உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கல்(II) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கல்(II) புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(II) புரோமைடு
வேறு பெயர்கள்
நிக்கல் இருபுரோமைடு,
நிக்கல் புரோமைடு,
நிக்கலசு புரோமைடு
இனங்காட்டிகள்
13462-88-9 Y
பப்கெம் 278492
பண்புகள்
NiBr2
வாய்ப்பாட்டு எடை 218.53 கி/மோல்
தோற்றம் மஞ்சள் கலந்த பழுப்பு நிற படிகங்கள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 5.098 கி/செ.மீ3[1]
உருகுநிலை 963 °C (1,765 °F; 1,236 K) பதங்கமாகும்
113 கி/100மி.லி (0 °செ)
122 கி/100மி.லி (10 °செ)
134 கி/100மி.லி (25 °செ)[2]
144 கி/100மி.லி (40 °செ)
155 கி/100மி.லி (100 °செ)
கரைதிறன் எத்தனாலில் கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் உறுத்தும், அரிக்கும்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நிக்கல்(II) புளோரைடு
நிக்கல்l(II) குளோரைடு
நிக்கல்(II) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் கோபால்ட்(II) புரோமைடு
தாமிரம்(II) புரோமைடு
பலேடியம்(II) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

நிக்கல்(II)புரோமைடு (Nickel(II) bromide) என்பது NiBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐதரோபுரோமிக் அமிலத்தித்தினுடைய நிக்கல் உப்பான இச்சேர்மம் ஒரு வீரியம் குறைந்த ஆக்சிசன் ஒடுக்கியாகும். நிக்கல், நிக்கல்(II) ஆக்சைடு நிக்கல்(II) கார்பனேட்டு அல்லது நிக்கல்(II) ஐதராக்சைடு முதலான பொருட்களில் ஒன்றுடன் ஐதரோ புரோமிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்தினால் நிக்கல்(II)புரோமைடைத் தயாரிக்க முடியும். நிக்கலுடன் புரோமினைச் சேர்த்து வினைப்படுத்துவதாலும் இதைத் தயாரிக்கலாம

மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் நீருறிஞ்சியாக நிக்கல்(II)புரோமைடு காணப்படுகிறது. நீர் மற்றும் எத்தனாலில் கரைகிறது. குறிப்பாக நிக்கல்(II) சேர்மங்கள் தண்ணீரில் கரையும் பொழுது, நீலப்பச்சை நிற கரைசல்களைத் தருகிறது. காரங்களுடன் வினைபுரிந்து நிக்கல்(II) ஐதராக்சைடைத் தருகிறது. புரோமைடு அயனிகளை வழங்கும் மூலமாக இது பயன்படுத்தப்படுகிறத

மற்ற நிக்கல் சேர்மங்களைப் போல நிக்கல்(II)புரோமைடும் நச்சுத் தன்மை வாய்ந்ததாகும். இச்சேர்மம் ஒரு புற்று நோயாக்கியாகவும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தோலில் படும்பொழுது தோல் வியாதிகளை ஏற்படுத்தக்கூடிய சேர்மமாக இருக்கிறது. புரோமைடு அயனியும் ஒரு மிதமான நச்சுத்தன்மை மிக்கதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://chemdat.merck.de/documents/sds/emd/deu/de/8181/818174.pdf
  2. http://chemister.ru/Database/properties-en.php?dbid=1&id=3859
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்(II)_புரோமைடு&oldid=2051892" இலிருந்து மீள்விக்கப்பட்டது