உள்ளடக்கத்துக்குச் செல்

பொது நிர்வாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொது நிர்வாகம் என்பதை அரசாங்கக் கொள்கைப் பிரிவுகளின் உருவாக்கம், செயல்படுத்தல் மற்றும் ஆய்வு செய்தல் என பரந்துபட்ட அம்சமாக விவரிக்கலாம். குடிமைச் சமூகத்தை மேம்படுத்துவதன் மூலம் பொது மக்கள் நலனை அடைதல், சிறந்து இயங்கும் சந்தைக்கு உத்தரவாதமளித்தல் மற்றும் விளைவுத்திறனுள்ள குடிமைப் பணிச் சேவைகள் ஆகியன இந்தத் துறையின் சில குறிக்கோள்களாகும்.

பொது நிர்வாகமானது பொதுப் பணித்துறை மற்றும் முகமைகளில் பணி புரியும் பொதுப் பணியாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது, இது அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் செயல்படுகிறது, மேலும் இவர்கள் பல்வேறுபட்ட பணிகளைச் செய்கின்றனர். பொது நிர்வாகிகள் தரவுகளைச் (புள்ளியியல் விவரங்கள்) சேகரிக்கின்றனர், வரவுசெலவுத் திட்டங்களைக் கண்காணிக்கின்றனர், சட்டங்களையும் கொள்கையையும் உருவாக்குகின்றனர் மற்றும் சட்டப்பூர்வமாக கட்டாயமான செயல்பாடுகளைச் செயல்படுத்துகின்றனர். பொது நிர்வாகிகள், பொது மக்களுக்கு சேவை புரியும் "முன் நிலை" அதிகாரிகள் (எ.கா., அமைதி அலுவலர்கள், பரோல் அலுவலர்கள், எல்லைக் காப்பாளர்கள்) நிர்வாகிகள் (எ.கா., தணிக்கையாளர்கள்), பகுப்பாய்வாளர்கள் (எ.கா., கொள்கை பகுப்பாய்வாளர்கள்) மற்றும் அரசாங்க பிரிவுகள் மற்றும் முகமைகளில் பணிபுரியும் மேலாளர்கள் மற்றும் செயலதிகாரிகள் உள்ளிட்ட பல அதிகாரிகளாக இருந்து சேவை புரிகின்றனர்.

பொது நிர்வாகம் என்பது ஒரு கல்வித் துறையாகவும் விளங்குகிறது. இதனுடன் தொடர்புடைய அரசியல் அறிவியல் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில், பொது நிர்வாகமானது புதியதாகும், அது 19 ஆம் நூற்றாண்டிலேயே உருவானது. இயல்பில் பலதுறைத் தன்மையைக் கொண்டதாக இருக்கும் இத்துறை, அரசியல் அறிவியல், பொருளியல், சமூகவியல், நிர்வாகச் சட்டம், நடத்தை அறிவியல், மேலாண்மை மற்றும் இதனுடன் தொடர்புடைய பல்வேறு துறைகளிலிருந்து தனக்கான கொள்கை மற்றும் கருத்துகளைப் பெற்றுள்ளது. பொது நிர்வாகத் துறையின் குறிக்கோள்கள், பொதுவாக இலாப நோக்கற்ற மற்றும் வரியற்ற தளத்தில், பொதுச் சேவைகளின் சமத்துவம், நீதி, பாதுகாப்பு, செயல்திறன், விளைவுத்திறம் ஆகியவற்றின் ஜனநாயக மதிப்புகளுடன் தொடர்புடையதாக உள்ளன; அதே சமயம் வணிக நிர்வாகமானது, வரிக்குட்பட்ட இலாபத்துடன் தொடர்புடையதாக உள்ளது. கருத்தியல்களின் (பொறுப்பேற்றுக்கொள்ளல், ஆளுகை, பன்முகப்படுத்தல், வாடிக்கையாளர் குழுமம்) அடிப்படையில் அமைந்துள்ள ஒரு துறைக்கு, இந்தக் கருத்தியல்கள் பெரும்பாலும் சரியாக வரையறுக்கப்படாமலும் பொது வகைப்பாடுகளானவை இந்தக் கருத்துகளின் சில குறிப்பிட்ட அம்சங்களைப் புறக்கணித்த படியும் உள்ளன (டுபாய்ஸ் & ஃபேட்டோர் 2009).[1]

கல்வித்துறையில்

[தொகு]

அமெரிக்காவில், கல்வித்துறையானது பெரும்பாலும் அரசியல் அறிவியலையும் சட்டத்தையும் மையமாகக் கொண்டே உள்ளது. ஜான் ஏ. ரோர் (John A. Rohr) போன்ற அறிஞர்கள், அரசாங்க நிர்வாகக் கட்டுப்பாடுகளின் சட்டப்பூர்வத் தன்மையின் பின்புலத்திலுள்ள நீண்ட வரலாற்றை எழுதுகின்றனர். ஐரோப்பாவில், (குறிப்பாக பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில்) பிற துறைகளிலிருந்து இத்துறை விலகிச்செல்லும் போக்கானது 1720களின் காண்டிணெண்டல் யுனிவெர்சிட்டி கல்வித் திட்டங்களின் காலத்திலிருந்ததாகத் தெரிகிறது. முறையாக அதிகாரப்பூர்வ தனித்தன்மைகள் முறையே 1910 முதல் 1890 வரையிலான காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்டன.

பொது மக்கள் நலனை அடைதல் என்னும் சூழலில், மிகவும் குறிப்புத்தன்மை வாய்ந்த சொல்லான "பொது மேலாண்மை" என்பது சாதாரண வழக்கமான அல்லது பொதுவான மேலாண்மை விவகாரங்களையே குறிக்கிறது என்பது ஒரு சிறிய மரபாகும். பொது மேலாண்மையானது, அரசாங்கத்தின் செயல்பாட்டைப் பற்றிய பொருளியல் ரீதியாக உருவாக்கப்பட்ட ஒரு கண்ணோட்டமாக விளங்கும் புதிய துறையாகும் என பிறர் வாதிடுகின்றனர். இந்தப் பிந்தைய கண்ணோட்டத்தின் ஆதரவாளர்கள் இதை "புதிய பொது மேலாண்மை" எனவும் அழைக்கின்றனர். புதிய பொது மேலாண்மையானது, இந்தத் துறையின் தொழில்முறையான இயல்பை மீண்டும் வலியுறுத்தும் நோக்கம் கொண்ட சீரமைப்பு முயற்சியாக விளங்குகிறது. இது கல்வியியல் நெறிமுறை அல்லது ஒழுக்கவியல் வலியுறுத்தல் முக்கியத்துவங்கள் ஆகியவற்றுக்கு மாற்றாக விளங்கும். சில கோட்பாட்டாளர்கள், இந்தத் தொழில்முறையான துறைக்கும் அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் போன்ற அதனுடன் தொடர்புடைய கல்வியியல் துறைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தெளிவாக முன்மொழிகின்றனர்; அது இயல்பில் பன்முக துறை இயல்பு கொண்டதாக உள்ளது.

