உள்ளடக்கத்துக்குச் செல்

கசுத்தாவ் உலூத்விக் எர்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கசுத்தாவ் உலூத்விக் எர்ட்சு (Gustav Ludwig Hertz) (இடாய்ச்சு: [ˈɡʊs.taf ˈluːt.vɪç hɛʁt͡s]  ( கேட்க); 22 சூலை 1887 – 30 அக்தோபர் 1975) ஒரு செருமானியச் செய்முறை இயற்பியலாளரும் வளிமங்களில் மீட்சியற்ற மின்னன் மோதல் ஆய்வுக்காக, இயற்பியல் நோபல் பரிசு பெற்றவரும் என்றிச் உர்டோப் எர்ட்சின் மருமகனும் ஆவார்.

1950க்குப் பிறகு ஹெர்ட்ஸ் மாஸ்கோவுக்கு குடிபெயர்ந்தார். 1951 ஆம் ஆண்டில் ஹெர்ட்ஸ் பார்விச்சுடன் இரண்டாம் வகுப்பு ஸ்ராலின் பரிசு பெற்றார்.[1] அந்த ஆண்டில் ஜேம்ஸ் ஃபிராங்க் மற்றும் ஹெர்ட்ஸ் ஆகியோருக்கு டாய்ச் பிசிக்கலிஷ் கெசெல்சாஃப்ட் இணைந்து மேக்ஸ் பிளாங்க் பதக்கம் வழங்கப்பட்டது. ஹெர்ட்ஸ் 1955 வரை சோவியத் யூனியனில் இருந்தார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

கசுத்தோவ் எர்ட்சு என்றிச் உருடால்ப் எர்ட்சின் மருமகனும் , மதில்டே கார்மென் எர்ட்சின் உறவினரும் ஆவார். 1919 ஆம் ஆண்டில் எர்ட்சு 1941 இல் இறந்த எலன் நீ தில்மன் என்பவரை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர் - கார்ல் கெல்முடகேர்ட்சு மற்றும் யோகான்னசு என்றிச் எர்ட்சு இருவரும் இயற்பியலாளர்களாக ஆனார்கள்.[3]

அவர் தனது 88வது வயதில் 1975 அக்டோபர் 30 அன்று கிழக்கு பெர்லினில் காலமானார்.

அறிவியல் சார்ந்த உறுப்பினர்

[தொகு]

இவர் பெர்லினில் உள்ள செருமானிய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகவும் , கோட்டிங்கன் அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகவும் , ஹங்கேரிய அறிவியல் கல்விக்கழகத்திலந்தகைமை உறுப்பினராகவும் , செக்கோசுலோவாக்கியா அறிவியல் கல்விக்கழகத்தில் உறுப்பினராகவும் , சோவியத் ஒன்றிய அறிவியல் கல்விக்கழகத்தில் வெளிநாட்டு உறுப்பினராகவும் இருந்தார்.[3]

வெளியீடுகள்

[தொகு]
  • Franck, J.; Hertz, G. (1914). "Über Zusammenstöße zwischen Elektronen und Molekülen des Quecksilberdampfes und die Ionisierungsspannung desselben". Verh. Dtsch. Phys. Ges. 16: 457–467. 
  • Gustav Hertz Über das ultrarote Adsorptionsspektrum der Kohlensäure in seiner Abhängigkeit von Druck und Partialdruck. (Dissertation). (Vieweg Braunschweig, 1911)
  • Gustav Hertz (editor) Lehrbuch der Kernphysik I-III (Teubner, 1961–1966)
  • Gustav Hertz (editor) Grundlagen und Arbeitsmethoden der Kernphysik (Akademie Verlag, 1957)
  • Gustav Hertz Gustav Hertz in der Entwicklung der modernen Physik (Akademie Verlag, 1967)

மேலும் காண்க

[தொகு]
  • மின்னன் விளிம்புவிலகல்
  • மின் ஒளிர்வு வெளியேற்றம்
  • பிராங்க் - எர்ட்சு செய்முறை
  • மின்மச் சாளரம்
  • வெற்றிடக் குழாய்
  • சிதறல்
  • உருசிய அல்சோசு

மேற்கோள்கள்

[தொகு]
  1. Oleynikov, 2000, pp 5, 10–13, 18, 21
  2. Mehra and Rechenberg, 2001, 197.
  3. 3.0 3.1 Hertz – Nobel Biography.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

வார்ப்புரு:1925 Nobel Prize winners