அனத்தியால் மாவட்டம்

ஆள்கூறுகள்: 22°54′36″N 92°45′36″E / 22.91000°N 92.76000°E / 22.91000; 92.76000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனத்தியால் மாவட்டம்
மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்மிசோரம்
நிறுவிய ஆண்டு3 சூன் 2019
தலைமையிடம்அனத்தியால்
அரசு
 • மக்கள்வைத் தொகுதிமிசோரம் மக்களவைத் தொகுதி
Demographics
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
இணையதளம்hnahthial.nic.in

அனத்தியால் மாவட்டம் (Hnahthial district) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மிசோரம் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் 3 சூன் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [1][2]. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் அனத்தியால் ஆகும்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் தெற்கு துய்பூய், வடக்கு லாங்லே மற்றும் கிழக்கு லாங்லே என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. இம்மாவட்டத்தில் உள்ள 27 ஊர்கள் மற்றும் கிராமங்களில் 7187 குடும்பங்கள் உள்ளது. இம்மாவட்ட மக்கள்தொகை 28,468 ஆகவுள்ளது. அதில் ஆண்கள் 14,208 மற்றும் பெண்கள் 14,260 ஆகவுளளனர். [3].

புவியியல்[தொகு]

இம்மாவட்டத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கில் சேர்ச்சிப் மாவட்டம், கிழக்கில் மியான்மர் நாடு, தெற்கில் சாய்ஹா மாவட்டம், மேற்கிலும், வடமேற்கிலும் லுங்லேய் மாவட்டம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனத்தியால்_மாவட்டம்&oldid=3542154" இருந்து மீள்விக்கப்பட்டது