அதென் (பண்டைய நகரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அதென்
அதென் (பண்டைய நகரம்) is located in Egypt
அதென் (பண்டைய நகரம்)
Shown within Egypt
இருப்பிடம்அல்-உக்சுர், லக்சர் ஆளுநகரம், எகிப்து
பகுதிதெற்கு எகிப்து
ஆயத்தொலைகள்25°43′21″N 32°36′06″E / 25.72250°N 32.60167°E / 25.72250; 32.60167ஆள்கூறுகள்: 25°43′21″N 32°36′06″E / 25.72250°N 32.60167°E / 25.72250; 32.60167
வகைSettlement
பகுதிதீபை நகரம்
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 1386–1353
காலம்புது எகிப்து இராச்சியம்
Associated with
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்செப்டம்பர் 2020 முதல்
அகழாய்வாளர்சாகி அவாஸ்
அதிகாரபூர்வ பெயர்: பண்டைய தீபை நகரப் பகுதிகள்
வகைபண்பாட்டுக் களம்
அளவுகோல்i, iii, vi
வரையறுப்பு1979 (3வது அமர்வு)
சுட்டெண்87
மண்டலம்அரபுலகத்தின் உலகப் பாரம்பாரம்பரியக் களங்கள்[1]

அதென் (Aten), பண்டைய எகிப்தின் இழந்த தங்க நகரம் அழைப்பர். 3000 ஆண்டுகளுக்கு முந்தைய அதென் நகரத்தின் எச்சங்கள் தெற்கு எகிப்தின் பண்டைய தீபை நகரத்திற்கு அருகில், எகிப்திய தொல்லியல் அகழ்வாய்வாளர் சாகி அவாஸ் தலைமையில், செப்டம்பர் 2020 முதல் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் இப்பெரிய பண்டைய அதென் நகரம் வெளிக்கொணரப்பட்டது.[2][3] [4]

வரலாறு[தொகு]

3,400 ஆண்டுகளுக்கு முன்னர் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்சத்தின் 8-ஆம் பார்வோன் மூன்றாம் அமென்கோதேப் (ஆட்சிக் காலம்:கிமு 1386 - கிமு1349) பண்டைய தீபை நகரத்திற்கு அருகில் அதென் நகரத்தை நிறுவினார்.

மூன்றாம் அமென்கோதேப்பின் மகனும், 9-ஆம் பார்வோனுமான அக்கெனதென் (ஆட்சிக் காலம் கிமு:1351–1334), புது எகிப்திய இராச்சியத்தின் தலைநகரத்தை அமர்னா எனும் புதிய நகரத்திற்கு மாற்றினார். ஆனால் பார்வோன்கள் துட்டன்காமன், ஆய் மற்றும் ஹொரெம்ஹெப் ஆட்சிக் காலத்தில் பண்டைய அதென் நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

கண்டிபிடிப்பு[தொகு]

பார்வோன் துட்டன்காமனின் கல்லறைக் கோவில் அமைந்த இடத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட போது அதென் எனும் தொலைந்து போன தங்க நகரம் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட்டது. இது பற்றிய அறிக்கை 8 ஏப்ரல் 2021 அன்று வெளியிடப்பட்டது. பல தொல்லியல் அகழ்வாளர்கள் பண்டைய அதென் நகரம் இருக்கும் இடத்தை அகழாய்வில் கண்டு பிடிக்க முயற்சி தக்கசெய்தனர். ஆனால் அம்முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. ஹேரெம்ஹேப் மற்றும் ஆயி கோயில்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து துதன்கமுன் கோயிலும் இங்கு அமைந்திருக்க வேண்டும் என்ற கணிப்பில், ஏராளமான வெளிநாட்டுக் குழுக்கள் இந்தக் கோயிலை அகழ்வாராய்ச்சி செய்யும் பணியில் ஈடுபட்டன. ஆனால், அப்போதெல்லாம் இந்த நகரத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில், எகிப்து நாட்டைச் சேர்ந்த தொல்லியல் துறை நிபுணர் ஸாஹி ஹவாஸ், எகிப்தின் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, இந்த மிகப் பழமையான தங்க நகரத்தை (Lost golden city of Luxor) செப்டம்பர், 2020-இல் கண்டுபிடித்துள்ளார். [5][6][7]

மூன்றாம் அமென்கோதேப்பின் ஆட்சிக்காலத்தில் இந்த பண்டைய அதென் நகரம் கட்டப்பட்டது. இந்த நகரத்தை ஏதெனின் எழுச்சி (The Rise of Aten) என்றும் அறியப்படுகிறது. இந்த நகரத்தை தலைநகராகக் கொண்டு மூன்றாம் அமென்கோதேப் மற்றும் துட்டன்காமன் ஆகியோர் ஆண்டுள்ளனர்.

இழந்த தங்க நகரம் மட்டுமல்லாமல் அன்றாட தேவைகளை உள்ளடக்கிய பல்வேறு கட்டமைப்புகள், பார்வோனின் தலைநகரத்தை ஆதரிப்பதில் பங்களித்த கலை, தொழில்துறை உற்பத்தியுடன் தொடர்புடையவையும் கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன், தொழிலாளர்கள் வாழ்ந்த வீடுகளையும் தொல்லியல் குழு கண்டுபிடித்துள்ளது. மேலும், பேக்கரி, சமையலறை, உலோகம் மற்றும் கண்ணாடி உற்பத்தி தொடர்பான பொருட்கள், நிர்வாகத்துடன் தொடர்புடைய கட்டடங்கள், பாறைகளாலான கல்லறை உள்ளிட்டவைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

பண்டைய அதென் நகரத்தின் தொல்பொருட்கள்[தொகு]

பண்டைய அதேன் நகரத்தில் மக்கள் வசிக்கும் ஒரு பகுதி, நிர்வாகப் பகுதி, ரொட்டி சுடுமிடம் என அந்தக்கால நகர வாழ்க்கையின் அம்சங்கள் தென்பட்டுள்ளது. நகைகள், வண்ணம் பூசப்பட்ட மண்பாண்டங்கள், உருள்வண்டு பொறிக்கப்பட்ட தாயத்துகள், [[மூன்றாம் அமென்கோதேப் மன்னரின் இலச்சினையைக் கொண்ட செங்கற்கள் போன்றவை இந்த பண்டைய அதென் நகரத்தில் இருந்து கிடைத்துள்ளது.

அமைவிடம்[தொகு]

எகிப்தின் தலைநகர் கெய்ரோவிற்கு தெற்கே 500 கிலோ மீட்டர் தொலைவில் அல்-உக்சுர் நகரத்திற்கு அருகே பண்டைய அதென் எனும் தொன்மையான நகரம் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதென்_(பண்டைய_நகரம்)&oldid=3316003" இருந்து மீள்விக்கப்பட்டது