உள்ளடக்கத்துக்குச் செல்

பாசிர் சாலாக்

ஆள்கூறுகள்: 4°8′1.96″N 100°53′22.33″E / 4.1338778°N 100.8895361°E / 4.1338778; 100.8895361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசிர் சாலாக்
Pasir Salak
பேராக்
பாசிர் சாலாக் வரலாற்று வளாகம்
பாசிர் சாலாக் வரலாற்று வளாகம்
Map
பாசிர் சாலாக் is located in மலேசியா
பாசிர் சாலாக்
      பாசிர் சாலாக்
ஆள்கூறுகள்: 4°8′1.96″N 100°53′22.33″E / 4.1338778°N 100.8895361°E / 4.1338778; 100.8895361
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
மாவட்டம்பேராக் தெங்கா
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
36800
தொலைபேசி எண்+60-5-631000
போக்குவரத்துப் பதிவெண்கள்P

பாசிர் சாலாக் (ஆங்கிலம்: Pasir Salak; மலாய்: Pasir Salak; சீனம்: 巴西沙叻; ஜாவி: ڤاسير سالق) என்பது மலேசியா, பேராக் மாநிலம், பேராக் தெங்கா மாவட்டத்தில் (Perak Tengah District) அமைந்துள்ள ஒரு கிராமப்பகுதி ஆகும். இந்தக் கிராமப்புற நகரம் ஒரு வரலாற்று வளாகமாகவும் அறியப்படுகிறது.

இந்த நகரம் பேராக் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு முக்கிம் ஆகும். பேராக் ஆற்றின் மறுகரையில் கம்போங் காஜா நகரம் உள்ளது. பாசீர் சாலாக்கின் தென்பகுதியில் செபராங் பேராக் எனும் அரிசிக் களஞ்சியம் உள்ளது.

ஜேம்சு பர்ச்[தொகு]

பேராக், பாசிர் சாலாக் (Pasir Salak) எனும் இடத்தில் பிரித்தானிய ஆணையர் ஜேம்ஸ் பர்ச் (James Wheeler Woodford Birch); மகாராஜா லேலா (Maharaja Lela) என்பவரால் 1875 நவம்பர் மாதம் 2-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். ஜேம்ஸ் பர்ச் பேராக் மாநிலத்தின் முதல் பிரித்தானிய முதல்வராக அனுப்பப்பட்டவர். அதன் பின்னர் பேராக் போர் நடந்தது.[1]

உள்ளூர் மலாய்த் தலைவர்கள் மகாராஜா லேலா மற்றும் செபுண்டம் ஆகியோரின் சதியின் விளைவால் அந்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பிரித்தானிய இராணுவத் தலையீட்டின் மூலம் பிரச்சினை தீர்வு காணப்பட்டது. இந்த நிகழ்வு மலாயா மக்களிடையே பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.[2]

குறிப்பிடத்தக்க இடங்கள்[தொகு]

  • ஜேம்சு பர்ச் நினைவுச்சின்னம்
  • பாசிர் சாலாக் மசூதி
  • கூத்தாய் பாரம்பரிய வீடு
  • செபுண்டம் நினைவகம்
  • டத்தோ மகாராஜா லேலா நினைவிடம்
  • ஜேம்ஸ் பர்ச் கொலை நடந்த இடம்
  • படகு துறை
  • பாசிர் சாலாக் வரலாற்று சுரங்கப்பாதை
  • பேராக் மந்திரி பெசார் கலைக்கூடம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pasir Salak Historical Complex". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 2022-11-22.
  2. "Kompleks Sejarah Pasir Salak". பார்க்கப்பட்ட நாள் 12 January 2024.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசிர்_சாலாக்&oldid=4004715" இலிருந்து மீள்விக்கப்பட்டது