சிறீ கங்காநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறீ கங்காநகர் இந்திய மாநிலமான ராஜஸ்தானின் மாநிலத்தில் வடமேற்கில் அமைந்த ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இதன் எல்லைகளாக அரியானா, பஞ்சாப் மாநில எல்லைகள், இந்திய-பாக்கித்தானின் சர்வதேச எல்லை என்பன காணப்படுகின்றன. இது சிறீ கங்கநகர் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும். இந்நகரம் மகாராஜா சிறீ கங்கா சிங் பகதூர் என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டது. இது "ராஜஸ்தானின் உணவுக் கூடை" என்றும் “விவசாயிகளின் நகரம்” என்றும் அழைக்கப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

சிறீ கங்காநகர் மாவட்டத்தின் புவியியல் இருப்பிடம் அட்சரேகை 28.4 முதல் 30.6 வரையிலும், தீர்க்கரேகை 72.2 முதல் 75.3 வரையிலும் உள்ளது.[1] சிறீ கங்காநகரின் மொத்த பரப்பளவு 11,154.66 கிமீ² அல்லது 1,115,466 ஹெக்டேர் ஆகும். இது கிழக்கில் அனுமான்காட் மாவட்டத்தால்சூழப்பட்டுள்ளது. (அனுமான்காட் மாவட்டம் 1994 சூலை 12 அன்று செதுக்கப்பட்டது) தெற்கே பிகானேர் மாவட்டமும் , மேற்கில் பாகிஸ்தானின் பஞ்சாபின் பகவல்நகர் மாவட்டமும் , வடக்கே பஞ்சாபும் அமைந்துள்ளன.

காலநிலை[தொகு]

சிறீ கங்காநகரின் கோடைக் கால வெப்பநிலை 50 ° செல்சியஸ் மற்றும் குளிர்கால வெப்பநிலை 0 ° செல்சியஸ் வரை குறைகிறது.[2] சராசரி ஆண்டு மழைவீழ்ச்சி 200 மிமீ (7.9 அங்குலம்) ஆகும். கோடையில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 50 °C ஆகவும், குளிர்காலத்தில் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை -2.8. C ஆகவும் இருக்கும்.[3]

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தின் மக்கட் தொகை 1,969,520 ஆகும்.[4] இது இந்தியாவின் 640 மாவட்டங்களில் 235 வது இடத்தைப் பெறுகிறது. மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்கு (460 / சதுர மைல்) 179 மக்கட் தொகை அடர்த்தி உள்ளது.[4]

2001-2011 தசாப்தத்தில் அதன் மக்கட் தொகை வளர்ச்சி விகிதம் 10.06% ஆகும். கங்காநகர் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 947 பெண்களின் பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது.  மக்கள் தொகையில் 52.99% ஆண்களும், பெண்கள் 47.01% பேரும் உள்ளனர். கங்கநகர் சராசரி கல்வியறிவு விகிதம் 74.25% வீதமாகும்.[4] இது தேசிய சராசரியான 73.8% வீதத்தை ஐ விட அதிகமாக உள்ளது. ஆண்களின் கல்வியறிவு 84.33% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 71.37% வீதமாகவும் காணப்படுகின்றது.

கங்காநகரில் 13% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள். மக்கட் தொகையில் பெரும்பான்மையானவர்கள் இந்து , சமண மற்றும் சீக்கியர்கள் ஆவார்கள். பஞ்சாப் மாநிலத்திற்கு அருகாமையில் இருப்பதால் இந்த நகரம் பஞ்சாபி கலாச்சாரத்தின் செல்வாக்கைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்[தொகு]

கும்பல் கால்வாயைக் கொண்டுவந்த மகாராஜா கங்கா சிங்கின் முயற்சியால் பாலைவன நிலம் பசுமை நகரமாக மாற்றப்பட்டது. இது பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் அதிகப்படியான நீரை இப்பகுதிக்கு கொண்டு செல்கிறது. கங்கநகரை "ராஜஸ்தானின் உணவுக் கூடை" என்று அழைக்கப்படும் மாவட்டமாக மாற்றுகிறது.

நகரத்தின் பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் முக்கிய பயிர்கள் கோதுமை, கடுகு மற்றும் பருத்தி என்பனவாகும்.

ஸ்ரீ கங்கநகர் மாவட்டத்தில் உள்ள தொழில்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. பருத்தி வித்து நீக்கல் மற்றும் அழுத்தும் தொழிற்சாலைகள், கடுகு எண்ணெய் ஆலைகள், கோதுமை மாவு ஆலைகள், ராஜஸ்தான் மாநில கங்காநகர் சர்க்கரை ஆலைகள் (ராயல் ஹெரிடேஜ் மதுபானங்களுக்கு பெயர் பெற்றவை), என்பன காணப்படுகின்றன. பெரும்பாலான தொழிற்சாலைகள் ஸ்ரீ கங்காநகர் நகரத்திலும் அதைச் சுற்றியும் உள்ளன.

சான்றுகள்[தொகு]

  1. "Wayback Machine". web.archive.org. 2012-01-19. Archived from the original on 2012-01-19. பார்க்கப்பட்ட நாள் 2019-11-19.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "Temperature Regimes". Archived from the original on 2009-01-05.
  3. "INDIA METEOROLOGICAL DEPT". Archived from the original on 2008-12-11.
  4. 4.0 4.1 4.2 "Indian Districts by Population, Sex Ratio, Literacy 2011 Census". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_கங்காநகர்&oldid=3554403" இலிருந்து மீள்விக்கப்பட்டது