ஆண்டிமனி(III) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டிமனி(III) ஆக்சைடு
ஆண்டிமனி(III) ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆண்டிமனி(III) ஆக்சைடு
வேறு பெயர்கள்
ஆண்டிமனி செசுகியுவாக்சைடு
ஆண்டிமோனசு ஆக்சைடு
ஆண்டிமனி பூக்கள்
இனங்காட்டிகள்
1309-64-4 Yes check.svgY
ChemSpider 25727 Yes check.svgY
EC number 215-474-6
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19192 Yes check.svgY
பப்கெம் 14794
வே.ந.வி.ப எண் CC5650000
UNII P217481X5E Yes check.svgY
பண்புகள்
Sb2O3
வாய்ப்பாட்டு எடை 291.518 கி/மோல்
தோற்றம் வெண்மையான திண்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 5.2 கி/செ.மீ/3, α-வடிவம்
5.67 கி/செ.மீ3 β-வடிவம்
உருகுநிலை
கொதிநிலை 1,425 °C (2,597 °F; 1,698 K) பதங்கமாகும்
370 ± 37 µகி/லி, 20.8°செல்சியசு மற்றும் 22.9°செல்சியசு இடையில்
கரைதிறன் அமிலத்தில் கரையும்
-69.4•10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.087, α-வடிவம்
2.35, β-வடிவம்
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம் (α)<570 °செல்சியசு
செஞ்சாய்சதுரம் (β) >570 °செ
ஒருங்கிணைவு
வடிவியல்
கூர்நுனி கோபுரம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) சுழி
தீங்குகள்
GHS pictograms The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[1]
GHS signal word எச்சரிக்கை[1]
H351[1]
P281[1]
Lethal dose or concentration (LD, LC):
7000 மி.கி /கி.கி, வாய்வழி (எலி)
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 0.5 மி.கி/மீ3 (as Sb)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.5 மி.கி /மீ3 (Sb ஆக)[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஆண்டிமனி டிரைசல்பைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பிசுமத் டிரையாக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஆண்டிமணி(III) ஆக்சைடு (Antimony(III) oxide) என்பது Sb2O3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஆண்டிமணியின் மிக முக்கியமான வணிகமுறை சேர்மம் ஆகும். இயற்கையில் வாலண்டினைட் மற்றும் செனார்மோன்டைட் என்ற கனிமங்களாகக் காணப்படுகிறது[3]. பெரும்பாலான பல்பகுதி ஆக்சைடுகளைப் போலவே Sb2O3 சேர்மமும் நீராற்பகுப்பின் போது நீரிய கரைசல்களில் கரைகிறது.

உற்பத்தி[தொகு]

2002 ஆம் ஆண்டில் 112,600 டன்களாக இருந்த ஆண்டிமனி(III) ஆக்சைடின் உலகளாவிய உற்பத்தி 2012 ஆம் ஆண்டில் 130,000 டன்களாக அதிகரித்தது. அமெரிக்கா, மெக்சிகோ, சப்பான், ஐரோப்பா, தென்னாப்பிரிக்கா நாடுகளைத் தொடர்ந்து சீனா மிகப்பெரிய உற்பத்தியை செய்கிறது, பிற நாடுகள் அனைத்தின் உற்பத்தியளவு 2% ஆகும்[4].

தயாரிப்பு[தொகு]

