மிசோரம் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிசோரம் பல்கலைக்கழகம்
Mizoram University
Mizoram University emblem.jpeg
குறிக்கோளுரைGreater deeds remain
வகைபொதுத்துறை
உருவாக்கம்2001
வேந்தர்வேந்தர்
துணை வேந்தர்பேரா. ஆர். லால்தந்துலுவாங்கா
கல்வி பணியாளர்
232
அமைவிடம்அய்சால், மிசோரம், இந்தியா
வளாகம்நாட்டுப்புறம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையதளம்www.mzu.edu.in

மிசோரம் பல்கலைக்கழகம், இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் ஆகும். இது இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் இயங்குகிறது. இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட மிசோரம் பல்கலைக்கழகச் சட்டம் (2000) என்னும் சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது.[1] இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக மிசோரம் மாநில ஆளுநர் பதவியில் இருப்பார்.[2]

வளாகம்[தொகு]

மிசோரம் பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம் 978.1988 ஏக்கர்கள் (3,958,630 m2) பரப்பளவில் பசுமையான மலைப்பகுதியில் சூழலில், தன்ஷ்ரில் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.[3] பல்கலைக்கழக வளாகத்தினுள்ளேயே கேந்திரியா வித்யாலாயா பள்ளியும் அமைந்துள்ளது. இதில் இங்கு பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகள் பயில்கின்றனர். பணியாளர்களின் நலனுக்காக ஹெல்த் சென்டரும் வளாகத்துள்ளேயே அமைந்துள்ளது.

பல்கலைக்கழக வளாகக் கட்டிடம்

[| கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டிடம்]

வெளியீடுகள்[தொகு]

மாதம் ஒரு முறை ஷில்அவுட் என்ற ஆய்வக ஏடு தகவல் தொடர்பியல் துறை மாணவர்களால் கொண்டுவர படுகிறது. லொங்லொதுய் என்ற ஆண்டு இதழ் பல்கலைகழக மாணவர் சங்கத்தால் கொண்டு வரபடுகிறது.

நூலகம்[தொகு]

நூலகம் பட்டை குறியீடு தொழில்நுட்பத்துடன் கூடிய RFID நூலக மேலாண்மை அமைப்பு முறையில் செயல்படுகிறது. இலவசமாக இணையத்தை பயன்படுத்தி நிகழ் நிலை வாய்ப்புகளை (online access) வழங்குகிறது.

விளையாட்டு[தொகு]

மிசோரம் பல்கலைகழகம் நவீன உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய கால்பந்து, கூடைபந்து மற்றும் டேபிள் டென்னிஸ் கூடங்களையும் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் விளையாட்டு விழா நடைபெறுகிறது. கிழக்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கிடையே நடைபெறும் கால்பந்து விளையாட்டு போட்டியில் 2008 மற்றும் 2009 ம் ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தையும் 2010 ம் ஆண்டு இரண்டாம் இடத்தையும் மிசோரம் பல்கலைக்கழகம் வென்றுள்ளது. அனைத்திந்திய பல்கலைகழகங்கிடையேயான போட்டியில் 2008 ம் ஆண்டு கால் இறுதி வரை முன்னேறி 2010 ம் ஆண்டு சாம்பியன் பட்டமும் வென்றது.

தங்கும் வசதி[தொகு]

மிசோரம் பல்கலைக்கழகம் 100 பேர் தங்ககூடிய இரண்டு பெண்கள் விடுதியும் 30 பேர் தங்ககூடிய ஒரு விடுதியும் உள்ளது. 100 பேர் தங்ககூடிய 4 ஆண்கள் விடுதியும் உள்ளது.

துறைகள்[தொகு]

எட்டு பள்ளிகளும் அவற்றில் 35 துறைகளும் இயங்குகின்றன.

பொருளியல் மேலாண்மை & தகவல் அறிவியல் பள்ளி புவி அறிவியல் & இயற்கை வள மேலாண்மை பள்ளி
வாழ்க்கையியல் பள்ளி
சமூக அறிவியல் பள்ளி கல்வி & மாந்தவியல் பள்ளி
பொறியியல் & தொழினுட்பம் பள்ளி

கணினி பொறியியல் துறை மின்னணுப் பொறியியல் துறை மின்பொறியியல் துறை தகவல் தொழில்நுட்பம் துறை குடிசார் பொறியியல் துறை

நுண்கலை, கட்டிடக்கலை & ஒய்யாரம் பள்ளி

சான்றுகள்[தொகு]

  1. The Mizoram University Act of 25 April 2000
  2. "Further Discussion On The Mizoram University". http://indiankanoon.org.+பார்த்த நாள் 15 August 2012.
  3. "Introduction". Mizoram University Website. மூல முகவரியிலிருந்து 14 ஜூலை 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 August 2012.

இணைப்புகள்[தொகு]


ஆள்கூறுகள்: 23°44′22″N 92°39′54″E / 23.7394°N 92.6651°E / 23.7394; 92.6651