நிக்கல்(II) சல்பேட்டு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(II) சல்பேட்டு
| |||
வேறு பெயர்கள்
நிக்கலசு சல்பேட்டு
| |||
இனங்காட்டிகள் | |||
7786-81-4 (நீரற்ற சேர்மம்) 10101-97-0 (எக்சாஐதரேட்டு) 10101-98-1 (எப்டாஐதரேட்டு) | |||
ChEBI | CHEBI:53001 | ||
ChemSpider | 22989 | ||
EC number | 232-104-9 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 24586 | ||
வே.ந.வி.ப எண் | QR9600000 | ||
| |||
UNII | 4FLT4T3WUN | ||
பண்புகள் | |||
NiSO4 | |||
வாய்ப்பாட்டு எடை | 154.75 கி/மோல் (நீரற்ற) 262.85 கி/மோல் (எக்சாஐதரேட்டு) 280.86 கி/மோல் (எப்டாஐதரேட்டு) | ||
தோற்றம் | மஞ்சள் நிறத் திண்மம்(நீரற்ற) நீல நிறப் படிகங்கள் (எக்சாஐதரேட்டு) பச்சை-நீலப்படிகங்கள் (எப்டாஐதரேட்டு) | ||
மணம் | மணமற்றது | ||
அடர்த்தி | 4.01 கி/செமீ3 (நீரற்ற சேர்மம்) 2.07 கி/செமீ3 (எக்சாஐதரேட்டு) 1.948 கி/செமீ3 (எப்டாஐதரேட்டு) | ||
உருகுநிலை | > 100 °செ (நீரற்ற சேர்மம்) 53 °செ (எக்சாஐதரேட்டு) | ||
கொதிநிலை | 840 °C (1,540 °F; 1,110 K) (நீரற்ற சேர்மம், சிதைகிறது) 100 °செ (எக்சாஐதரேட்டு, சிதைகிறது) | ||
65 கி/100 மிலி (20 °செ) 77.5 கி/100 மிலி (30 °செ) (heptahydrate) | |||
கரைதிறன் | நீரற்ற சேர்மம் எத்தனால்,டை எத்தில் ஈதர், அசிட்டோன் ஆகியவற்றில் கரைவதில்லை எக்சாஐதரேட்டு எத்தனால் மற்றும் அம்மோனியாவில்கரைவதில்லை, எப்டாஐதரேட்டு எத்தனாலில் கரைவதில்லை | ||
காடித்தன்மை எண் (pKa) | 4.5 (எக்சாஐதரேட்டு) | ||
+4005.0·10−6 செமீ3/மோல் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.511 (எக்சாஐதரேட்டு) 1.467 (எப்டாஐதரேட்டு) | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | கனசதுரம் (படிக முறை) (நீரற்ற சேர்மம்) நான்முகி படிக அமைப்பு (எக்சாஐதரேட்டு) செஞ்சாய்சதுரம் (எக்சாஐதரேட்டு) | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
ஈயூ வகைப்பாடு | Carc. Cat. 1 Muta. Cat. 3 Repr. Cat. 2 Toxic (T) Harmful (Xn) Irritant (Xi) Dangerous for the environment (N) | ||
R-சொற்றொடர்கள் | R49, R61, R20/22, R38, R42/43, R48/23, R68, R50/53 | ||
S-சொற்றொடர்கள் | S53, S45, S60, S61 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாதது | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
264 mg/kg | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய நேர் மின்அயனிகள் | கோபால்ட்(II) சல்பேட்டு மயில் துத்தம் அன்னபேதி | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
நிக்கல்(II) சல்பேட்டு(Nickel(II) sulfate), அல்லது நிக்கல் சல்பேட்டு, என்பது NiSO4(H2O)6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இது அதிக கரைதிறன் கொண்ட நீல நிற உப்பாகும். இது மின்முலாம் பூசுவதற்குத் தேவைப்படும் Ni2+ அயனிக்கான பொதுவான மூலமாகும்.
2005 ஆம் ஆண்டில் தோராயமாக 40,000 டன் நிக்கல் சல்பேட்டு உற்பத்தி செய்யப்பட்டது. இது முக்கியமாக நிக்கல் முலாம் பூசுதலில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.[1]
2005–06 ஆம் ஆண்டில் திட்டுச்சோதனையில நிக்கல் சல்பேட்டானது முதன்மையான ஒவ்வாமையூக்கியாக இருந்தது.[2]
அமைப்பு
[தொகு]நிக்கல்(II) அயனியைக் கொண்ட உப்புகள் குறைந்தபட்சம் ஏழு அறியப்பட்டுள்ளன. இந்த படிக வடிவுடைய உப்புகள் அவற்றின் நீரேற்றம் அடையும் தன்மையில் வேறுபாடு உடையனவாக இருக்கின்றன.
