உள்ளடக்கத்துக்குச் செல்

தோரியம் எழுபாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரியம் எழுபாசுபைடு
Thorium heptaphosphide
இனங்காட்டிகள்
102499-33-2 Y
பண்புகள்
P7Th
வாய்ப்பாட்டு எடை 448.85 g·mol−1
தோற்றம் கருப்பு நிற கம்பி வடிவ படிகங்கள்
அடர்த்தி 4.93 கி/செ.மீ3[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தோரியம் எழுபாசுபைடு (Thorium heptaphosphide) என்பது ThP7என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தோரியம் உலோகமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[2] நான்கிணைய தோரியத்தின் பாசுபரசு மிகுந்துள்ள சேர்மமாக தோரியம் எழுபாசுபைடு கருதப்படுகிறது.[3]

தயாரிப்பு

[தொகு]

830 கெல்வின் வெப்பநிலையில் தோரியம் மற்றும் பாசுபரசு தனிமங்களை அயோடினுடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் தோரியம் எழுபாசுபைடு உருவாகும்.[3][4]

பண்புகள்

[தொகு]

தோரியம் எழுபாசுபைடு செஞ்சாய்சதுரப் படிக அமைப்பில் கருப்பு நிறத்தில் கம்பி வடிவ படிகங்களை உருவாக்குகிறது.[1][4] வெற்றிடத்தில் 650 பாகை செல்சியசு வெப்பநிலையில் Th2P11 சேர்மமாக சிதைவடைகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "mp-28410: ThP7 (Orthorhombic, P2_12_12_1, 19)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 17 March 2024.
  2. Jahrbuch ... der Max-Planck-Gesellschaft zur Förderung der Wissenschaften (in ஜெர்மன்). Max-Planck-Gesellschaft zur Förderung der Wissenschaften. 1984. p. 599. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-525-85390-0. பார்க்கப்பட்ட நாள் 17 March 2024.
  3. 3.0 3.1 3.2 Von Schnering, Hans-Georg; Vu, Dong (1 February 1986). "Thorium heptaphosphide ThP7". Journal of the Less Common Metals 116 (1): 259–270. doi:10.1016/0022-5088(86)90234-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5088. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022508886902341. பார்த்த நாள்: 17 March 2024. 
  4. 4.0 4.1 Bickel, Michael; Wedemeyer, Horst (17 April 2013). Th Thorium Supplement Volume C 8: Compounds with Si, P, As, Sb, Bi, and Ge (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-06348-4. பார்க்கப்பட்ட நாள் 17 March 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரியம்_எழுபாசுபைடு&oldid=3921537" இலிருந்து மீள்விக்கப்பட்டது