2010 ஆம் ஆண்டு நிலவரப்படி ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகளில் நான்கு தளங்களில் ஆண்டிமனி(III) ஆக்சைடு தயாரிக்கப்பட்டது. இதற்காக இரண்டு வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டன. பண்படாத ஆண்டிமனி(III) ஆக்சைடை மீள் ஆவியாக்கம் செய்தல் அல்லது ஆண்டிமனி உலோகத்தை ஆக்சிசனேற்றம் செய்து தயாரித்தல் என்பன அவ்விரண்டு வழிமுறைகளாகும். ஐரோப்பாவில் இரண்டாவது தயாரிப்பு முறையே ஆதிக்கம் செலுத்தியது. மூலப்பொருட்களிலிருந்து கச்சா ஆண்டிமனி(III) ஆக்சைடு அல்லது உலோக ஆண்டிமனி உற்பத்திக்கான பல செயல்முறைகள் உள்ளன. செயல்முறையின் தேர்வானது தாது மற்றும் பிற பகுதிக்கூறு காரணிகளின் கலவையைப் பொறுத்து அமைகிறது. சுரங்கத்தை தோண்டி எடுத்தல், நொறுக்குதல் மற்றும் தாதுவை அரைத்தல் போன்றவை வழக்கமான படிநிலைகளாகும். சில சமயங்களில் நுரை மிதப்பு முறையைத் தொடர்ந்து வெப்பச் செயல்முறைகளான உருக்குவது அல்லது வறுத்தெடுப்பது போன்ற செயல்களால் தாது பிரித்தெடுக்கப்படுகிறது. ஒரு சில சந்தர்ப்பங்களில் தாதுவுடன் விலைமதிப்பற்ற உலோகங்கள் நிறைந்திருக்கும் போது நீரியல் செயல்முறைகள் மூலம் தாது பிரிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் எதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நடைபெறுவதில்லை. ஆனால் தாதுவானது சுரங்கங்கள் தோண்டப்படும் இடத்திற்கு நெருக்கமாகக் கிடைக்கின்றன.

கச்சா ஆண்டிமனி(III) ஆக்சைடை மீள்-ஆவியாக்கல்[தொகு]

படி 1)கச்சா சிடிப்னைட் சுமார் 500 முதல் 1,000 பாகை செல்சியசு வெப்பம் வரையில் சூடுபடுத்த இயலும் உலைகளைப் பயன்படுத்தி கச்சா ஆண்டிமனி(III) ஆக்சைடாக ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது. இவ்வினை பின்வருமாறு:

2 Sb2S3 + 9 O2 → 2 Sb2O3 + 6 SO2

படி 2) கச்சா ஆண்டிமனி(III) ஆக்சைடு பதங்கமாதல் முறையில் தூய்மைப்படுத்தப்படுகிறது.

ஆண்டிமனி உலோகத்தை ஆக்சிசனேற்றம் செய்தல்[தொகு]

உலோக ஆண்டிமனியை உலைகளில் வைத்து ஆக்சிசனேற்றம் செய்து ஆண்டிமனி(III) ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இவ்வினையானது வெப்ப உமிழ் வினையாகும். பதங்கமாதல் வினை வழியாக உருவாகும் ஆண்டிமனி(III) ஆக்சைடு வடிகட்டப்படுகிறது. செலுத்தப்படும் வாயுவின் தன்மை மற்றும் உலையின் நிபந்தனைகளுக்கு ஏற்ப புதிய துகள்களின் அளவு கட்டுபடுத்தப்பட்டு உருவாகிறது. வினை பின்வருமாறு நிகழ்கிறது:

4 Sb + 3 O2 → 2 Sb2O3

பண்புகள்[தொகு]

ஆண்டிமனி(III) ஆக்சைடு ஓர் ஈரியல்பு ஆக்சைடாகும். நீர்த்த சோடியம் ஐதராக்சைடு கரைசலில் கரைந்து மெட்டா ஆண்டிமோனைட்டைக் (NaSbO2) கொடுக்கிறது. இதை முந்நீரேற்றாக தனித்துப் பிரிக்க இயலும். அடர் கனிம அமிலங்களிலும் ஆண்டிமனி(III) ஆக்சைடு கரைந்து தொடர்புடைய உப்புகளைக் கொடுக்கிறது. அவ்வுப்புகள் நீர் சேர்க்கப்பட்டு மேலும் நீர்த்த கரைசலாக மாறும்போது நீராற்பகுக்கப்படுகிறது[5]. நைட்ரிக் அமிலத்துடன் ஆண்டிமனி டிரையாக்சைடு ஆண்டிமனி(V) ஆக்சைடாக ஆக்சிசனேற்றப்படுகிறது[6].

