உள்ளடக்கத்துக்குச் செல்

தோரியம்(IV) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரியம்(IV) புரோமைடு
இனங்காட்டிகள்
13453-49-1 நீரிலி Y
20333-47-5 எண்நீரேற்று Y
ChemSpider 75321
EC number 236-628-9
InChI
  • InChI=1S/4BrH.Th/h4*1H;/q;;;;+4/p-4
    Key: OMDXFCRSKHYDTM-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83483
  • Br[Th](Br)(Br)Br
பண்புகள்
ThBr4
வாய்ப்பாட்டு எடை 551.65
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 5.72 கி·செ.மீ−3 (α)
5.76 கி·செ.மீ−3 (β)
உருகுநிலை 678±5 °செல்சிட்யசு[1]
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.


தோரியம்(IV) புரோமைடு (Thorium(IV) bromide) என்பது ThBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

தோரியம் டை ஆக்சைடு, புரோமின் மற்றும் கார்பன் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து 800~900 ° செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதான் மூலம் தோரியம்(IV) புரோமைடு தயாரிக்கப்படுகிறது. இந்த தயாரிப்பு முறையில் தோரியம்(IV) புரோமைடின் ஆல்பா மற்றும் பீட்டா வடிவங்களின் கலவையை உருவாக்குகிறது. இக்கலவையை 330~375 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீண்ட நேரம் சூடாக்குவதன் மூலம் தூய α-வடிவம் உருவாகிறது. விளைபொருளை 470 ° பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கி, பின்னர் பனி நீரில் விரைவாக குளிர்விப்பதன் மூலம் தூய β வடிவம் பெறப்படுகிறது.[2]

ThO2 + 2 C + 2 Br2 ⟶ ThBr4 + 2 CO

தோரியம் மற்றும் புரோமின் தனிமங்கள் நேரடியாக வினையில் ஈடுபட்டாலும் தோரியம் (IV) புரோமைடு உற்பத்தி செய்யப்படுகிறது. தோரியம் ஐதராக்சைடு ஐதரோபுரோமிக் அமிலத்துடன் வினைபுரிந்து வினைக் கரைசலில் இருந்து நீரேற்றுகளை படிகமாக்குகிறது.[3]

பண்புகள்[தொகு]

தோரியம்(IV) புரோமைடு குறைந்த-வெப்பநிலையில் α-வகையிலும் உயர்-வெப்பநிலையில் β-வகையிலும் காணப்படுகிறது. இவை இரண்டும் வெண்மையான நிறத்தில் நீருறிஞ்சும் திடப்பொருள்களாகும். நீர், எத்தனால் மற்றும் எத்தில் அசிடேட்டு ஆகியவற்றில் எளிதில் கரைகின்றன. இது நிலையான நிலைமைகளின் கீழ் புளோரின் வாயுவுடனும் வெப்பமடையும் போது குளோரின் அல்லது ஆக்சிசன் வாயுக்களுடனும் வினைபுரிகிறது. தோரியம் புரோமைடின் பீட்டா வடிவம் அறை வெப்பநிலையில் மாற்றியமைக்கக்கூடியதாக உள்ளது. இது 10 முதல் 12 வாரங்களுக்குள் ஆல்பா வடிவத்திற்கு மாறுகிறது. ஆல்பாவிலிருந்து பீட்டாவாக மாறுவது சுமார் 420 ° செல்சியசு வெப்பநிலையில் நிகழ்கிறது. α-வகை தோரியம்(IV) புரோமைடு செஞ்சாய்சதுர வடிவ படிகமாகும். அதே சமயம் β-வகை தோரியம்(IV) புரோமைடு I41/amd என்ற இடக்குழுவுடன் நாற்கோணக வடிவ படிகமாக உள்ளது. இதன் சில நீரேற்றுகளும் அறியப்படுகின்றன. மேலும் இந்த நீரேற்றுகள் சூடாக்கும்போது தோரியம் ஆக்சிபுரோமைடை கொடுக்கின்றன. .[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mason, J.T.; Jha, M.C.; Bailey, D.M.; Chiotti, P. (April 1974). "Crystal structures of ThBr4 polymorphs" (in en). Journal of the Less Common Metals 35 (2): 331–338. doi:10.1016/0022-5088(74)90245-8. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022508874902458. பார்த்த நாள்: 2020-11-03. 
  2. Georg Brauer, unter Mitarbeit von Marianne Baudler u. a. (Hrsg.): Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I. Ferdinand Enke, Stuttgart 1975, ISBN 3-432-02328-6, S. 1136.
  3. 3.0 3.1 Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (2010-10-21). The Chemistry of the Actinide and Transactinide Elements (Set Vol.1-6): Volumes 1-6 (in ஆங்கிலம்). Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-0211-0.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரியம்(IV)_புரோமைடு&oldid=3933589" இலிருந்து மீள்விக்கப்பட்டது