தெலூரைடு தெலூரைடு புகையை உமிழ்ந்து இயற்கையிலேயே சிதைவடைகிறது. தீங்கு விலைவிக்கும் பலபடியாக்க வினைகள் எதிலும் இச்சேர்மம் ஈடுபடுவதில்லை.

நச்சுத்தன்மை[தொகு]

காலியம்(III) தெலூரைடின் நச்சுத்தன்மை குறித்த ஆய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் தனிமநிலை தெலூரியம் ஒப்பீட்டளவில் குறைந்த நச்சுத்தன்மையுடன் காணப்படுகிறது. உடலில் டைமெத்தில் தெலூரைடாக இது மாற்றப்படுகிறது, இதன் காரணமாக மூச்சு மற்றும் வியர்வையில் பூண்டு போன்ற நாற்றம் உண்டாகிறது. உடலில் அதிகமாக வெளிப்பட நேர்ந்தால் இதைத்தவிர கூடுதலாக, தலைவலி, சோர்வு, உலோகச் சுவை, பசியின்மை, குமட்டல், நடுக்கம், மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற இடர்பாடுகள் ஏற்படலாம் [4]. எனவே இச்சேர்மத்தை பயன்படுத்துங்கால் அவசியமான முன்னேற்பாடுகளுடன் இருப்பது அவசியம். ஆய்வக மூக்குக் கண்ணாடிகள் மற்றும் கையுறைகள் அணிந்து நன்கு காற்றோட்டமுள்ள ஓர் அறையில் இதைப் பயன்படுத்த வேண்டும் [4].

பயன்கள்[தொகு]

தொழிற்துறை[தொகு]

காலியம்(III) தெலூரைடு பி-பிரிவு III-VI என்ற வகை [2] குறைக்கடத்தியாகும். நடைமுறையில் இது தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் மென் படலமாகவும் சீரொளி டையோடு மற்றும் சூரிய மின்கலன்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது [6].

உயிரி மருத்துவம்[தொகு]

காலியம்(III)தெலூரைடின் மருத்துவ பயன்கள் இன்னும் ஆய்வு நிலையிலே உள்ளன [2].

பிற பயன்கள்[தொகு]

குறைகடத்தி மற்றும் வேதி ஆவிப் படிவு, பௌதீக ஆவிப் படிவு காட்சியமைத்தல், ஒளியியல் பயன்பாடுகள் போன்றவை காலியம்(III)தெலூரைடின் பிற பயன்களாகும் [7]. படிக மற்றும் பல்படிக வடிவங்களில் மீத்தூய காலியம்(III)தெலூரைடு வர்த்தகமுறையாகவும் விற்பனைக்குக் கிடைக்கிறது [8].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலியம்(III)_தெலூரைடு&oldid=2607558" இருந்து மீள்விக்கப்பட்டது