உள்ளடக்கத்துக்குச் செல்

மிசோ தேசிய முன்னணியின் எழுச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசோ தேசிய முன்னணியின் எழுச்சி
வடகிழக்கு இந்தியாவில் கிளர்ச்சிகள் பகுதி

மிசோரம் வரைபடம் (முன்னர் மிசோ மாவட்டம்)
நாள் 28 பிப்ரவரி 1966 – 25 மார்ச் 1966
இடம் மிசோ மாவட்டம், அசாம் மாகாணம், வடகிழக்கு இந்தியா
முட்டுக்கட்டை நீடித்தது
மிசோரம் அமைதி ஒப்பந்தம்
நிலப்பகுதி
மாற்றங்கள்
நிலப்பரப்பு மாற்றம் இல்லை:மிசோ தேசிய முன்னணி கைப்பற்றியிருந்த பகுதிகள் இந்திய அரசால் மீட்கப்பட்டது.
பிரிவினர்
 இந்தியா
 மியான்மர்
மிசோ தேசிய முன்னணி
தளபதிகள், தலைவர்கள்
லெப். ஜெனரல். சாகத் சிங்
லெப். ஜெனரல் சாம் மானேக்சா
மிசோ மக்கள் தலைவர் லால்தெங்கா
இந்திய பாதுகாப்புச் செயலாளர்
இந்திய வெளியுறவுச் செயலாளர்
படைப் பிரிவுகள்
அசாம் ரைப்பிள்ஸ்
எல்லைப் பாதுகாப்புப் படை
கூர்க்கா ரைப்பிள்ஸ்
பீகார் ரெஜிமெண்ட்
மிசோ தேசிய இராணுவம்
இழப்புகள்
59 பேர் கொல்லப்பட்டனர்
126 பேர் காயமடைந்தனர்
23 காணாமல் போயினர்
95 பேர் கொல்லப்பட்டனர்
35 பேர் காயமடைந்தனர்
558 சிறை பிடிக்கப்பட்டனர்.
1950ல் அசாம் மாகாணத்தில் அய்சால் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட மிசோ மாவட்டம், அருகில் வெளிர் மஞ்சள் நிறத்தில் மணிப்பூர் இராச்சியம் மற்றும் திரிபுரா இராச்சியங்களைக் காட்டும் வரைபடம்

மிசோ தேசிய முன்னணி எழுச்சி என்பது வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாகாணத்தில் இருந்த மிசோரம் மாவட்டத்தில் வாழ்ந்த மிசோ மக்களுக்காக ஒரு இறையாண்மை கொண்ட தேசிய அரசை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட இந்திய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாகும். இந்த எழுச்சி 28 பிப்ரவரி 1966 இல் தொடங்கியது.[1][2] 1 மார்ச் 1966 அன்று முன்னாள் இராணுவ வீரர் லால்தெங்கா[3]தலைமையிலான மிசோ தேசிய முன்னணிப் படை உருவானது. இந்த முன்னணிப் படையினர், அசாம் மாகாணத்தின் மிசோரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்திய பின்னர் சுதந்திர மிசோரம் அரசை பிரகடனம் செய்தது. 25 மார்ச் 1966 அன்று மிசோ தேசிய முன்னணியினர் கைப்பற்றிய அனைத்து இடங்களையும், இந்திய அரசின் வான்படை, தரைப்படை மற்றும் துணை இராணுவப் படைகள் பதிலடி கொடுத்து மீண்டும் கைப்பற்றியது.[4]

கிளர்ச்சியின் தீவிரம் காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்தாலும், அடுத்த இரண்டு தசாப்தங்களில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தன. 1986ல் இந்திய அரசும், மிசோ தேசிய முன்னணி தலைவர்களும் இணைந்து மிசோரம் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது. இதன் மூலம் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. மிசோரமுக்கு தனி மாநிலத் தகுதியும், தனி உயர் நீதிமன்றம் மற்றும் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

பின்னணி

[தொகு]

1987ல் மிசோரம் மாநிலம் உருவாவதற்கு முன்பு, அசாம் மாகாணத்தின் மிசோ மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் பழங்குடி கிறித்துவ மிசோ மக்கள் வாழ்ந்தனர். அசாம் மாகாண அரசு தங்களை (மிசோ மக்களை) மாற்றாந்தாய் பிள்ளைகளாக நடத்தப்படுவதாக நீண்ட காலமாக புகார் அளித்து, மிசோக்களுக்கு தனி மாநிலம் கோரியது.

ஒவ்வொரு 48 ஆண்டுகளுக்கு ஒரு முறை மௌடம் எனப்படும் சுழற்சியான சூழலியல் நிகழ்வு இப்பகுதியில் பரவலான பஞ்சத்திற்கு வழிவகுக்கிறது. 1959ல் இத்தகைய பஞ்சம் தொடங்கியபோது, நிலமையை அசாம் அரசு சரியாக கையாளதால் மிசோ மக்கள் ஏமாற்றமடைந்தனர். 1960ம் ஆண்டு மாநிலத்தின் அலுவல் மொழியாக அசாமிய மொழி அறிமுகப்படுத்தியது. மேலும் மிசோ மொழியைக் கருத்தில் கொள்ளாததால், மிசோ மக்களுக்கு அசாம் அரசின் மீது அதிருப்தி மற்றும் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது.

அரசாங்கத்தின் மீது பெருகிய அதிருப்தி, இறுதியில் முன்னாள் இராணுவ வீரர் லால்தெங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி பிரிவினைவாத இயக்கம் தோன்றியது. இந்த முன்னணி மிசோ மக்களுக்கு தனியாக மிசோரம் இறையாண்மை கொண்ட சுதந்திர தேசத்தை நிறுவுவதை நோக்கமாக அறிவித்தது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Goswami, Namrata (2009). "The Indian Experience of Conflict Resolution in Mizoram" (in en). Strategic Analysis 33 (4): 579–589. doi:10.1080/09700160902907118. http://www.tandfonline.com/doi/abs/10.1080/09700160902907118. 
  2. Panwar, Namrata (2017). "Explaining Cohesion in an Insurgent Organization: The Case of the Mizo National Front" (in en). Small Wars & Insurgencies 28 (6): 973–995. doi:10.1080/09592318.2017.1374602. https://www.tandfonline.com/doi/full/10.1080/09592318.2017.1374602. 
  3. Jagadish Kumar Patnaik (2008). Mizoram, dimensions and perspectives: society, economy, and polity. Concept Publishing Company. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8069-514-8.
  4. "Armed Forces Special Powers Act: A study in National Security tyranny". South Asia Human Rights Documentation Centre (SAHRDC). பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • The Mizo Uprising: Assam Assembly Debates on the Mizo Movement, 1966-1971 by Dr. J. V. Hluna and Rini Tochhawng, Cambridge Scholars Publishing