பைராபி
பைராபி Bairabi | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மிசோரம் |
மாவட்டம் | கோலாசிப் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 3,304 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | மிசோ |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
பைராபி (Bairabi) என்பது இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் கோலாசிப் மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும். அய்சால் நகரில் இருந்து 117 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்நகரம் மிசோரம் மாநிலத்தின் ஒரு முக்கியமான தொடருந்து முனையமாகவும் திகழ்கிறது.
மக்கள் தொகையியல்
[தொகு]இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1] பைராபி நகரின் மொத்த மக்கள் தொகை 3,304 ஆகும். இம்மக்கள் தொகையில் 53% பேர் ஆண்கள் மற்றும் 47% பேர் பெண்கள் ஆவர். பைராபி நகரின் கல்வியறிவு சதவீதம் 69% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 54% எண்ணிக்கையும் பெண்கள் 46% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 19% பேர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.
தொடருந்துப் போக்குவரத்து
[தொகு]மிசோரம் மாநிலத்தின் ஒரு முக்கியமான தொடருந்து முனையமாகத் திகழும் பைராபி நகரம் அகன்ற வழிப்பாதை போக்குவரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கடாக்கால் – பைராபி குறுகிய வழிப்பாதையும் தேசிய அகன்றவழிப் பாதையாக்கும் திட்டத்தின் கீழ் அகலப் பாதையாக மாற்றப்பட்டது. விரைவுப் பாதையான இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21 ஆம் நாள் நிறைவடைந்தது. [2] சாய்ராங் நகரம் வரை நீட்டிக்கப்படவுள்ள இத்திட்டம் கோலாசிப் மாவட்டத்திற்குள் 40 கிலோமீட்டர் தொலைவும் அய்சால் மாவட்டத்திற்குள் 11 கிலோமீட்டர் தொலைவும் செல்கிறது.
பொருளாதாரம்
[தொகு]விவசாயத்திற்கு அடுத்ததாக பைராபி நகரில் பின்வரும் தொழில்களில் மக்கள் பெரும்பாலும் ஈடுபட்டுள்ளனர்.
- இந்திய உணவுக் கழகம் : – இக்கழகத்தின் உணவு சேமிப்புக் கிடங்குகளில் பணி [3]
- பைராபி அனல் மின்நிலையம் : - கன எரி எண்னெய் அடிப்படையிலான 22.92 மெகாவாட் மின்னுற்பத்தி பணி [4]
- நவீன செங்கற்கள் உற்பத்தித் துறையில் பணி [5]
- பைராபி அணையில் பணி [6]
- பைராபி முதல் அய்சாலுக்கு அருகிலுள்ள சாய்ராங் வரையிலான இருப்புப் பாதை அமைக்கும் பணி [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ Sanctioned in 2000, broad-gauge train reaches Mizoram after 16 years Indian Express, Retrieved 21 March, 2016.
- ↑ "FCI weighbridge chhiat vangin Buhfaiah harsatna tâwk mai thei?". The Zozam Times இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303223448/http://www.vanglaini.org/index.php?option=com_content&view=article&id=5030:fci-weighbridge-chhiat-vangin-buhfaiah-harsatna-tawk-mai-thei. பார்த்த நாள்: 19 August 2012.
- ↑ "Cheng Maktaduai 105 senga din Bairabi Thermal Plant, engtia tih zel chi nge?". The Zozam Times. http://thezozamtimes.org/index.php?option=com_content&view=article&id=156:cheng-maktaduai-105-senga-din-bairabi-thermal-plant-engtia-tih-zel-chi-nge&catid=40:article&Itemid=60. பார்த்த நாள்: 19 August 2012.
- ↑ "Mizoram to built Tourist Lodge near Serlui B Hydel Project". Orissa Diary இம் மூலத்தில் இருந்து 21 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120321144047/http://orissadiary.com/Shownews.asp?id=19596. பார்த்த நாள்: 19 August 2012.
- ↑ Lalfakzuala. "Bairabi Dam Project 80MW leh TLAWNG HEP 55MW TAN MOU ZIAKFEL". DIPR Mizoram. Archived from the original on 8 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Mizoram CM: Bairabi-Sairang Railway Line Unlikely to Complete by 2014". The Northeast Times இம் மூலத்தில் இருந்து 18 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130218011040/http://www.northeasttoday.in/our-states/mizoram/mizoram-cm-bairabi-sairang-railway-line-unlikely-to-complete-by-2014/. பார்த்த நாள்: 13 August 2012.