ஒரு துறையாக, பொது நிர்வாகத்தை வணிக நிர்வாகத்துடன் ஒப்பிடலாம், மேலும் அரசாங்க அல்லது இலாப நோக்கற்ற தொழில்களுக்கு முயற்சிப்பவர்கள், பொது நிர்வாகத்துறையிலான முதுகலைப் பட்டத்தை (MPA) வணிக நிர்வாகத்துறையிலான முதுகலைப் பட்டத்திற்கு (MBA) சமமானதாகவே கருதலாம். ஒரு MPA படிப்பானது பெரும்பாலும் குறிப்பிடத்தக்க விதத்தில் வேறுபட்ட நெறிமுறை மற்றும் சமூகவியல் தேர்வளவைகளையே முக்கியமாகக் கொள்ளும், ஆனால் வணிக நிர்வாக நபர்களுக்கு அது இலாபத்திற்கான முக்கியத்துவத்திற்கு அடுத்ததாகவே கருதப்படும். MPA என்பது பொது விவகாரங்கள், பொதுக் கொள்கை மற்றும் அரசியல் அறிவியல் போன்றவை உள்ளிட்ட அரசாங்கப் படிப்புகளைப் போன்றதும் அவற்றுடன் தொடர்புடையதும் ஆகும். இதன் படிப்புத் திட்டங்கள் ஆற்றல் பிரிப்புகள், நிர்வாகச் சட்டம், ஆளுகை மற்றும் அதிகாரத்திலுள்ள சிக்கல்கள் மற்றும் பங்கேற்பு ஜனநாயகம் போன்ற அரசியலமைப்பு ரீதியான விவகாரங்களுக்கு முக்கியத்துவமளிப்பதில்லை. மாறாக கொள்கைப் பகுப்பாய்வு நுட்பங்கள் அல்லது பிற சர்வதேச விவகாரங்கள் பற்றிய ஆய்வு போன்ற தலைப்பு சார்ந்த படிப்பம்சங்கள் போன்றவற்றை முக்கியமாகக் கொண்டுள்ளது. இதையும் இவற்றுக்கிடையிலான வேறுபாடு எனலாம்.

பொது நிர்வாகத்திலான முனைவர் பட்டம் என்பது (DPA) பொது நிர்வாகத் துறையிலான பயன்படு-ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டமாகும், அது நடைமுறைப்படுத்தலில் கவனம் செலுத்துகிறது. DPA க்கு, முதுகலைப் பட்டப்படிப்பிற்கும் அதிகமான விளக்கவுரையும் குறிப்பிடத்தக்க அளவு படிப்புப் பணிகளும் தேவைப்படும். வெற்றிகரமாக முனைவர் பட்டப் படிப்பிற்கான தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர், "முனைவர்" (டாக்டர்) பட்டம் வழங்கப்பட்டு பெரும்பாலும் D.P.A. என்ற பட்டம் பெயருடன் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

பொது நிர்வாகக் கோட்பாடானது அரசாங்கம், நிர்வாக் கட்டுப்பாடு, பணத்திட்டங்கள் (பட்ஜெட்) மற்றும் பொது விவகாரங்கள் ஆகியவற்றின் பொருள் மற்றும் அவசியத்தைப் பற்றி விவாதிக்கும் ஒரு துறையாக விளங்குகிறது. சமீபத்திய ஆண்டுகளில், பொது நிர்வாகக் கோட்பாடானது, அரசாங்கம், ஆட்சி மற்றும் அதிகாரம் ஆகியவை பற்றிய முக்கிய கொள்கை மற்றும் நவீன காலத்திற்குப் பிந்தைய தத்துவ ரீதியான கருத்தாக்கங்கள் ஆகியவற்றுடன் ஆதித் தொடர்பு இருப்பதாகக் காணப்படுகிறது. இருப்பினும், பொது நிர்வாகத் துறையின் பல அறிஞர்கள் இந்த சொல்லுக்கு அரசியலைப்புத் தன்மை, சேவை, அமைப்பின் நிர்வாகக் கட்டுப்பாட்டு கட்டமைப்பு மற்றும் அதிகார வரிசைத் தன்மை கொண்ட அரசாங்கம் ஆகியவற்றை முக்கியமாகக் கருதும் இயல்புடைய சிறந்த வரையறையை ஆதரிக்கின்றனர்.

வரலாறு

[தொகு]

19 ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய பழமை

[தொகு]

