நூலகம் மற்றும் தகவல் அறிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூலகம் மற்றும் தகவல் அறிவியல் (Library and information science (LIS)) என்பது நூலகவியல், தகவல் அறிவியல் ஆகிய இரு துறைகள் இணைந்த ஒரு துறை ஆகும். 1960-களுக்குப் பின்பு பல வட அமெரிக்க பல்கலைக்கழகங்களில் நூலகவியல், ஆவணகவியல், அருங்காட்சியகவியல் துறைகள் தகவல் புலத்தின் (Information Faculty) கீழ் கொண்டுவரப்பட்டன. பல பல்கலைக்கழங்களில் இயங்கிய தொழில்சார் நூலகவியல் துறைகள் தகவல் அறிவியல் என்ற பெயரை தம்மோடு இணைத்துக் கொண்டன. நூலகவியல் தகவல் தொழில்நுட்பம், தகவல் அறிவியல் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தினால் இது ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நூலவியல் துறைசார் அமைப்புகளும் ஆய்வேடுகளும் தகவல் அறிவியல் என்பதை தமது பெயரோடு இணைத்துக் கொண்டன.

வட அமெரிக்கா தவிர்த்துப் பிற நாடுகளில் ஆவண அறிவியல் போன்ற பிற பெயர்களும் நடைமுறையில் உள்ளன.