உள்ளடக்கத்துக்குச் செல்

மிசோரம் முதலமைச்சர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசோரம் முதலமைச்சர்
மிசோரமின் சின்னம்
இந்தியாவின் கொடி
தற்போது
லால்துஹோமா

டிசம்பர் 2023 முதல்
நியமிப்பவர்மிசோரம் ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்சு சுங்கா
உருவாக்கம்3 மே 1972
இந்திய வரைபடத்தில் உள்ள மிசோரம் மாநிலம்.
இந்திய வரைபடத்தில் உள்ள மிசோரம் மாநிலம்.

மிசோரம் முதலமைச்சர், இந்திய மாநிலமான மிசோரத்தின், அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.

1972 முதல், நான்கு கட்சிகளிலிருந்து ஐந்து பேர் மிசோரம் முதலமைச்சராக பதவி வகித்துள்ளனர். மிசோரம் மாநிலத்தின் முதலமைச்சராக முதன்முதலில் சு சுங்கா என்பவர் 03 மே, 1972 முதல் 10 மே, 1997 வரை பதவி வகித்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த லால் தன்ஃகாவ்லா என்பவர் 21 ஆண்டுகள் (5 முறை), நீண்டகாலமாக பதவியில் இருந்தார். தற்போது மிசோ தேசிய முன்னணி கட்சியைச் சேர்ந்த சோரம்தங்கா என்பவர் 15 திசம்பர், 2018 முதல் முதலமைச்சராக பதவியில் உள்ளார்.[1][2]

முதலமைச்சர்கள்

[தொகு]
எண் பெயர் படம் ஆட்சிக் காலம் கட்சி ஆட்சிக் காலத்தின் நாட்கள்
1 சு சுங்கா 03 மே 1972 10 மே 1977 மிசோ தேசிய முன்னணி 5 ஆண்டுகள், 7 நாட்கள்
- யாருமில்லை
குடியரசுத் தலைவர் ஆட்சி
11 மே 1977 1 சூன் 1978 பொருத்தமற்றது 1 ஆண்டு, 21 நாட்கள்
2 டி. சைலோ 02 சூன் 1978 10 நவம்பர் 1978 மிசோ மக்கள் மாநாடு 0 ஆண்டுகள், 161 நாட்கள்
- யாருமில்லை
குடியரசுத் தலைவர் ஆட்சி
10 நவம்பர் 1978 08 மே 1979 பொருத்தமற்றது 0 ஆண்டுகள், 179 நாட்கள்
(2) டி. சைலோ 08 மே 1979 04 மே 1984 மிசோ மக்கள் மாநாடு 4 ஆண்டுகள், 362 நாட்கள்
3 லால் தன்ஃகாவ்லா 05 மே 1984 20 ஆகத்து 1986 இந்திய தேசிய காங்கிரசு 2 ஆண்டுகள், 107 நாட்கள்
4 லால்தெங்கா 21 ஆகத்து 1986 19 பிப்ரவரி 1987 மிசோ தேசிய முன்னணி 2 ஆண்டுகள், 17 நாட்கள்
20 பிப்ரவரி 1987 7 செப்டம்பர் 1988
- யாருமில்லை
குடியரசுத் தலைவர் ஆட்சி
7 செப்டம்பர் 1988 24 சனவரி 1989 பொருத்தமற்றது 0 ஆண்டுகள், 139 நாட்கள்
(3) லால் தன்ஃகாவ்லா 24 சனவரி 1989 7 திசம்பர் 1993 இந்திய தேசிய காங்கிரசு 9 ஆண்டுகள், 313 நாட்கள்
8 திசம்பர் 1993 3 திசம்பர் 1998
5 சோரம்தாங்கா 03 திசம்பர் 1998 04 திசம்பர் 2003 மிசோ தேசிய முன்னணி 10 ஆண்டுகள், 8 நாட்கள்
4 திசம்பர் 2003 11 திசம்பர் 2008
(3) லால் தன்ஃகாவ்லா 11 திசம்பர் 2008 11 திசம்பர் 2013 இந்திய தேசிய காங்கிரசு 10 ஆண்டுகள், 3 நாட்கள்
12 திசம்பர் 2013 14 திசம்பர் 2018
(5) சோரம்தாங்கா 15 திசம்பர் 2018 5 திசம்பர் 2023 மிசோ தேசிய முன்னணி 6 ஆண்டுகள், 10 நாட்கள்
(6) லால்துஹோமா திசம்பர் 2023 பதவியில் உள்ளார் ஜோரம் மக்கள் இயக்கம் 1 ஆண்டு, 21 நாட்கள்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மறுதினம் மிசோரம் முதல்வராக பதவியேற்பு!". NEWS 18 தமிழ் (திசம்பர் 13, 2018)
  2. "மிசோரம் மாநில முதல்-மந்திரியாக சோரம்தங்கா பதவியேற்றார்". தினத்தந்தி (திசம்பர் 15, 2018)

வெளியிணைப்புகள்

[தொகு]