ஆண்டிமனி சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டிமனி
Antimony sulfate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆண்டிமனி(3+) டிரைசல்பேட்டு
வேறு பெயர்கள்
ஆண்டிமனி(III) சல்பேட்டு
ஆண்டிமனசு சல்பேட்டு
ஆண்டிமனி முச்சல்பேட்டு
ஈராண்டிமனி முச்சல்பேட்டு
இனங்காட்டிகள்
7446-32-4 N[yes]
ChemSpider 22443 Y
EC number 231-207-6
InChI
  • InChI=1S/3H2O4S.2Sb/c3*1-5(2,3)4;;/h3*(H2,1,2,3,4);;/q;;;2*+3/p-6 Y
    Key: MVMLTMBYNXHXFI-UHFFFAOYSA-H Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24010
  • [SbH3+3].[SbH3+3].[O-]S(=O)(=O)[O-].[O-]S([O-])(=O)=O.[O-]S([O-])(=O)=O
பண்புகள்
Sb2(SO4)3
வாய்ப்பாட்டு எடை 531.7078 கி/மோல்
அடர்த்தி 3.6246 கி/செ.மீ3[1]
கரையும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 0.5 மி.கி/மீ3 (Sb ஆக)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.5 மி.கி/மீ3 (Sb ஆக)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N

ஆண்டிமனி சல்பேட்டு (Antimony sulfate) என்பது Sb2(SO4)3, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆண்டிமனி அல்லது அதன் சேர்மங்கள் சூடான கந்தக அமிலத்துடன் சேர்ந்து வினைபுரியும் போது நீருறிஞ்சும் சேர்மமான ஆண்டிமனி சல்பேட்டு உருவாகிறது. குறைகடத்திகளுடன் கலக்கவும் பட்டாசுத் தொழிலில் வெடிபொருள்கள் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது[1]

அமைப்பு[தொகு]

முடிவில்லாத நான்முக SO4 ஏணிகள் மற்றும் மூலைகளில் பகிர்ந்து கொண்டுள்ள SbO3 பட்டைக்கூம்புகள் ஆகியன ஆண்டிமனி சல்பேட்டில் உள்ளன. பெரும்பாலும் இச்சேர்மம் கலப்பு ஆக்சைடு (Sb2O3.3SO3) என்று விவரிக்கப்படுகிறது.[3]

வேதிப்பண்புகள்[தொகு]

ஆண்டிமனி மற்றும் கந்தக அமிலம் சேர்ந்து உருவாவதால் சிலசமயங்களில் ஆண்டிமனி சல்பேட்டு ஓர் உப்பு என்றும் அழைக்கப்படுகிறது. ஆண்டிமனி சல்பேட்டானது ஆக்சிசனேற்றும் அமிலமான நைட்ரிக் அமிலத்தில் கரையும் போது ஓர் நைட்ரேட்டு உருவாவதில்லை, ஆனால் ஆண்டிமனி ஆக்சைடுகளின் கலவை உருவாகிறது என்பது கவனிக்கத்தக்கது ஆகும். இப்பண்பினால் இது பிசுமத்தில் இருந்து மாறுபடுகிறது. பிசுமத் இவ்விரு அமிலங்களிலும் கரைந்து உப்புகளை உருவாக்குகிறது[4]. ஆண்டிமனி சல்பேட்டு நீருறிஞ்சும் தன்மையும் அமிலங்களில் கரையக் கூடியதாகவும் உள்ளது. ஆண்டிமனி, ஆண்டிமனி மூவாக்சைடு, ஆண்டிமனி முச்சல்பைடு அல்லது ஆண்டிமனி ஆக்சிகுளோரைடு ஆகியவற்றை சூடான அடர் கந்தக அமிலத்தில் கரைத்து இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது[1][4]

2 Sb (s) + 6 H2SO4 → Sb2(SO4)3 + 3SO2 + 6 H2O.

பயன்கள்[தொகு]

கரைதல் பண்பின் காரணமாக இச்சேர்மம் குறைகடத்திகளில்[5]கலப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. மின்னாற்பகுப்பில் பயன்படும் எதிர்மின் வாய்களின் மீது மேல் பூச்சாக பூசவும் , பட்டாசுத் தொழிலில் வெடிபொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.[1]

பாதுகாப்பு[தொகு]

தோல் மற்றும் சளிச்சவ்வுகளின் மீது ஆண்டிமனி சல்பேட்டு படநேர்ந்தால் எரிச்சல் ஏற்படும்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Herbst, Karl Albert et al. (1985) Antimony and antimony compounds in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 5th ed., vol. A3, p. 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-20103-3.
  2. 2.0 2.1 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0036". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6
  4. 4.0 4.1 Nicholas C. Norman. Chemistry of arsenic, antimony, and bismuth. Springer. pp. 193–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7514-0389-3.
  5. Method of forming phase change layer, method of manufacturing a storage node using the same, and method of manufacturing phase change memory device using the same – Samsung Electronics Co., Ltd. Freepatentsonline.com (2007-01-02). Retrieved on 2011-12-23.
  6. Antimony(III) Sulfate Material Safety Data Sheet பரணிடப்பட்டது 2012-04-26 at the வந்தவழி இயந்திரம். Prochemonline.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிமனி_சல்பேட்டு&oldid=3353091" இலிருந்து மீள்விக்கப்பட்டது