பிளேட்டோ (Plato), அரிஸ்டாட்டில் (Aristotle), விஷ்னு குப்தா (கௌடில்யா) (Vishnu Gupta(Kautilya)) மற்றும் மாச்சிவெல்லி (Machiavelli) உட்பட சிறந்த அறிஞர்களே பொது நிர்வாகத்தின் அடுத்த தலைமுறைகளுக்கு அடிப்படையாக விளங்கினர். ஒரு தேசிய மாகாணம் உருவாகும் வரை, ஆளுனர்கள் நெறிமுறை மற்றும் அரசியல் ரீதியான மனித இயல்பிற்கும் ஆட்சி அமைப்புகளின் நிறுவனங்களுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தனர். செயல்பாடுகள் என்பவை, அரசாங்கத்தின் ஒட்டுமொத்த வழிகாட்டல் கோட்பாட்டினை நிறுவுதல் மற்றும் தெளிவுபடுத்துதல் ஆகிய செயல்களுக்கு இரண்டாம்பட்சமானவையாகவே கருதப்பட்டன. மாச்சிவெல்லியின் த ப்ரின்ஸ் (The Prince) என்ற ஆய்வுக்கட்டுரையில், ஐரோப்பிய இளவரசர்கள் அல்லது ஆளுநர்கள் ஆகியோரே தங்களது அரசாங்கங்களை முறையாக நிர்வகிப்பதற்கான வழிகாட்டல் அறிவுரைகளை வழங்கிவந்தனர். இந்த ஆய்வுக்கட்டுரை அரசாங்கத்தின் முறைமையியலுக்கான முதல் மேற்கத்திய விளக்கங்களில் ஒன்றை வழங்குகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, அறிஞர்களும் ஆளுநர்களும் ஒருவர் எவ்வாறு ஆளுகிறார் என்பதை விளக்க தொடர்ந்து பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதன் முன்னேற்றம் உலகளவில் வேறுபட்டிருந்தாலும், அரசாங்கம் மற்றும் அதற்குரிய நிர்வாகக் கட்டமைப்புகளுக்கான "தேசிய-மாகாண" மாதிரியை உருவாக்கிய பெருமை பெரும்பாலும் 16 ஆம் நூற்றாண்டின் மேற்கு ஐரோப்பாவையே சாரும். பெரும்பான்மையாக ஏகாதிபத்திய ஆசியா, பழங்குடி ஆப்பிரிக்கா மற்றும் பழங்குடி/காலனீய அமெரிக்காஸ் ஆகிய பகுதிகள், போர், இலாபம் மற்றும் மத அல்லது நம்பிக்கை மாற்றம் ஆகியவற்றையே நோக்கமாகக் கொண்டிருந்த ஐரோப்பாவின் சூழ்ச்சி நயமிக்க உத்திகள் எந்த அளவுக்கு இருந்தன என்பதை உணர்ந்தன. எந்த நிகழ்விலும், தேசிய-மாகாணங்களுக்கு அரசாங்கத்தின் முதன்மை தேவைகளுக்கான செயல்களைச் செய்து முடிக்க தொழில்முறை ரீதியான பலம் மற்றும் கட்டமைப்பு தேவைப்பட்டது. இது சட்டத்தின் மூலம் சாத்தியப்படுத்தப்பட்ட நிலைத்தன்மை, இராணுவத்தின் மூலமாக சாத்தியப்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் வரியாக்கத்தின் மூலமாக சாதிக்கப்பட்ட சில அளவுகளிலான சமப்பங்கு ஆகியவற்றை உறுதிப்படுத்தியது.

இதன் விளைவாக, படிக்கவும் எழுதவும் திறனுள்ள நிபுணத்துவம் வாய்ந்த குடிமைப் பணியாளர்களின் தேவையானது சட்டப்பூர்வப் பதிவாக்கங்கள், இராணுவ சிறப்புக் கலை மற்றும் வரி நிர்வாகம் மற்றும் பதிவுப் பராமரிப்பு போன்ற அவசியமான செயல்பாடுகளிலான நிபுணத்துவத்தை உருவாக்குவதற்கான அடிப்படையை உருவாக்கியது. ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் காலமானது முன்னேறி இராணுவ ஆதிக்கமுள்ள பகுதிகள் தமது ஆதிக்கத்தை கண்டங்களிலும் மக்கள் பகுதிகளிலும் விரிவாக்கியதால், மரபு சார்ந்த நிபுணத்துவம் பெற்ற நிர்வாகப் பணியாளர்களுக்கான தேவையும் அதிகரித்தது.

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெருந்தகை புருஷியாவின் முதலாம் ஃப்ரெடெரிக் வில்லியம் மன்னர் (King Frederick William I), இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு கேமரலிஸ்ம் (Cameralism) என்னும் துறையிலான பேராசிரியர் குழுமம் ஒன்றை உருவாக்கினார். ஃப்ராங்க்ஃப்ரட் ஆன் டெர் ஆடர் (Frankfurt an der Oder) மற்றும் யுனிவெர்சிட்டி ஆஃப் ஹேலவேர் புருஷியன் இன்ஸ்ட்டிடியூஷன்ஸ் (University of Hallewere Prussian institutions) ஆகியவை சமூக சீரமைப்பை நோக்கமாகக் கொண்டு, பொருளியல் மற்றும் சமூகக் கல்வித் துறைகளை முக்கியமாகக் கருதிய புருஷிய கல்வி நிறுவனங்களாகும். ஜோன் ஹெயின்ரிச் காட்லாப் ஜஸ்டி (Johann Heinrich Gottlob Justi) மிகவும் பிரபலமான கேமரலிசப் பேராசிரியராவார். இவ்வாறு, மேற்கு ஐரோப்பியக் கண்ணோட்டத்தில், பழங்கால, இடைக்கால மற்றும் முதிர் அறிஞர்கள் பொது நிர்வாகம் என்று இப்போது அழைக்கப்படும், இந்தக் கல்வித் துறையின் அடிப்படையை உருவாக்கினர்.

இடைக்காலம் 1800 முதல் 1930 வரை

[தொகு]

லாரன்ஸ் வான் ஸ்டெயின் (Lorenz von Stein) என்ற 1855 ஆம் ஆண்டில் வியன்னாவிலிருந்த ஜெர்மானிய பேராசிரியரே பொது நிர்வாக அறிவியலைக் கண்டறிந்தவராக உலகின் பெரும்பாலான பகுதிகளில் கருதப்படுகிறார். வான் ஸ்டெயின் காலத்தில் பொது நிர்வாகமானது நிர்வாகச் சட்டத்தைப் போன்றதாகக் கருதப்பட்டது, ஆனால் அவரோ இந்தக் கருத்து மிகவும் சிறு எல்லைக்குட்பட்டது என நம்பினார்.

வான் ஸ்டெயின் கற்பித்தவை:

  • பொது நிர்வாகமானது சமூகவியல், அரசியல் அறிவியல், நிர்வாகச் சட்டம் மற்றும் பொது நிதியியல் போன்ற சிறப்பாக வளர்ச்சி பெற்ற துறைகளைச் சார்ந்ததாக உள்ளது. மேலும், பொது நிர்வாகம் என்பது ஓர் ஒருங்கிணைக்கும் அறிவியலாகும்.
  • பொது நிர்வாகப் பணியாளர்கள், கோட்பாடு மற்றும் நடைமுறை ஆகிய இரண்டு அம்சங்களிலுமே கவனம் செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். நடைமுறை பரிசீலனைகள் துறையின் புறப்பகுதியிலேயே உள்ளன, ஆனால் கோட்பாடே சிறந்த நடைமுறைகளுக்கான அடிப்படையாகும்.
  • அறிவானது அறிவியல் முறையில் உருவாக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவதால், பொது நிர்வாகம் என்பது ஓர் அறிவியலாகும்.

