தோரியம் ஆக்சலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரியம் ஆக்சலேட்டு
இனங்காட்டிகள்
2040-52-0
EC number 218-038-3
பப்கெம் 74880
பண்புகள்
C4O8Th
வாய்ப்பாட்டு எடை 408.07 கி/மோல்
444.114 கி/மோல் (இருநீரேற்று)
அடர்த்தி 4.637 கி/செ.மீ3 (நீரிலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தோரியம் ஆக்சலேட்டு (Thorium oxalate) என்பது C4O8Th என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வலிமை குறைந்த அமிலத்திலுள்ள தோரியம் நைட்ரேட்டுக் கரைசலுடன் ஆக்சாலிக் அமிலக் கரைசல் சேர்ப்பதன் மூலமாக தோரியம் ஆக்சலேட்டைத் தயாரிக்க முடியும்.

அறை வெப்பநிலையில், 0.5 மோலார் தோரியம் நைட்ரேட்டுக் கரைசலுடன் 0.5 மோலார் ஆக்சாலிக் அமிலக் கரைசல் சேர்க்கும் போது தோரியம் ஆக்சலேட்டு இருநீரேற்று ( Th(C2O4)2.2H2O ) உருவாகிறது. இவ்வாறே 2 மோலார் நைட்ரிக் அமிலக் கரைசலுடன் வினைபுரிந்து வீழ்படிவாகும் போது தோரியம் ஆக்சலேட்டு அறுநீரேற்று உருவாகிறது. தோரியம் ஆக்சலேட்டை 500 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தும்போது தோரியம் ஆக்சைடாக மாறுகிறது[1]. தோரியம் ஆக்சலேட்டின் கரைதிறன் பெருக்க மாறிலி மதிப்பு 5.01 X 10−25 மற்றும் நீரிலி வடிவ தோரியம் ஆக்சலேட்டின் அடர்த்தி 4.637 கி/செ.மீ3.ஆகும்[2] Density of anhydrous thorium oxalate is 4.637 g/cm3.

மேற்கோள்கள்[தொகு]

  1. Enver Oktay, Ahmet Yayli (2001) Physical properties of thorium oxalate powders and their influence on the thermal decomposition Journal of Nuclear Materials Volume 288, Issue 1, January 2001, Pages 76–82
  2. Taishi KOBAYASHI, Takayuki SASAKI, Ikuji TAKAGI & Hirotake MORIYAMA (2009) Solubility of Thorium(IV) in the Presence of Oxalic and Malonic Acids Journal of Nuclear Science and Technology, Vol. 46, No. 11, p. 1085–1090

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரியம்_ஆக்சலேட்டு&oldid=3299875" இலிருந்து மீள்விக்கப்பட்டது