ஓரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 18: வரிசை 18:


===ஓரசு மற்றும் சேத்===
===ஓரசு மற்றும் சேத்===
[[பாலைவனம்]], [[புயல்]] முதலியவற்றின் கடவுளான [[சேத் கடவுள்|சேத்]] என்பவர், ஓரசின் தந்தை [[ஒசைரிஸ்|ஓசிரிசை]] கொன்றார். தன் தந்தையின் இறப்புக்குப் பழிதீர்க்கவும், தாய் [[இசிசு|இசிசுவின்]] கட்டளைப்படி எகிப்து மக்களைக் காக்கவும் ஓரசு கடவுள், சேத்துடன் போர்புரிந்தார்.<ref>[http://www.mnsu.edu/emuseum/prehistory/egypt/religion/godslist.html Ancient Egyptian Culture]</ref><ref>{{cite web|url=http://www.egyptianmyths.net/horus.htm|title=Ancient Egypt: the Mythology - Horus|work=egyptianmyths.net}}</ref> அப்போரில் ஓரசின் இடது கண்ணை (நிலா), சேத் கடவுள் குத்தியதால் அதன் ஒளி குன்றியது. இதுவே கதிரவனை விட நிலா ஒளி குறைவாக உள்ளதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது. ஓரசு சேத்தை தாக்கிய போது சேத்தின் விதைப்பையில் இருந்த ஒரு விதை விழுந்துவிடுகிறது. இதுவே பாலைவனத்தில் ஒருசில உயிர்கள் மட்டுமே வாழக் காரணம் என்று நம்பப்படுகிறது.
[[பாலைவனம்]], [[புயல்]] முதலியவற்றின் கடவுளான [[சேத் கடவுள்|சேத்]] என்பவர், ஓரசின் தந்தை [[ஒசைரிஸ்|ஓசிரிசை]] கொன்றார். தன் தந்தையின் இறப்புக்குப் பழிதீர்க்கவும், தாய் [[இசிசு|இசிசுவின்]] கட்டளைப்படி எகிப்து மக்களைக் காக்கவும் ஓரசு கடவுள், சேத்துடன் போர்புரிந்தார்.<ref>{{Cite web |url=http://www.mnsu.edu/emuseum/prehistory/egypt/religion/godslist.html |title=Ancient Egyptian Culture |access-date=2016-08-04 |archive-date=2010-06-04 |archive-url=https://web.archive.org/web/20100604111722/https://www.mnsu.edu/emuseum/prehistory/egypt/religion/godslist.html |dead-url=dead }}</ref><ref>{{cite web|url=http://www.egyptianmyths.net/horus.htm|title=Ancient Egypt: the Mythology - Horus|work=egyptianmyths.net}}</ref> அப்போரில் ஓரசின் இடது கண்ணை (நிலா), சேத் கடவுள் குத்தியதால் அதன் ஒளி குன்றியது. இதுவே கதிரவனை விட நிலா ஒளி குறைவாக உள்ளதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது. ஓரசு சேத்தை தாக்கிய போது சேத்தின் விதைப்பையில் இருந்த ஒரு விதை விழுந்துவிடுகிறது. இதுவே பாலைவனத்தில் ஒருசில உயிர்கள் மட்டுமே வாழக் காரணம் என்று நம்பப்படுகிறது.


===ஓரசின் கண் மற்றும் சென் மோதிரம்===
===ஓரசின் கண் மற்றும் சென் மோதிரம்===

22:48, 14 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

ஓரசு
துணைஆத்தோர்
பெற்றோர்கள்ஓசிரிசு, இசிசு
சகோதரன்/சகோதரிசேத், நெஃப்திசு
குழந்தைகள்இம்செட், துவாமுதெஃபு, கெபேசெனுவேஃபு

ஓரசு (Horus) பண்டைய எகிப்தின் சமயத்தின் முதன்மைக் கடவுளாவார். வல்லூறின் வடிவிலோ அல்லது வல்லூறின் தலை கொண்ட மனித வடிவிலோ குறிப்பிடப்படும் ஓரசு வானம், போர், வேட்டையாடுதல் ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார்.[1] இவருடைய வலது கண் ஞாயிறு கடவுள் ராவாகவும் இடது கண் திங்கள் கடவுளாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஓசிரிசு-இசிசு தம்பதியரின் மகனாக அறியப்படுகிறார். ஓரசின் மனைவி ஆத்தோர் ஆவார். ஓரசு கடவுளின் சென் மோதிரம் மற்றும் ஓரசு கண் சின்னம் பாதுகாப்பு மற்றும் நல் வாழ்வு வழங்கும் என பண்டைய எகிப்தியர்கள் நம்பினர்.

ஓரசு மற்றும் சேத்

பாலைவனம், புயல் முதலியவற்றின் கடவுளான சேத் என்பவர், ஓரசின் தந்தை ஓசிரிசை கொன்றார். தன் தந்தையின் இறப்புக்குப் பழிதீர்க்கவும், தாய் இசிசுவின் கட்டளைப்படி எகிப்து மக்களைக் காக்கவும் ஓரசு கடவுள், சேத்துடன் போர்புரிந்தார்.[2][3] அப்போரில் ஓரசின் இடது கண்ணை (நிலா), சேத் கடவுள் குத்தியதால் அதன் ஒளி குன்றியது. இதுவே கதிரவனை விட நிலா ஒளி குறைவாக உள்ளதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது. ஓரசு சேத்தை தாக்கிய போது சேத்தின் விதைப்பையில் இருந்த ஒரு விதை விழுந்துவிடுகிறது. இதுவே பாலைவனத்தில் ஒருசில உயிர்கள் மட்டுமே வாழக் காரணம் என்று நம்பப்படுகிறது.

ஓரசின் கண் மற்றும் சென் மோதிரம்

ஓரசு கடவுளின் கண் கொண்ட பதக்கம்
கழுகின் கைகளில் ஓரசு கடவுளின் சென் மோதிரம்

ஓரசின் கண் என்பது பாதுகாப்பு மற்றும் சக்தியைக் குறிக்கும் பண்டைய எகிப்தின் சமயச் சின்னமாகும். இது எகிப்திய மொழியில் வெத்செட் என்று அழைக்கப்படுகிறது.[4][5] இந்தக் கண் வத்செட், ஆத்தோர், பாசுடேட் மற்றும் மூத்து ஆகிய எகிப்திய பெண் கடவுள்களுடன் ஒப்பிடப்படுகிறது. சோசெங்க்-2 என்ற மம்மிக்களில் காணப்படும் ஏழு காப்புகளில் இந்தக் கண் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.[6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Wilkinson, Richard H. (2003). The Complete Gods and Goddesses of Ancient Egypt. Thames & Hudson. p. 202.
  2. "Ancient Egyptian Culture". Archived from the original on 2010-06-04. பார்க்கப்பட்ட நாள் 2016-08-04. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  3. "Ancient Egypt: the Mythology - Horus". egyptianmyths.net.
  4. Pommerening, Tanja, Die altägyptischen Hohlmaße (Studien zur Altägyptischen Kultur, Beiheft 10), Hamburg, Helmut Buske Verlag, 2005
  5. M. Stokstad, "Art History"
  6. Silverman, op. cit., p.228

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஓரசு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரசு&oldid=3237469" இலிருந்து மீள்விக்கப்பட்டது