வைரேங்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைரேங்டே
பேரூர்
பங்களாஅவெஞ்ச், வைரேங்டே
பங்களாஅவெஞ்ச், வைரேங்டே
வைரேங்டே is located in மிசோரம்
வைரேங்டே
வைரேங்டே
இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் வைரேங்டே நகரத்தின் அமைவிடம்
வைரேங்டே is located in இந்தியா
வைரேங்டே
வைரேங்டே
வைரேங்டே (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°30′00″N 92°45′50″E / 24.500073°N 92.763796°E / 24.500073; 92.763796ஆள்கூறுகள்: 24°30′00″N 92°45′50″E / 24.500073°N 92.763796°E / 24.500073; 92.763796
நாடு இந்தியா
மாநிலம்மிசோரம்
மாவட்டம்கோலாசிப்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்10,545
மொழி
 • அலுவல்மிசோ
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்796101
தொலைபேசி குறியீடு எண்+91 (0) 3837

வைரேங்டே (Vairengte) வடகிழக்கு இந்தியாவில் மிசோரம் மாநிலத்தின் வடக்கில் உள்ள கோலாசிப் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். இந்நகரம் மிசோரம் மாநிலத் தலைரகரான அய்சாலிற்கு வடக்கே 130 கிமீ தொலைவில் அசாம் மாநில எல்லையை ஒட்டியுள்ளது. இந்நகரத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான மற்றும் கொரில்லாப் போர்ப் பயிற்சிப் பள்ளி செயல்படுகிறது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வைரேங்டே நகரத்தின் மொத்த மக்கள்தொகை 10,554 ஆகும். அதில் ஆண்கள் 5,649 மற்றும் 4,905 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 868 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1441 (13.65%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 94.73% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 10.44%, இசுலாமியர் 5.44%, கிறித்தவர்கள் 83.51% மற்றும் பிறர் 0.47% ஆகவுள்ளனர்.[1]

கல்வி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைரேங்டே&oldid=3048878" இருந்து மீள்விக்கப்பட்டது