உள்ளடக்கத்துக்குச் செல்

தி இங்கிலிஷ் பேசண்ட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(த இங்லிஷ் பேசண்ட் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
த இங்லிஷ் பேசண்ட்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்அந்தொனி மிங்கெலா
தயாரிப்புசௌல் சேண்ட்ஸ்
கதைஅந்தொனி மிங்கெலா(திரைக்கதை)
மைக்கல் ஒண்டாத்தி (நாவல்)
இசைகாப்ரியல் யார்ட்
நடிப்புரால்ப் பியெனேஸ்
க்ரிஸ்டின் ஸ்கோட் தோமஸ்
வில்லியம் டாபோ
ஜூலியட் பினோச்
கோலின் பெர்த்
நவீன் ஆண்ட்ரூஸ்
ஒளிப்பதிவுஜான் சீல்
விநியோகம்மீராமேக்ஸ் பில்ம்ஸ்
வெளியீடுகார்த்திகை 6 1996 (ஆங்கிலம்)
ஓட்டம்160 நிமிடங்கள்
மொழிஆங்கிலம்
ஜேர்மன்
இத்தாலிய மொழி
அரபு
ஆக்கச்செலவு$27,000,000 மில்லியன்

த இங்க்லிஷ் பேஷன்ட் (The English Patient) 1996இல் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இது இலங்கையரான மைக்கல் ஒண்டாத்தி என்பவரால் 1992 இல் எழுதப்பட்ட புதினத்தின் திரைப்பட வெளியீடாகும். மேலும் இத்திரைப்படம் காட்சியமைப்புகள் எடுக்கப்பட்டபோது ஒண்டாத்தி திரைப்படக் காட்சிகளை தனது விருப்பத்திற்கிணைய எடுக்க உதவினார் என்பதும், இத்திரைப்படம் 9 ஆஸ்கார் விருதுகளை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

வகை[தொகு]

போர்ப்படம் / காதல்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

உடல் முழுவதும் தீக்காயங்களுடன் கனேடிய செஞ்சிலுவைச் சங்கப் பெண்மணியினால் பாதுகாக்கப்படுகின்றார் கவுண்ட் டி அல்மசி (ரால்ப் பியெனேஸ்). பின்னர் அவர் தனது வாழ்க்கை வரலாற்றை நினைத்துக் கொள்வது திரைக்கதை அவர் அவ்வாறு நினைக்கும் பொழுது அவருக்கு எவ்வாறு இக்காயங்கள் நேர்ந்ததெனவும் கூறுகின்றார். மேலும் வேறொருவரின் மனைவியாகப் போகும் ஒருவரிடம் ஏற்படும் காதல் காரணமாக அவரை தன்னுடன் அழைத்துச் செல்லும் பொழுது ஏற்படுகின்ற பல பிரச்சினைகளை எவ்வாறு எதிர் கொண்டார் எனவும் தனது காயப்பட்ட காதலியினைக் இறுதியில் காப்பாற்ற முடியாத நிலையில் தத்தளிக்கின்றார். குகை ஒன்றினுள் அவரது காதலியினை வைத்து விட்டு உதவி தேடி பாலைவனங்களில் நடைபோட்டு அருகில் இருந்த பிரித்தானியப் படைத் தலைமைப் பீடத்திற்குச் செல்கின்றார். அங்கு உதவி கொடுக்க மறுக்கும் அவர்களால் கைவிடப்பட்ட நிலையில் ஜேர்மனிய நாசிப்படைகளால் உதவி வழங்கப்படுகின்றார். இதற்கிடையில் இறந்து போகும் அவரது காதலியின் உயிரை அவரால் காப்பாற்ற இயலவில்லை. இறுதியில் ஜேர்மனியர்களுக்கு பிரித்தானிய அரசுப் படைகளின் ரகசியங்களை விளக்குகின்றார். இதனை அறிந்து கொள்ளும் இவர் அவர்கள் வழங்கிய விமான ஊர்தியில் இற்ந்த காதலியின் உடலைக் கொண்டு வருகையில் பிரித்தானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்படுகின்றார். அவ்வாறு ஏற்பட்ட காயங்களே அவை என அவரிடம் கதை கேட்டவர்கள் புரிந்து கொள்கின்றனர்.

விருதுகள்[தொகு]

1997 ஆஸ்கார் விருது[தொகு]

 • வென்ற விருது: சிறந்த திரைப்படம்
 • வென்ற விருது: சிறந்த துணை நடிகை (ஜூலியட் பினோச்)
 • வென்ற விருது: சிறந்த கலை அலங்காரம் (ஸ்டூவார் கிரைக் மற்றும் ஸ்டெபனி மக்மிலன்)
 • வென்ற விருது: சிறந்த ஒளிப்பதிவு (ஜான் சீல்)
 • வென்ற விருது: சிறந்த உடை அலங்காரம் (ஆன் ரோத்)
 • வென்ற விருது: சிறந்த இயக்குனர் (அந்தொனி மிங்கெலா)
 • வென்ற விருது: சிறந்த படத்தொகுப்பு (வால்டர் மேர்ச்)
 • வென்ற விருது: சிறந்த இசையமைப்பு (காப்ரியல் யார்ட்)
 • வென்ற விருது: சிறந்த ஒலிப்பதிவு (நால்டர் மேர்ச், பார்க் பெர்கர், டேவிட் பார்க்கர், மற்றும் கிரிஸ்தோபர் நியூமன்)
 • பரிந்துரைக்கப்பட்டது: சிறந்த நடிகர் (ரால்ப் பியெனேஸ்)
 • பரிந்துரைக்கப்பட்டது: சிறந்த நடிகை (க்ரிஸ்டின் ஸ்கோட் தோமஸ்)
 • பரிந்துரைக்கப்பட்டது: சிறந்த எழுத்தாக்கம் (அந்தொனி மிங்கெலா)

1997 கோல்டன் குலோப் விருது[தொகு]

 • வென்ற விருது: சிறந்த திரைப்படம் - நாடகம்
 • வென்ற விருது: சிறந்த இயக்குனர் -(அந்தொனி மிங்கெலா)
 • வென்ற விருது: சிறந்த இசையமைப்பு -(காப்ரியல் யார்ட்)
 • பரிந்துரைக்கப்பட்டது: சிறந்த நடிகர் - (ரால்ப் பியெனேஸ்)
 • பரிந்துரைக்கப்பட்டது: சிறந்த நடிகை (க்ரிஸ்டின் ஸ்கோட் தோமஸ்)
 • பரிந்துரைக்கப்பட்டது: சிறந்த துணை நடிகை (ஜூலியட் பினோச்)
 • பரிந்துரைக்கப்பட்டது: சிறந்த திரைக்கதை (அந்தொனி மிங்கெலா)

துணுக்குகள்[தொகு]

 • இத்திரைப்படத்தில் வரும் காட்சிகள் தமிழ்த் திரைப்படமான 1992 ஆம் ஆண்டு வெளிவந்த குணா திரைப்படத்துடன் ஒத்தே இருப்பது குறிப்பிடத்தக்கது.
 • " இங்லிஷ் பேசண்ட்" என்ற புதினம் நூலாக 1992 லியே வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.