அமெரிக்காவில், உட்ரோ வில்சன் (Woodrow Wilson) பொது நிர்வாகத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார். அவர் முதலில் 1887 ஆம் ஆண்டின் "த ஸ்டடி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன்" (The Study of Administration) என்ற கட்டுரையில் பொது நிர்வாகத்தை முறையாக அங்கீகரித்தார். எதிர்காலத்தில் அதிபரான அவர் "முதலில் ஓர் அரசாங்கம் சரியாகவும் வெற்றிகரமாகவும் எதைச் செய்ய முடியும் என்பதையும் இரண்டாவதாக, இந்தச் சரியான செயல்களை அதிகபட்ச செயல்திறன் மற்றும் மிகக் குறைந்தபட்ச ஆற்றல் அல்லது பணத்தின் செலவைக் கொண்டு எவ்வாறு அதனால் செய்ய முடியும் என்பதைக் கண்டுபிடிப்பதுமே நிர்வாகக் கல்வியின் குறிக்கோளாகும்" என எழுதினார்.[2] வில்சன், வான் ஸ்டெயினை விட பொது நிர்வாக அறிவியலுடன் அதிகத் தொடர்பு கொண்டிருந்தார், 1887 ஆம் ஆண்டடி வில்சன் முன்மொழிந்த (பின்வரும்) நான்கு கருத்துகளைக் கொண்டு வெளிவந்த அவரது கட்டுரையே இதற்கு பிரதான காரணமாகும்:

  • அரசியல் மற்றும் நிர்வாகத்தின் பிரிப்பு
  • அரசியல் மற்றும் தனியார் அமைப்புகளின் ஒப்பீட்டுப் பகுப்பாய்வு
  • வணிகம் போன்ற நடைமுறைகள் மற்றும் மனப்பாங்குகளின் செயல்திறனை தினசரி செயல்பாடுகளை நோக்கி மேம்படுத்துதல்
  • மேலாண்மை மற்றும் குடிமைப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குதல் மற்றும் தகுதி அடிப்படையிலான மதிப்பீடு ஆகியவற்றின் மூலம் பொதுப் பணிச் சேவைகளின் விளைவுத் தன்மையை மேம்படுத்துதல்

அரசியலையும் நிர்வாகத்தையும் தனித்தனியாகப் பார்ப்பது குறித்த விவாதங்கள் நீண்டகாலமாக தொடர்ந்து வருகின்றன. பொது நிர்வாகத்தின் பரிந்துரைக்கப்பட்ட தலைமுறைகளின் சிறப்பியல்புகளை வேறுபடுத்தும் இந்த இரட்டைப் பண்பைப் பற்றி வெவ்வேறு கண்ணோட்டங்கள் நிலவுகின்றன.

1940 ஆம் ஆண்டுகளில்

[தொகு]

வில்சன் முன்மொழிந்த, அரசியல் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றின் இந்தப் பிரிவானது இன்று பொது நிர்வாகத்தில் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், இந்த இரட்டைப் பண்பின் ஆதிக்கம் 1940களில் தொடங்கி, இரண்டாம் தலைமுறை அறிஞர்களால் கேள்விக்குள்ளானது. லூத்தர் கல்லிக்கின் (Luther Gulick) உண்மை-மதிப்பு இரட்டைப் பண்பே நடைமுறை சாத்தியமற்றது எனக் கருதப்பட்ட வில்சனின் அரசியல்-நிர்வாக இரட்டைப் பண்புக்கு முக்கியமான போட்டியாக இருந்தது. வில்சனின் முதல் தலைமுறைப் பிரிவின் போது, கல்லிக் "சுதந்திரத்தன்மை மற்றும் இடைசெயல் தன்மை ஆகியவற்றின் ஒரு சீரான வலையமைப்பை" முன்மொழிந்தார் (ஃப்ரை 1989, 80).[3]

லூத்தர் கல்லிக் மற்றும் லிண்டால் அர்விக் (Lyndall Urwick) ஆகியோர் இப்படிப்பட்ட இரண்டாம் தலைமுறை அறிஞர்களாவர். கல்லிக், அர்விக் மற்றும் புதிய தலைமுறை நிர்வாகிகள் பலர், ஹென்றி ஃபோயல் (Henri Fayol), ஃப்ரெடரிக் வின்ஸ்லோ டெய்லர் (Fredrick Winslow Taylor), பால் ஆப்பிள்பை (Paul Appleby), ஃப்ரேங்க் குட்னவ் (Frank Goodnow) மற்றும் வில்லியம் வில்லோபை (Willam Willoughby) உள்ளிட்ட சமகாலத்திய நடத்தை, நிர்வாகவியல் மற்றும் நிறுவனவியல் "ஜாம்பவான்களைச்" சார்ந்திருந்தனர். இந்தத் துறை வல்லுநர்கள் மற்றும் அவர்களின் மனித இயல்பு, குழு நடத்தை மற்றும் வணிக நிறுவனங்கள் தொடர்பான சோதனை ரீதியலான பணிகளின் உதவி கிடைத்தது இரண்டாம் தலைமுறை பொது நிர்வாக அறிஞர்கள் அந்தத் தலைமுறைக்கு முந்தைய மற்றும் முதல் தலைமுறை அறிஞர்களுக்குக் கிடைக்காத அனுகூலங்கள் கிடைத்தன. அதற்குப் பிறகு புதிய தலைமுறையைச் சார்ந்த நிறுவன ரீதியான கோட்பாடுகள் பழங்கால மற்றும் முதிர்ச்சி பெற்ற கோட்பாட்டாளர்களின் கருத்துகளைப் போல மனித இயல்பு தர்க்க ரீதியான கருதுகோள்கள் மற்றும் பொதுமைப்படுத்தல்களைச் சார்ந்திருக்கவில்லை எனலாம்.