கார்பன்\கார்பனுடன் சேர்த்து ஆண்டிமனி டிரையாக்சைடை சூடுபடுத்தினால் அது ஆண்டிமனி உலோகமாக ஒடுக்கப்படுகிறது. சோடியம் போரோ ஐதரைடு அல்லது இலித்தியம் அலுமினியம் ஐதரைடு போன்ற பிற ஒடுக்கும் முகவர்களுடன் நிலைப்புத் தன்மையற்ற மீநச்சான சிடிபைன் வாயு உற்பத்தியாகிறது[7]. ஆண்டிமனி டிரையாக்சைடை பொட்டாசியம் பைடார்ட்டரேட்டுடன் சேர்த்து சூடுபடுத்தினால் அணைவுச் சேர்மம் பொட்டாசியம் ஆண்டிமனி டார்ட்டரேட்டு )KSb(OH)2•C4H2O6) உருவாகிறது[6].

கட்டமைப்பு[தொகு]

Sb2O3 மாதிரியின் வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு இதன் கட்டமைப்பு அமைகிறது. 1560 பாகை செல்சியசுக்கு மேற்பட்ட உயர் வெப்பநிலையில் இருந்தால் அது ஈருருவக் கட்டமைப்பு வாயுவாக (Sb4O6 ) உள்ளது[8]. தொடர்புடைய பாசுபரசு(III) ஆக்சைடு போல இருவளைய கூடு மூலக்கூறுகள் Sb4O6 இல் உள்ளன[9]. திண்மநிலையில் இதன் கூடு கட்டமைப்பு நிலைத்து கனசதுர ஒழுங்கைப்பில் படிகமாகிறது. மேலும், Sb-O பிணைப்பு இடைவெளி 197.7 பைக்கோமீட்டர்களாகவும் O-Sb-O பிணைப்புக் கோணம் 95.6°.ஆகவும் அமைந்துள்ளன[10]. இவ்வடிவம் இயற்கையிலேயே செனார்மோண்டைட்டு கனிமத்தில் காணப்படுகிறது[9]. 606 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு மேல் நிலைப்புத்தன்மை மிகுந்த நேர்ச்சாய்சதுர கட்டமைப்பு ஆண்டிமனி மையங்களுக்கிடையில் ஆக்சிசன் பாலங்களால் இணைக்கப்பட்ட -Sb-O-Sb-O- இணைகளால் ஆக்கப்படுகிறது. வேலண்டினைட்டு கனிமத்தில் இயற்கையில் இவ்வடிவம் காணப்படுகிறது[9].

Sb4O6-molecule-from-senarmontite-xtal-2004-3D-balls-B.png
Antimony(III)-oxide-senarmontite-xtal-2004-3D-balls.png
Antimony(III)-oxide-valentinite-xtal-2004-3D-balls.png
Sb4O6
செனார்மோண்டைட்டு
வேலண்டினைட்டு

பயன்கள்[தொகு]

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆண்டிமனி(III) ஆக்சைடு கனிமத்தின் ஆண்டு நுகர்வு முறையே 10,000 மற்றும் 25,000 டன்கள் ஆகும். ஆலசனேற்றப்பட்ட பொருட்களுடன் இணைந்து தீச்சுடர் தடுப்பியாக பயன்படுத்தப்படுகிறது. பலபடிகளில் தீச்சுடர்-தடுப்பு நடவடிக்கைக்கு ஆலைடுகள் மற்றும் ஆண்டிமனி ஆகியவற்றின் கலவை முக்கியமானது ஆகும். எளிதில் தீப்பற்றாத நெகிழிப் பொருட்கள் தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது. மின் கருவிகள், நெசவுத் தொழில், தோல் மற்றும் மேற்பூச்சுகளில் இதன் பயன்பாடுகள் காணப்படுகின்றன[11].

