உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீ கங்காநகர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 29°55′04″N 73°52′54″E / 29.91778°N 73.88167°E / 29.91778; 73.88167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜஸ்தான் மாநில வரைபடத்தில் 31 ஆம் எண், கங்காநகர் மாவட்டத்தை குறிக்கும்

ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் (Ganganagar district (இந்தி:ज़िला श्रीगंगानगर) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் சிறீ கங்காநகர் ஆகும். இது இராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இதன் வடமேற்கில் பஞ்சாப், இந்தியா மாநில எல்லை உள்ளது.

முன்னாள் பிகானேர் மன்னர் கங்கா சிங் நினைவாக, இம்மாவட்டத்திற்கு கங்காநகர் மாவட்டம் பெயர் சூட்டப்பட்டது.

மாவட்ட அமைவிடம்

[தொகு]

10,978 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கங்காநகர் மாவட்டத்தின் கிழக்கில் அனுமான்காட் மாவட்டம், தெற்கில் பிகானேர் மாவட்டம், மேற்கில் பாகிஸ்தான் நாட்டின் பகவல்நகர் மாவட்டம், வடக்கில் பஞ்சாப் மாநிலம் எல்லைகளாகக் கொண்டது.

இம்மாவட்டம் இராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்கில் தார் பாலைவனத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.

பொருளாதாரம்

[தொகு]

வேளாண்மை சார்ந்த பொருளாதாரம் கொண்ட இம்மாவட்டத்தில் கோதுமை, பருத்தி, கடுகு, தானியங்கள், கரும்பு, எலுமிச்சைப் பழம் விளைவாதல்,அதன் தொடர்பான தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

வருவாய் வட்டங்கள்

[தொகு]
  1. ஸ்ரீகங்காநகர் வட்டம்
  2. கரண்பூர் வட்டம்
  3. சாதுல்சாகர் வட்டம்
  4. பதாம்பூர் வட்டம்
  5. ராய்சிங்நகர் வட்டம்
  6. சூரத்காட் வட்டம்
  7. அனூப்காட் வட்டம்
  8. விஜய்நகர் வட்டம்
  9. கார்சனா வட்டம்

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,969,168 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 72.81% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 27.19% கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி % விகிதம் 10.04% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,043,340 ஆண்களும்; 925,828 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 887 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 10,978 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 179 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 69.64% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 78.50% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 59.70% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 255,475 ஆக உள்ளது. [1]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை ,437,144 (72.98 %) ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 474,853 (24.11 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 50,688 (2.57 %) ஆகவும்; சமண சமய கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.

மொழிகள்

[தொகு]

இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மாவட்டப் பிரிப்பு

[தொகு]

இம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிய அனுப்கர் மாவட்டம் நிறுவப்பட்டது.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_கங்காநகர்_மாவட்டம்&oldid=4120596" இலிருந்து மீள்விக்கப்பட்டது