கல்லிக் அவர்கள் களஞ்சிய அறிஞராகக் கருதப்படுகிறார், அவர் உண்மையில் ஒரு தனித்துவம் வாய்ந்த நிர்வாக அறிஞராவார், விவரமான பொது நிறுவனவியல் கோட்பாட்டை உருவாக்கிய பெருமை அவரையே சாரும். அவரது எழுபதாண்டு தொழில் வாழ்க்கையில், கல்லிக் அறிவியல் முறை, செயல்திறன், தொழில்முறை ரீதியாக இருக்கும் தன்மை கட்டமைப்பியல் சீரமைப்பு மற்றும் செயல் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் அவரது கோட்பாடுகளை அவருக்கு முன்பிருந்தவர்களது கோட்பாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டினார். கல்லிக் நிர்வாகிகளின் கடமைகளை POSDCORB என்ற சுருக்க எழுத்துகளால் குறிப்பிட்டார். இவை திட்டமிடல் (planning), ஒழுங்கமைத்தல் (organizing), பணியமர்த்தல் (staffing), இயக்குதல் (directing), ஒருங்கிணைந்து செயல்படுத்துதல் (coordinating), அறிக்கையிடுதல் (reporting) மற்றும் பணத்திட்டமிடல் (budgeting) ஆகியவற்றைக் குறிக்கின்றன. இறுதியில், ஃபாயல் தனியார் மேலாண்மைக்கான ஒரு முறையியல் ரீதியான 14-புள்ளி முறையை வழங்கினார். இரண்டாம் தலைமுறை கோட்பாட்டாளர்கள் நிர்வாக அறிவியல்களுக்கு தனியார் மேலாண்மை நடைமுறைப் பழக்கங்களைப் பயன்படுத்திக்கொண்டனர். தனியார் மற்றும் பொதுத் துறை ஆகியவற்றுக்கிடையே உள்ள எல்லைகளைக் கடந்து செல்லக்கூடிய ஒர் ஒற்றை, பொதுமையான, மேலாண்மைக் கோட்பாடு ஒன்று இருப்பதும் சாத்தியம் என்றே கருதப்பட்டது. பொதுக் கோட்பாட்டின் படி, நிர்வாகக் கோட்பாடானது அரசாங்க நிறுவனங்களின் மீதே கவனம் செலுத்தும்படி இருந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலம் - 1970 ஆம் ஆண்டுகளில்

[தொகு]

1940களின் இடைப்பகுதிக் காலத்தைச் சேர்ந்த கோட்பாட்டாளர்கள் வில்சன் மற்றும் கல்லிக் ஆகியோரின் கருத்துகளுக்கு சவால் விட்டனர். அரசியல்-நிர்வாக இரட்டைத் தன்மையே மூன்றாம் தலைமுறையினரின் விமர்சனங்களின் மையமாக விளங்கியது. இது போன்ற விமர்சனங்கள் எழுந்தது மட்டுமின்றி அரசாங்கமும் அதன் செயல்திறனற்ற, போதுமானதல்லாத முயற்சிகள் வீணாக்கப்பட்டதால் ஆபத்துக்குள்ளானது. சில நேரங்களில் நம்பிக்கை துரோகமானதும் அதிக செலவு கொண்டதுமான அமெரிக்காவின் வியட்னாம் ஊடுருவல் மற்றும் வாட்டர்கேட் (Watergate) உள்ளிட்ட உள்நாட்டு சர்ச்சைகள் ஆகியவற்றை மூன்றாம் தலைமுறையின் போதான சுய அழிவுக்குள்ளான அரசாங்க நடத்தைகளுக்கான எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். செயல்திறனற்ற வீணான அதிகார நிர்வாகத்திற்குப் பதிலாக செயல்திறனுள்ள நிர்வாகம் வேண்டும் என குடிமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கைக்கு பதிலளிப்பதற்காகவும் தொடர்ந்து செயல்திறனுடையதாக இருப்பதற்காகவும் பொது நிர்வாகமானது அரசியலிலிருந்து தொலைவில் இருக்க வேண்டியது அவசியமானது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள் இத்தகைய சீரமைப்பை ஆதரித்தனர். அரசாங்கத்தின் மறு ஒழுங்கமைப்பை ஆய்வு செய்வதற்காக யுனிவெர்சிட்டி ஆஃப் சிக்காகோ (University of Chicago) பேராசிரியரான லூயிஸ் ப்ரௌன்லோவின் (Louis Brownlow) தலைமையில் ஹூவர் ஆணையம் (Hoover Commission) என்ற ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் விளைவாக டாக்டர். ப்ரௌன்லோ பல்கலைக்கழகத்தில் 1313 E. 60வது தெரு என்ற முகவரியில் பொது நிர்வாகச் சேவை அமைப்பை நிறுவினார். 1970 ஆம் ஆண்டுகள் வரை PAS நிறுவனம் அனைத்து மட்டங்களிலும் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனை சேவைகளை வழங்கிவந்தது.

1980 ஆம் ஆண்டுகளில்

[தொகு]

1980களின் பிற்பகுதியில், பொது நிர்வாக கோட்பாட்டாளர்களின் மற்றுமொரு தலைமுறை அதற்கு முன்பிருந்த தலைமுறைக்கு பதிலாக இடம்பெறத் தொடங்கியது. அது பொது நிர்வாக மேலாண்மை என அழைக்கப்பட்டது, அதை டேவிட் ஆஸ்போன் (David Osborne) மற்றும் டெட் கேப்ளர் (Ted Gaebler) ஆகியோர் முன்மொழிந்தனர் [4]. இந்தப் புதிய மாதிரியானது பொதுத் துறையை மேம்படுத்துவதற்கு, தனியார் துறைக் கண்டுபிடிப்புகள், வளங்கள் மற்றும் நிறுவன ரீதியான சிந்தனைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை ஆதரித்தது. கிளிண்டனின் நிர்வாகத்தின் போது (1992-2000), துணை அதிபர் அல் காரே (Al Gore) ஃபெடரல் ஏஜென்சிகளைப் பின்பற்றி அதன் படி சீரமைத்தார். புதிய பொது மேலாண்மையானது அமெரிக்காவின் ஆட்சியமைப்பு முழுவதிலும் பெரும்பாலும் பின்பற்றப்படும் அம்சமாக மாறியது.

சில விமர்சகர்கள், "குடிமக்கள்" என்பதற்கு பதிலாக "வாடிக்கையாளர்கள்" என்ற கருத்தைப் பயன்படுத்தும் அமெரிக்கர்களின் இந்தப் புதிய பொது மேலாண்மைக் கருத்தானது ஏற்றுக்கொள்ளத்தகாத முறைகேட்டுப் பயன்பாடாகும் என விவாதிக்கின்றனர். அதாவது, வாடிக்கையாளர்கள் என்போர் கொள்கை உருவாக்க செயல்முறைகளிலெல்லாம் பங்கேற்காமல் ஆதாயம் என்னும் ஒரு முடிவுடன் மட்டுமே தொடர்புடையவர்களாகக் கருதப்படுகின்றனர். குடிமக்கள் என்போர் ஒரு வணிகத்தின் நுகர்வோர்களல்லர் (வாடிக்கையாளர்கள்), உண்மையில் அவர்கள் அரசாங்கத்தின் சொந்தக்காரர்களாவர் (உரிமையாளர்கள்). புதிய பொது மேலாண்மையில், மக்கள் ஜனநாயக அம்சமாகக் கருதப்படாமல் பொருளாதார அம்சமாகக் கருதப்படுகின்றனர். இருப்பினும், இந்த மாதிரியானது அரசங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஏற்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டுகளில்

[தொகு]

