பொட்டாசியம் டெட்ராபுளோரோ நிக்கலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் டெட்ராபுளோரோ நிக்கலேட்டு
இனங்காட்டிகள்
13859-60-4
ChemSpider 21160197
EC number 237-595-3
InChI
  • InChI=1S/4FH.2K.Ni/h4*1H;;;/q;;;;2*+1;+2/p-4
    Key: UIRGKRRTSXFSTG-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 44149288
SMILES
  • F[Ni-2](F)(F)F.[K+].[K+]
பண்புகள்
F4K2Ni
வாய்ப்பாட்டு எடை 212.88 g·mol−1
தோற்றம் பச்சை நிறத் திண்மம்
அடர்த்தி 3.36 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பொட்டாசியம் டெட்ராபுளோரோ நிக்கலேட்டு (Potassium tetrafluoronickelate) என்பது K2NiF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம், நிக்கல், புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

நிக்கல்(II) புளோரைடு, பொட்டாசியம் புளோரைடு மற்றும் பொட்டாசியம் பைபுளோரைடு ஆகியவற்றின் கலவையை உருக்கி பொட்டாசியம் டெட்ராபுளோரோ நிக்கலேட்டு தயாரிக்கப்படுகிறது.[1]

இயற்பியல் பண்புகள்[தொகு]

2.006 Å பிணைப்பு நீளம் கொண்ட Ni-F பிணைப்பு எண்முக (உயர் சுழல்) Ni மையங்களைக் கொண்டுள்ளது. இந்த டெட்ராபுளோரோ நிக்கலேட்டு உப்பு பச்சை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. இரட்டைப் பால புளோரைடு ஈந்தணைவிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட எண்முக Ni மையங்களின் அடுக்குகளைக் கொண்ட பெரோவ்சிகைட்டு போன்ற கட்டமைப்பை பொட்டாசியம் டெட்ராபுளோரோ நிக்கலேட்டு சேர்மம் ஏற்றுக்கொள்கிறது. அடுக்குகள் பொட்டாசியம் நேர்மின் அயனிகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இச்சேர்மத்தின் கட்டமைப்பு முதன்மை இரட்ல்சுடன்-பாப்பர் கட்ட பெரோவ்சிகைட்டு கட்டமைப்பு வகைகளில் ஒன்றாகும். குப்ரேட்டு மீகடத்திகளின் ஆரம்பகால கண்டுபிடிப்புகள் K2NiF4 சேர்மத்தின் கட்டமைப்புடன் நெருக்கமாக தொடர்புடைய கட்டமைப்புகளாக இருந்தன. எ.கா. இலந்தனம் குப்ரேட்டும் இலந்தனம் பேரியம் தாமிர ஆக்சைடும் இதற்கான எடுத்துக்காட்டுகளாகும்.

K2NiF4 உருவாக்கத்தில் நிக்கல் இருபுளோரைடு அடுக்குகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. Yeh, S. K.; Wu, S. Y.; Lee, C. S.; Wang, Y. (1993). "Electron-Density Distribution in a Crystal of Potassium Tetrafluoronickelate, K2NiF4". Acta Crystallographica Section B: Structural Science 49 (5): 806–811. doi:10.1107/S0108768193003246.