பொதுவான நான்முகி அமைப்பினைக் கொண்ட எக்சாஐதரேட்டானது 30.7 மற்றும் 53.8 °செல்சியசுக்கு இடைப்பட்ட வெப்பநிலையில் உப்பின் நீர்க்கரைசலில் இருந்து படிகமாகிறது. இந்த வெப்பநிலைக்குக் கீழாக ஒரு எப்டாஐதரேட்டுப் படிகமும், இந்த வெப்பநிலைக்கு மேலாக ஒரு செஞ்சாய்சதுர எப்டாஐதரேட்டும் படிகமாகின்றன. நீரற்ற மஞ்சள் நிறச் சேர்மமானது, NiSO4, அதிக உருகுநிலை கொண்டதாக, ஆய்வகங்களில் அரிதாகக் காணக்கிடைக்கிற ஒன்றாக இருக்கிறது. இந்தச் சேர்மமானது ஐதரேட்டு சேர்மத்தை 330 °செல்சியசு அளவிற்கு மேல் வெப்பப்படுத்துவதால் கிடைக்கப்பெறுகிறது. இச்சேர்மமானது இன்னும் அதிகமான வெப்பநிலையில் நிக்கல் ஆக்சைடாக சிதைவடைகிறது.[1]
எக்சு கதிர் படிக அமைப்பு ஆய்வியல் அளவீடுகள் NiSO4·6H2O சேர்மமானது எண்முகி அமைப்பைக் கொண்ட [Ni(H2O)6]2+ அயனிகளைக் கொண்டுள்ளதைக் காட்டுகிறது. தொடர்ச்சியா, இந்த அயனிகள் சல்பேட்டு அயனிகளுடன் ஐதரசன் பிணைப்பினைக் கொண்டுள்ளன.[3] இந்த உப்பினை நீரில் கரைக்கும் போது [Ni(H2O)6]2+ என்ற உலோக நீர் அணவைினைக் கொண்டுள்ள கரைசலைத் தருகிறது.
அனைத்து நிக்கல் சல்பேட்டுகளும் இணைக்காந்தத் தன்மை உடையவையே.
தயாரிப்பு, பயன்பாடுகள் மற்றும் அணைவு வேதியியல்
[தொகு]பொதுவாக, தாமிரத்தைப் பிரித்தெடுக்கும் முறையின் போது கிடைக்கும் ஒரு உப-விளைபொருளாக இந்த உப்பு கிடைக்கிறது. இச்சேர்மம் நிக்கல் உலோகம் அல்லது நிக்கல் ஆக்சைடுகளை கந்தக அமலத்தில் கரைப்பதன் மூலமாகவும் தயாரிக்கப்படுகிறது.
நிக்கல் சல்பேட்டின் நீர்க்கரைசல்கள் சோடியம் கார்பனேட்டுடன் வினைபுரிந்து நிக்கல்(II) கார்பனேட்டு வீழ்படிவைத் தருகிறது. இது நிக்கலை அடிப்படையாகக் கொண்ட வினைவேகமாற்றிகள் மற்றும் நிறமிகள் தயாரிப்பில் முன்னோடிச் சேர்மமாக உள்ளது.[4] நிக்கல் சல்பேட்டுகளின் அடர் நீர்க்கரைசலுடன் அம்மோனியம் சல்பேட்டினை சேர்க்கும் போது Ni(NH4)2(SO4)2·6H2O ஆனது வீழ்படிவாகிறது. இந்த நீல நிறத் திண்மமானது அம்மோனியம் இரும்பு(II) சல்பேட்டு, Fe(NH4)2(SO4)2·6H2O ஐ ஒத்ததாகும்.[1]
நிக்கல் சல்பேட்டானது ஆய்வகத்தில் பயன்படுத்தப்படுகிறது.பாலிஇஸ்டிடின் குறியீட்டில் இச்சேர்மத்தின் தம்பங்கள் உயிர்வேதியியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல் சோதனைகளில் பயன்படுகிறது. இத்தம்பங்களில் நிக்கல் சல்பேட்டானது மறுஉருவாக்கம் செய்யப்படுகிறது. Aqueous solutions of NiSO4·6H2O அல்லது ஒத்த ஐதரேட்டுகளின் நீர்க்கரைசல்கள் அம்மோனியாவுடன் வினைபுரிந்து [Ni(NH3)6]SO4 ஐத் தருகிறது. மேலும் எதிலீன் டைஅமீனுடன் வினைபுரிந்து [Ni(H2NCH2CH2NH2)3]SO4 ஐத் தருகிறது. இவ்வாறு கிடைக்கப்பட்ட சேர்மமானது ஐதரேட்டுகளை உருவாக்கும் தன்மையற்ற காரணத்தால், எப்போதாவது,காந்த ஏற்புத்திறன் அளவீடுகளில் அளவிடு பொருளாகப் பயன்படுகிறது.
இயற்கையில் கிடைக்கும் விதம்
[தொகு]நிக்கல் சல்பேட்டானது அரிதாகக் கிடைக்கும் கனிமமான ரெட்ஜெர்சைட்டில் (எக்சாஐதரேட்டு) காணப்படுகிறது. இரண்டாவது எக்சாஐதரேட்டானது, (Ni,Mg,Fe)SO4·6H2O, நிக்கல் எக்சாஐதரேட்டு என அழைக்கப்படுகிறது. எப்டாஐதரேட்டானது ஒப்பீட்டளவில் காற்றில் நிலைத்தன்மை கொண்டிராது. இது மோரெனோசைட்டாகக் கிடைக்கிறது. ஒற்றை ஐதரேட்டான அரிய வகைக் கனிமமனா ட்வார்நிகைட்டில் (Ni,Fe)SO4·H2O காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 K. Lascelles, L. G. Morgan, D. Nicholls, D. Beyersmann “Nickel Compounds” in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005. Vol. A17 p. 235 எஆசு:10.1002/14356007.a17_235.pub2.
- ↑ Zug KA, Warshaw EM, Fowler JF Jr, Maibach HI, Belsito DL, Pratt MD, Sasseville D, Storrs FJ, Taylor JS, Mathias CG, Deleo VA, Rietschel RL, Marks J. Patch-test results of the North American Contact Dermatitis Group 2005–2006. Dermatitis. 2009 May–Jun;20(3):149-60.
- ↑ Wells, A. F. (1984). Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6.
- ↑ H. B. W. Patterson, "Catalysts" in Hydrogenation of Fats and Oils G. R. List and J. W. King, Eds., 1994, AOCS Press, Urbana.