திருமதி குயூமின் நெடுவால் பகட்டு வண்ணக் கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமதி குயூமின் நெடுவால் பகட்டு வண்ணக் கோழி
அறிவியல் வகைப்பாடு
திணை விலங்கு
தொகுதி முதுகெலும்பிகள்
வகுப்பு பறவைகள்
வரிசை கல்லிபாமிசு
குடும்பம் பாசினிடே
பேரினம் சிர்மேட்டிகசு
சிற்றினம் சி குமியே
இருசொற் பெயரீடு
சிர்மேட்டிகசு குமியே

குயூம் 1881

திருமதி குயூமின் நெடுவால் பகட்டு வண்ணக் கோழி(Mrs. Hume's pheasant)(சிர்மேட்டிகசு குமியே) என்பது குயூம்ஸ் நெடுவால் பகட்டு வண்ணக் கோழி என்றும் பட்டி-வால் வண்ணக் கோழி என்றும் அழைக்கப்படுகிறது. இது 90 செ.மீ நீளம் வரை வளரக்கூடியது. பழுப்புத் தலை கொண்ட, சிவப்பு முக தோல், கசுகொட்டை பழுப்பு நிற பளபளப்பு, மஞ்சள் கலந்த அலகு, பழுப்பு ஆரஞ்சு கருவிழி, வெள்ளை இறக்கைச்சட்டம், உலோக நீல கழுத்து இறகுகள் கொண்டவை. ஆண் பறவையின் வாலானது நீளமானது, சாம்பல் வெள்ளை பட்டைகள் கொண்டது. பெண் ஒரு கசுகொட்டை பழுப்பு நிற பறவை, தொண்டைப் பகுதி வெண்ணிறமுடையது, பஃப் வண்ணமுடைய வயிற்றுடன் வாலின் நுனியானது வெண்ணிறமானது.

சீனா, இந்தியா, பர்மா மற்றும் தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் இந்த அரிய மற்றும் அதிகம் அறியப்படாத நெடுவால் பகட்டு வண்ணக் கோழியானது காணப்படுகிறது. இதன் உணவானது தாவரங்களாகும். பெண், சிறு குச்சிகள், இலைகள், இறகுகளால் கட்டப்பட்ட கூட்டில் மூன்று முதல் பன்னிரண்டு நுரை வெண்மையிலான முட்டைகளை இடும்.

டோய் லாங் மலை - தாய்லாந்து

இந்த பறவைக்கு இந்தியாவில் ஐரோப்பிய இயற்கை ஆர்வலரான ஆலன் ஆக்டேவியன் ஹ்யூமின் மனைவியான மேரி ஆன் கிரிண்டால் ஹ்யூமை நினைவு படுத்தும் வகையில் இடப்பட்டது. இது மிசோரம் மற்றும் மணிப்பூரின் மாநில பறவையாகும்.[2][3]

தொடர்ச்சியான வாழ்விட இழப்பு, இனக்கூட்டத் தொடர்பு துண்டிப்பு, உணவுக்காக வேட்டையாடுதல் காரணமாக இந்த வண்ணக்கோழியானது ஐ.யூ.சி.என் செம்பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் “அருகில் அச்சுறுத்தல் இருப்பதாக” மதிப்பிடப்பட்டுள்ளது. இது CITES பின் இணைப்பு 1ல் பட்டியலிடப்பட்டுள்ளது .

மேற்குறிப்புகள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Syrmaticus humiae". IUCN Red List of Threatened Species. 2012. Retrieved 26 November 2013.CS1 maint: ref=harv (link)
  2. "Murlen Naltional Park, Champhai District". Mizoram Tourism. Department of Tourism, Government of Mizoram. Archived from the original on 18 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 7 September 2020.
  3. "Manipur initiative to conserve state bird Mrs Hume's Pheasant". Northeast Now. பார்க்கப்பட்ட நாள் 7 September 2020.

வெளி இணைப்புகள்[தொகு]