பிற பயன்பாடுகள்:

ஆண்டிமனி(III) ஆக்சைடு கண்ணாடி, பீங்கான்கள் மற்றும் பளபளப்பான மிளிரிகளின் ஒளிபுகா முகவராகப் பயன்படுகிறது.

 • சில சிறப்பு நிறமிகள் ஆண்டிமனியைக் கொண்டுள்ளன.
 • பாலியெத்திலீன் டெரிப்தாலேட்டு தயாரித்தல், இரப்பர் தயாரித்தல் போன்ற செயல்முறைகளில் ஒரு வினையூக்கியாக ஆண்டிமனி டிரையாக்சைடு பயன்படுகிறது.

முன் பாதுகாப்பு[தொகு]

ஆண்டிமனி(III) ஆக்சைடு மனிதர்களுக்கு புற்றுநோய் உண்டாக்கும் திறனை கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது[11]. பெரும்பாலான ஆண்டிமனி சேர்மங்களைப் போல இதன் டி.எல்.வி எனப்படும் தாங்கும் திறன் 0.5 மி.கி / மீ 3 ஆகும். ஆண்டிமனி (III) ஆக்சைடின் வேறு எந்த மனித உடல்நலக் கேடுகளும் அடையாளம் காணப்படவில்லை. அன்றாட வாழ்க்கையிலும் ஆண்டிமனி டிரையாக்சைடு உற்பத்தி மற்றும் பயன்பாட்டிலிருந்து மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்த ஆபத்தும் கண்டறியப்படவில்லை[12]
.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 Record of Antimony trioxide in the GESTIS Substance Database from the Institute for Occupational Safety and Health (IFA), accessed on 23 August 2017
 2. 2.0 2.1 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0036". National Institute for Occupational Safety and Health (NIOSH).
 3. Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. ISBN 0-7506-3365-4.
 4. "Archived copy" (PDF). 2014-01-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-01-06 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 5. Housecroft, C. E.; Sharpe, A. G. (2008). "Chapter 15: The group 15 elements". Inorganic Chemistry (3rd ). Pearson. பக். 481. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-13-175553-6. 
 6. 6.0 6.1 Patnaik, P. (2002). Handbook of Inorganic Chemicals. McGraw-Hill. பக். 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-049439-8. 
 7. Bellama, J. M.; MacDiarmid, A. G. (1968). "Synthesis of the Hydrides of Germanium, Phosphorus, Arsenic, and Antimony by the Solid-Phase Reaction of the Corresponding Oxide with Lithium Aluminum Hydride". Inorganic Chemistry 7 (10): 2070–2072. doi:10.1021/ic50068a024. 
 8. Wiberg, E.; Holleman, A. F. (2001). Inorganic Chemistry. Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-352651-5. 
 9. 9.0 9.1 9.2 Wells, A. F. (1984). Structural Inorganic Chemistry. Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-855370-6. https://archive.org/details/structuralinorga0000well_m8i1. 
 10. Svensson, C. (1975). "Refinement of the crystal structure of cubic antimony(III) oxide, Sb2O3". Acta Crystallographica B 31 (8): 2016–2018. doi:10.1107/S0567740875006759. 
 11. 11.0 11.1 Grund, S. C.; Hanusch, K.; Breunig, H. J.; Wolf, H. U. (2005), "Antimony and Antimony Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a03_055.pub2
 12. Newton, P. E.; Schroeder, R. E.; Zwick, L.; Serex, T. (2004). "Inhalation Developmental Toxicity Studies In Rats With Antimony(III) oxide (Sb2O3)". Toxicologist 78 (1-S): 38. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிமனி(III)_ஆக்சைடு&oldid=3641367" இருந்து மீள்விக்கப்பட்டது