1990 ஆம் ஆண்டுகளின் இறுதியில் ஜேனட் (Janet) மற்றும் ராபர்ட் டென்ஹார்ட் (Robert Denhardt) ஆகியோர் ஒரு புதிய பொதுப் பணிச் சேவை மாதிரியை முன்மொழிந்தனர்[5]. அமெரிக்கர்களை "வாடிக்கையாளர்களாகப்" பார்க்காமல் "குடிமக்களாகப்" பார்த்ததே இந்த மாதிரியின் முதன்மைப் பங்களிப்பாகும். இதன்படி, குடிமகன்(ள்) என்பவர் அரசாங்கத்தில் பங்கேற்று கொள்கை செயலாக்கம் முழுவதிலும் செயல்மிகு பங்களிப்பை வழங்குபவராக இருக்க எதிர்பார்க்கப்படுகிறார். அதன்படி இந்த உரிமையாளர்கள் ஒரு முடிவாகக் கருதப்படுவதில்லை. இது குடிமை உரிமை என்பது பொதுவாக ஒன்றேபோல இருக்கின்ற ஃபெடரல், மாகாண மற்றும் உள்ளூர் அரசாங்க நிலைகளுக்கு ஏற்றதாக இருக்கும்பட்சத்தில், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் 'நாடுகளுக்கிடையேயான செயல் வலையமைப்புகள்' ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 'நாடுகளுக்கிடையேயான நிர்வாகத்தின்' வளர்ச்சியானது குடிமக்களின் பங்களிப்பின் அம்சங்களை சிக்கலானதாக்குகிறது.[6]

openforum.com.au என்பது இதற்கான ஓர் எடுத்துக்காட்டாகும், இது ஓர் ஆஸ்திரேலிய இலாப நோக்கற்ற மின் - ஜனநாயக பணித்திட்டமாகும், அது அரசியல்வாதிகள், மூத்த பொதுப் பணியாளர்கள், அறிஞர்கள், வணிக நபர்கள் மற்றும் பிற முக்கிய நடுநிலை முதலீட்டாளர்கள் ஆகியோரை உயர்நிலைக் கொள்கை விவாதங்களில் பங்கேற்க அழைக்கிறது.

புதிய பொது மேலாண்மை (NPM)

[தொகு]

டிஜிட்டல் சகாப்த ஆட்சியே NPM க்கு அடுத்த நிலையில் பின் தொடர்வதாகும் என NPM விமர்சகர்கள் கூறுகின்றனர், அது அரசாங்கப் பொறுப்புகள், தேவைகளை அடிப்படையாகக் கொண்ட முழுமைத்தன்மை (கடமைகளை ஒருசேர செய்வது) மற்றும் டிஜிட்டலாக்கம் (நவீன IT மற்றும் டிஜிட்டல் சேமிப்பாக்கம் ஆகியவற்றின் பல்வேறு வடிவமைப்புகளில் செயல்படும் திறன்களைப் பயன்படுத்திக்கொள்வது) ஆகியவற்றை மையமாகக் கொண்டதாகும்.

பொது நிர்வாகத்திலுள்ள கல்விப் பிரிவுகள்

[தொகு]

கல்வித் துறையில், பொது நிர்வாகத் துறையானது ஐந்து பிரிவுகளாக உள்ளது. இந்தப் பிரிவுகள் பொது நிர்வாகம் என்னும் கல்வித் துறையினை முழுமையானதாக்குகின்றன.

பொது நிர்வாகத்தின் நெறிமுறைகள் என்பது முடிவெடுத்தல் என்னும் அம்சத்திற்கான கண்ணோட்ட அடிப்படையிலான அணுகுமுறையை வழங்குகிறது.
கொள்கைப் பகுப்பாய்வு என்பது முடிவெடுத்தல் அம்சத்தின் சோதனை அடிப்படையிலான அணுகுமுறையை வழங்குகிறது.
பொது பணத்திட்டமிடுதல் என்பது அளவில்லாத தேவைகளுக்கென குறைந்த வளங்களை வழங்க முயற்சிக்கும், அரசாங்கத்திற்குள்ளே உள்ள ஒரு செயலாகும்.
பொது நிர்வாகத்தில் நிறுவனவியல் கோட்பாடு அரசாங்க அங்கங்கள் மற்றும் அவற்றுடனிணைந்து அமைந்துள்ள பல சிறிய அமைப்புகளின் கட்டமைப்புகளைப் பற்றிப் படிப்பதாகும்.
பொது நிர்வாகத்தில் மனித வள மேலாண்மை என்பது சமத்துவ நடத்தை, நெற்முறை பிறழா தரநிலைகள் ஆகியவற்றை உறுதி செய்யும் மற்றும் தகுதி அடிப்படையிலான அமைப்பை ஊக்குவிக்கும் ஓர் அகச் சேவையாகும்.

முடிவெடுத்தல் மாதிரிகள் மற்றும் பொது நிர்வாகம்

[தொகு]

பொது நிர்வாகப் பணியாளர்கள் அவர்களுக்கானது என்று கருதும் பல பணிகளுக்கு ஒரு தொழில்முறை ரீதியான நிர்வாகப் பணியாளர் தான் பணி புரியும் கோட்பாட்டு ரீதியான அம்சங்களைப் பயன்படுத்தி செயல்படுவார். உண்மையில் பல பொதுத்துறை மற்றும் தனியார் நிர்வாக அறிஞர்களே முடிவெடுத்தல் மாதிரிகளை உருவாக்கி மாற்றியமைத்துள்ளனர்.

வில்லியம் நிஸ்கனேன் பணத்திட்ட-பெருக்கம்

[தொகு]

ஒப்பீட்டில் சமீபத்தியதான பகுத்தறிவு ரீதியான தேர்வு மாற்றமானது 1971 ஆம் ஆண்டின் பட்ஜெட் மேக்ஸிமைசிங் மாடல் என்னும் கட்டுரையில் வில்லியம் நிஸ்கனேனால் (William Niskanen) அறிமுகப்படுத்தப்பட்டது. அது இயற்கை அதிகாரப் பணியாளர் ஒருவர் தங்கள் பணத்திட்டத்தைப் பெருக்கி அதன் மூலம் செலவினங்களால் அளவிடப்படும் மாகாண வளர்ச்சியையே முன்னேற்ற முயற்சிப்பார் என வாதிட்டது. நிஸ்கனேன் அதிபர் ரீகனின் பொருளாதார அறிவுரையாளர்கள் ஆணையத்தில் இடம்பெற்றிருந்தார்; அவரது மாதிரியானது கட்டுப்படுத்தப்பட்ட பொது செலவினம் மற்றும் அதிகரிக்கப்பட்ட தனியார்மயமாக்கல் என அழைக்கப்பட்ட அம்சங்களை ஆதரித்தது. இருப்பினும், ரீகனின் ஆட்சிக் காலத்தில் பணத்திட்டமிடப்பட்ட செலவினங்கள் மற்றும் வளர்ந்துவரும் பற்றாக்குறை ஆகியவை முற்றிலும் வேறுபட்ட உண்மைக்கு ஆதாரங்களாகும். பன்முகத் தன்மைக் கருத்தியல்வாத எழுத்தாளர்கள் பலர் நிஸ்கனின் உலகளாவிய தன்மை கொண்ட அணுகுமுறையை மறு ஆய்வு செய்தனர். பொது மக்களின் ஆர்வத்தைக் கருத்தில் கொள்வதனால் இயக்கப்படும் விதமே அதிகாரிகளின் போக்காக உள்ளது என இந்தக் அறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

