தோரியம் இருகார்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரியம் இருகார்பைடு
இனங்காட்டிகள்
12071-31-7 Y
EC number 235-131-4
InChI
  • InChI=1S/2C.Th
    Key: DQIWLHDGOYYZII-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Th].[C].[C]
பண்புகள்
ThC2
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தோரியம் இருசிலிசைடு
ஏனைய நேர் மின்அயனிகள் யுரேனியம் கார்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தோரியம் இருகார்பைடு (Thorium dicarbide) என்பது ThC2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

2000-2500 °செல்சியசு வெப்பநிலையில் தோரியமும் கிராபைட்டும் சேர்ந்து வினைபுரிவதால் தோரியம் இருகார்பைடு உருவாகிறது.[1]

Th + 2C -> ThC2

பண்புகள்[தொகு]

இயற்பியல் பண்புகள்[தொகு]

தோரியம் இருகார்பைடு மஞ்சள் நிறத்தில் படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. இது தண்ணீரில் சிதைவடைகிறது.[2] 2773 °செல்சியசு வெப்பநிலையில் தீப்பற்றி எரிகிறது. 9 கெல்வின் வெப்பநிலையில் மீகடத்தியாகச் செயல்படுகிறது.[3] அறை வெப்பநிலையில் C2/c (விண்வெளி குழு எண். 15) என்ற இடக்குழுவுடன் ஒற்றைசரிவச்சு படிக அமைப்பைக் கொண்டுள்ளது. 1430 பாகை செல்சியசு மற்றும் 1480 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது ஒரு நாற்கோண படிகமாகவும் அதற்கு மேலான வெப்பநிலையில் கனசதுரப் படிக அமைப்பிலும் உள்ளது.[4]

வேதிப் பண்புகள்[தொகு]

தோரியம் இருகார்பைடு காற்றில் விரைவாக நீராற்பகுப்பிற்கு உட்பட்டு தோரியம் டையாக்சைடு, ஐதரசன் மற்றும் ஐதரோகார்பன்களை உருவாக்குகிறது. [5] இதன் வினை வீதம் தொடர்புடைய யுரேனியம் டைகார்பைடை விட 10 மடங்கு அதிகமாகும்.[6] கந்தக அமிலம் போன்ற அமிலங்களுடன் வினைபுரியும். இவ்வினையில் தோரியம்(IV) சல்பேட்டு உருவாகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Elton B. Hunt, R. E. Rundle (Oct 1951). "The Structure of Thorium Dicarbide by X-Ray and Neutron Diffraction 1" (in en). Journal of the American Chemical Society 73 (10): 4777–4781. doi:10.1021/ja01154a090. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01154a090. பார்த்த நாள்: 2020-11-03. 
  2. Lide, David R. (2006-06-26) (in en). 1998 Freshman Achievement Award. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-0594-8. https://books.google.com/books?id=lFjg0L-uOxoC&newbks=0. 
  3. (in de) RÖMPP Lexikon Chemie, 10. Auflage, 1996-1999: Band 6: T - Z. Georg Thieme Verlag. 2014-07-16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-13-200071-1. https://books.google.com/books?id=4T3OAwAAQBAJ&newbks=0. 
  4. Bowman, A. L.; Krikorian, N. H.; Arnold, G. P.; Wallace, T. C.; Nereson, N. G. (1968-08-15). "The crystal structures of ThC2" (in en). Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 24 (8): 1121–1123. doi:10.1107/S056774086800378X. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. https://scripts.iucr.org/cgi-bin/paper?S056774086800378X. 
  5. Perry, Dale L. (2016-04-19) (in en). Handbook of Inorganic Compounds. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4398-1462-8. https://books.google.com/books?id=SFD30BvPBhoC&newbks=0. 
  6. G. B. Engle, W. V. Goeddel, C. S. Luby (Mar 1962). "Reaction-Rate Studies of Thorium-Uranium Dicarbides in Moist Air" (in en). Journal of the American Ceramic Society 45 (3): 136–141. doi:10.1111/j.1151-2916.1962.tb11102.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7820. http://doi.wiley.com/10.1111/j.1151-2916.1962.tb11102.x. பார்த்த நாள்: 2020-11-03. 
  7. Yasuichi Sasaki, Fujio Ichikawa, Hisashi Imai, Shinobu Uruno (Jul 1962). "Acid Leaching of Thorium Carbide" (in en). Nature 195 (4838): 267–268. doi:10.1038/195267a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. Bibcode: 1962Natur.195..267S. http://www.nature.com/articles/195267a0. பார்த்த நாள்: 2020-11-03. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரியம்_இருகார்பைடு&oldid=3923771" இலிருந்து மீள்விக்கப்பட்டது