உள்ளடக்கத்துக்குச் செல்

தகவல் அறிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்ஸாண்டிரியா பண்டைய நூலகம்,ஆரம்ப கால வடிவம் தகவல் மீட்பு மற்றும் சேமிப்பு.

எளிமையாக கூற வேண்டும் என்றால் "தகவல் அறிவியல் என்பது தகவல்களை சேமிக்க மற்றும் மீட்டெடுப்பதற்காக செயல்முறைகள் பற்றிய ஆய்வு". தகவல் அறிவியல் என்பது அடிப்படையாக தகவல்களை பகுத்தாய்தல், சேகரித்தல், வகைப்படுத்துதல், சேமித்தல், மீட்டுதல் போன்ற பல்துறையிடைச் சார்ந்த அறிவியல் ஆகும்.[1] தகவல் அறிவியல் (தவறுதலாக) கணினி அறிவியலின் ஒரு பிரிவாகப் பெரும்பாலும் கருதப்படுகிறது.

வரலாறு

[தொகு]

தகவல் அறிவியலின் நான்கு மைல்கற்கள்

[தொகு]
  1. புத்தகங்கள், கட்டுரைகள், அல்லது பிற வெளியீடுகள் பற்றிய புள்ளிவிவர பகுப்பாய்வு மற்றும் தகவல் செயல்முறைகள் பற்றிய படிப்பு [2]
  2. தானியங்கி முறையில் தகவல்களை தேடுவது
  3. தகவல் அமைப்புகள் தோற்றம் மற்றும் தரவுத்தளங்ளின் உருவாக்கம்
  4. தொழில்நுட்பத்தின் காரணமாக ஏற்பட்ட தகவல் மேலாண்மையின் பரிணாம வளர்ச்சி

மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி

[தொகு]

தகவல் அறிவியலின் மூல ஆராய்ச்சி ஒரு திரளத்தில்(Domain) உள்ள கருத்துக்களின் அறிவு தொகுப்பாக அறியப்படுகிறது.

அடிப்படை

[தொகு]

நோக்கம் மற்றும் அணுகுமுறை

[தொகு]

தகவல் அறிவியல் முதலில் தகவல் தேவைப்படுபவர்களின் தேவைகளையும் பிரச்சனைகளையும் உணர்ந்து பின்பு அதற்கேற்றாற் போல தொழில்நுட்பங்களையும் தகவல்களையும் செயற்படுத்துகிறது. வேறொரு வகையில் விளக்க வேண்டுமென்றால் தகவல் அறிவியல் முதலில் ஒட்டு மொத்த அமைப்பின் பிரச்சனைகளை அணுகி பின்னர் ஒவ்வொரு தனிப்பட்ட தொழில்நுட்ப விஷயங்களை அணுகுகிறது. இந்த நிலையில் தகவல் அறிவியலை தொழில்நுட்ப தீர்மானவியலுக்கான ஒரு தீர்வாகவும் பார்க்கலாம்.

வரையறை

[தொகு]

1968ல் தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அமெரிக்கன் சொசைட்டியின்படி "தகவல் அறிவியல் துறை என்பது தகவலின் பண்புகள் மற்றும் தன்மை குறித்த ஆராய்ச்சி ஆகும். இது தகவல்களின் பிறப்பிடம், தொகுப்பு, அமைப்பு, சேமிப்பு, மீட்பு, விளக்கம், பரிமாற்றம், உருமாற்றம், மற்றும் பயன்பாடு தொடர்பான அறிவியல் ஆகும்."[3]

பண்புகள்

[தொகு]

தகவல் அறிவியல் மூன்று பொது பண்புகளை கொண்டுள்ளன அவையாவையெனில்[4]:

  • தகவல் அறிவியல் இயற்கையாகவே துறையிடையை ஒத்ததாகும், ஆனாலும் துறைகளுக்கிடையே இருக்கும் தொடர்புகள் வேறுபடும்.
  • தகவல் அறிவியலை தகவல் தொழில்நுட்பத்துடன் இணைக்கமலோ தொடர்புபடுத்தமலோ இருக்க முடியாது. தொழில்நுட்பமானது தகவல் அறிவியலின் பரிணாம வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும், நிர்பந்திப்பதிலும் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.
  • தொழில்நுட்பத்தை தாண்டி தகவல் சமூகத்தின் அங்கமாகவும் தகவல் அறிவியல் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stock, W.G., & Stock, M. (2013). Handbook of Information Science. Berlin, Boston, MA: De Gruyter Saur.
  2. LU, TAIHONG. 1990. Four Milestones in the Development of Information Science. Journal of the China's Society for Scientific and Technical Information. 1990 October; 9(5): 394-400. (In Chinese; English abstract).
  3. Borko, H. (1968). Information science: What is it? American Documentation, 19(1), 3¬5.
  4. Information Science,Tefko Saracevic http://comminfo.rutgers.edu/~tefko/JASIS1999.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகவல்_அறிவியல்&oldid=2746148" இலிருந்து மீள்விக்கப்பட்டது