பேட்ரிக் டன்லீவியின் ஆட்சி வர்க்க வடிவமைப்பு

[தொகு]

ஆட்சி வர்க்க-வடிவமைப்பு மாதிரியானது நிஸ்கனேனின் மாதிரியின் மாற்றியமைக்கப்பட்ட ஒரு மாதிரியாகும், பகுத்தறிவு ரீதியான ஆட்சி வர்க்க அதிகாரிகள் தங்கள் அமைப்பின் செயல்பாடுகளுக்கு அவர்கள் செலவிடும் அல்லது ஒப்பந்ததாரர்கள் அல்லது ஆர்வக் குழுக்களுக்கு வழங்கும் தங்களின் பணத்திட்டத்தின் பகுதிகளை மட்டுமே அதிகரிக்கின்றனர் என வாதிடுகிறது. மூத்த அதிகாரிகளுக்கு அதிக ஆதாயங்களை "திருப்பி வழங்கும்" திறன் கொண்ட குழுக்களுக்கே பொதுவாக பணத்திட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்படும். எடுத்துக்காட்டுக்கு, பகுத்தறிவு ரீதியான அதிகாரிகள் பொதுநல காசோலைகளை குறைந்த வருவாய் கொண்ட பல மில்லியன் கணக்கிலான மக்களுக்கு வழங்குவதால் எந்த ஆதாயத்தையும் பெறமாட்டார், ஏனெனில் இது அதிகாரிகளின் குறிக்கோள்களுக்குப் பயன்படாது. அதே போல் உள்நாட்டு சமூகத் திட்டங்களைப் போலவே இராணுவம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் அதிக பணத்திட்ட முக்கியத்துவம் அளிக்கும்படி ஒருவர் சட்டத்தைப் பயன்படுத்தி வலியுறுத்தலாம். ரீகனின் ஆட்சியை மீண்டும் காண்கின்ற போது, டன்லீவியின் (Dunleavy) ஆட்சி வர்க்க வடிவமைத்தல் மாதிரியானது உண்மையில் செலவினமாது குறையாமல் இருக்கும்பட்சத்தில் அரசாங்கத்தின் "அளவு" குறைவதாகக் கூறப்படுவதற்குக் காரணத்தை வழங்குகிறது. இராணுவ ஆராய்ச்சி மற்றும் படைகளுக்காக உள்நாட்டு உரிமை வழங்கல் திட்டமானது நிதியியல் ரீதியாக குறைவாக கவனம் செலுத்தப்பட்டது.

பிரபலமான அறிஞர்கள்

[தொகு]

பொது நிர்வாகத்தில் பிரபலமான அறிஞர்கள் பல்வேறு துறைகளிலிருந்து வந்துள்ளனர். பொது நிர்வாகமானது சுய சார்புடைய தனித்துறையாக வளர்வதற்கு முந்தைய காலத்தில் பொருளியல், சமூகவியல், மேலாண்மை, அரசியல் அறிவியல், சட்டம் மற்றும் தொடர்புடைய பிற துறைகளிலிருந்து வந்த அறிஞர்கள் பலர் இத்துறைக்கு பங்களித்தனர். மிகவும் சமீபத்தில், பொது நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கை ஆகிய துறை அறிஞர்கள் இத்துறையின் ஆய்வு மற்றும் கோட்பாடுகளுக்கு மிகவும் பங்களித்துள்ளனர்.

கல்வியியல் கோட்பாட்டாளர்களின் நீண்ட பட்டியலுக்கு பொது நிர்வாகத் துறையில் பிரபலமான அறிஞர்களின் பட்டியல் என்ற கட்டுரையைக் காண்க.

குறிப்புதவிகள்

[தொகு]
  1. Dubois, Hans F. W.; Fattore, Giovanni (2009). International Journal of Public Administration. Vol. 32(8). Routledge Taylor & Francis Group. pp. 704–727. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1080/01900690902908760. The field of public administration knows many concepts. By focusing on one such concept, this research shows how definitions can be deceptive... {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
  2. வில்சன், உட்ரோ, "த ஸ்டடி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன்," பொலிட்டிக்கல் சயின்ஸ் கேட்டர்லி 2 (ஜூன் 1887)
  3. ஃப்ரை, ப்ரையன் ஆர். 1989. மாஸ்டரிங் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்; ஃப்ரம் மேக்ஸ் வெபெர் டு ட்வைட் வேல்டோ. சத்தாம், நியூ ஜெர்சி: சத்தாம் ஹௌஸ் பப்ளிஷர்ஸ், இங்க்.
  4. பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் ரிவியூ, தொகுதி. 56, எண். 3 (மே – ஜூன், 1996), ப. 247–255
  5. டென்ஹார்டிட் , ராபர்ட் பி. அண்ட் ஜேனட் வின்சாண்ட் டென்ஹார்டிட் (2000). "த நியூ பப்ளிக் சர்விஸ்: சர்விங் ரேதர் தேன் ஸ்டியரிங்." பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் ரிவியூ 60(6)
  6. டயான் ஸ்டொன், (2008) 'க்ளோபல் பப்ளிக் பாலிசி, ட்ரான்ஸ்நேஷனல் பாலிசி கம்யூனிட்டிஸ் அண்ட் தேர் நெட்வொர்க்ஸ்,' ஜர்னல் ஆஃப் பாலிசி சயின்ஸஸ் .

டுபாய்ஸ், எச்.எஃப்.டபள்யூ. & ஃபேட்டோர், ஜி. (2009), 'பொது நிர்வாக ஆராய்ச்சியில் வரையறைகள் மற்றும் வகைப்பாடுகள்: பன்முகப்படுத்துதல் என்னும் நிகழ்வு', இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், 32(8): ப. 704-727.

மேலும் காண்க

[தொகு]

பொது நிர்வாகத்திற்கான சமூகங்கள்

[தொகு]
  • பொது நிர்வாகத்திற்கான அமெரிக்க சமூகம்
  • பொது நிர்வாகத்திற்கான சீன சமூகம்
  • பொது நிர்வாகத்திற்கான டட்ச்சு சங்கம்
  • ராயல் இன்ஸ்டிடியூட் ஃபார் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்

சர்வதேச பொது நிர்வாகம்

[தொகு]

இன்னும் செயலில் உள்ள பல நிறுவனங்கள் உள்ளன. இண்டர்நேஷனல் அசோசியேஷன் ஆஃப் ஸ்கூல்ஸ் அண்ட் இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் (International Association of Schools and Institutes of Administration) (IASIA) அதில் மிகப் பழமையானதாகும். பெல்ஜியத்தின் ப்ரச்சல்ஸை (Brussels) அடிப்படையாகக் கொண்ட IASIA என்பது, பொது நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் செயல்கள் மற்றும் ஆர்வம் கொண்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான ஓர் சங்கமாகும். நிர்வாகிகள் மற்றும் மேலாளர்களுக்கான கல்வி மற்றும் பயிற்சி ஆகியவை அதன் உறுப்பினர்களின் செயல்பாடுகளில் அடங்கும். இதுவே பொது மேலாண்மைத் துறையில், உலகளாவிய அறிஞர்களைக் கொண்டுள்ள ஒரே அமைப்பாகும். www.iiasiisa.be/schools/aeacc.htm என்னும் முகவரியில் அவர்களது வலைத்தளத்தினைக் காண்க.

அமெரிக்காவினை அடிப்படையாகக் கொண்ட நேஷனல் அசோசியேஷன் ஆஃப் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் அஃபேர்ஸ் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன் (International Committee of the US-based National Association of School of Public Affairs and Administration) (NASPAA) என்ற அமைப்பும் உலகளாவிய அளவில் பெரும் உறவுகளை உருவாக்கியுள்ளது. CLAD, INPAE மற்றும் NISPAcee, APSA, ASPA போன்ற துணை வட்டார அளவிலான மற்றும் தேசிய அளவிலான மன்றங்கள் அவற்றிலடங்கும். இந்த வட்டார அளவிலான நெட்வொர்க்குகளைப் பற்றிய பொதுவான தகவல்களுக்கு, பின்வரும் முகவரியைப் பார்வையிடுக: www.GlobalMPA.net.

வெனிசுலாவின் கராக்கஸ் நகரை அடிப்படையாகக் கொண்ட செண்டர் ஆஃப் லட்டின் அமெரிக்கன் அட்மினிஸ்ட்ரேஷன் ஃபார் டெவெலப்மெண்ட் (Center for Latin American Administration for Development) (CLAD) என்ற இந்த பொது நிர்வாக நிறுவனங்களின் இந்த நெட்வொர்க்கானது லட்டின் அமெரிக்க அரசாங்கங்களால் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் இதுவே இப்பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த நிறுவனமாகும். CLAD பற்றிய தகவல்களை பின்வரும் முகவரியில் பெறலாம்: www.clad.org.ve.

இந்த நிறுவனமே இண்டெர்-அமெரிக்கன் நெட்வொர்க் ஆஃப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் எஜுகேஷன் (Inter-American Network of Public Administration Education) (INPAE) நிறுவனத்தினை உறுவாக்கிய அமைப்பாகும், இது அதன் உறுப்பினராகவும் அதன் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் உள்ளது. 2000 ஆம் ஆண்டில் உருவான வட்டார அளவிலான கல்வி நிறுவனங்களின் நெட்வொர்க்கான இது மிகவும் தனித்துவம் வாய்ந்தது, மேலும் இதுவே பொது நிர்வாகம் மற்றும் கொள்கைப் பகுப்பாய்வில் ஈடுபடும் வட மற்றும் லட்டீன் அமெரிக்க மற்றும் கரிபியன் நிறுவனங்கள் பல இணைந்துள்ள ஒரே நிறுவனமும் ஆகும். அதில் உலக அரைக்கோளப் பகுதியின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 49 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர், www.ebape.fgv.br/inpae.

NISPAcee என்பது ரஷிய கூட்டமைப்பு மற்றும் கராக்கஸ் மற்றும் மத்திய ஆசியா உட்பட மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளில் பொது நிர்வாகத் துறையில் செயல்படும் பல நிபுணர்கள், அறிஞர்கள் மற்றும் நடைமுறையியலாளர்களின் வலையமைப்பாகும். அவர்களது பின்வரும் முகவரியில் ஆங்கில வலைத்தளம் உள்ளது: www.nispa.sk/_portal/homepage.php.

NASPA, APSA மற்றும் ASPA போன்ற அமெரிக்க பொது நிர்வாகம் மற்றும் அரசியல் அறிவியல் சங்கங்களும் உள்ளன. இந்த நிறுவனங்கள் நவீன பொது நிர்வாகத்தின் அடிப்படையை உருவாக்க உதவின. மேலும் தகவல்களுக்கு அமெரிக்கன் பொலிட்டிக்கல் சயின்ஸ் அசோசியேஷனின் (American Political Science Association) வலைத்தளமான www.apsanet.org மற்றும் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷனின் வலைத்தளமான www.aspanet.org ஆகியவற்றைக் காண்க.

புற இணைப்புகள்

[தொகு]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரியா

பெலாரஸ்

பிரேசில்

கனடா

சீன மக்கள் குடியரசு

ஐரோப்பா

பின்லாந்து

ஜெர்மனி

கிரீஸ்

பிலிப்பைன்ஸ்

ரஷ்யா

ஹாலந்து/நெதர்லாந்து

இந்தியா

பிலிப்பைன்ஸ்

போலந்து

துருக்கி

இங்கிலாந்து

அமெரிக்கா

வாசிக்க பரிந்துரைக்கப்படுபவை

[தொகு]
  • ஸ்மித், கெல்வின் பி. அண்ட் லிக்காரி, மைக்கேல் ஜே. பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் — பவர் அண்ட் பாலிட்டிக்ஸ் இன் த ஃபோர்த் ப்ரான்ச் ஆஃப் கவர்ன்மெண்ட் , பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-933220-04-X

வார்ப்புரு:Civil service

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_நிர்வாகம்&oldid=3925461" இலிருந்து மீள்விக்கப்பட்டது