உள்ளடக்கத்துக்குச் செல்

பிலாடூன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலாடூன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஒலிவர் ஸ்டோன்
தயாரிப்புஜோன் டலி
டெரெக் கிப்சன்
எ.கிட்மன் ஹோ
அர்னோல்ட் ஹொப்பெட்சன்
கதைஒலிவர் ஸ்டோன்
நடிப்புசார்லி ஷீன்
வில்லியம் டபோ
டோம் பெரென்கெர்
ஃபாரஸ்ட் விட்டேக்கர்
ஜோன் சி.மக்கின்லி
ஜோனி டெப்
விநியோகம்ஓரியன் பிக்சர்ஸ
வெளியீடுடிசம்பர் 19 1986
ஓட்டம்120 நிமிடங்கள்.
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$13,000,000

பிலாடூன் (Platoon) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமாகும்.பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஒலிவர் ஸ்டோன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் 4 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

வகை

[தொகு]

போர்ப்படம்

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

அமெரிக்க இராணுவ வீரரான கிறிஸ் டெய்லர் (சார்லி ஷீன்) கிழக்கு வியட்னாமில் கார்ட்னெர் மற்றும் 25 ஆம் படைப்பிரிவருடன் வந்திறங்குகின்றார்.அங்கு போர் புரிந்து கொண்டிருந்த தனது ஏனைய அமெரிக்கப் படையினரைச் சந்தித்துக் கொள்ளும் இவர்கள் பார்னெ என்பவன் தலைமைப் பீடத்தில் வியட்னாமிய கிராமங்களுக்குள் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.இவர்களை எதிரிகள் பலமுனைகளிலும் தாக்கி அழித்தனர்.இச்சம்பவத்திற்குப்பின்னர் ஆட்திரம் அடையும் பார்னெ மற்றும் பல அமெரிக்கப் படையினர் பொது மக்களை கொல்வத்ம் இளம் வயதுப் பெண்களை பாலியல் கொட்மைகளுக்கு உற்படுத்தவும் முயல்கின்றனர்.இவற்றைப் பார்த்து கோபம் கொள்ளும் கிறிஸ் டெய்லர் இவர்களை அவ்வாறு செய்ய விடாது தகுக்கின்றான்.இதன் பின்னர் பல எதிரிகளின் பாசறைகளைக் கைப்பற்றவும் செய்கின்றனர்.அங்கு காவலில் ஈடுபட்டிருக்கும் பொழுது இவர்களின் எதிரிப் படையான வியட்னாமின் மக்கள் படையான வடக்கு வியட்னாமியப் படையினரால் பலமுறை தாக்குதலுக்கு உற்படுத்தப்படுகின்றனர்.இதன் பின்னரும் பார்னே கோபம் கொண்டு வியட்னாமியப் பொது மக்கள் மீதான தனது தாக்குதல்களை நிறுத்தாது இருக்கும்பொழுது கிறிஸால் சுட்டு வீழ்த்தப்படுகின்றான்.இவர்களது படைப்பிரிவினர் பலரின் இழப்புகளிற்குப் பின்னர் கிறிஸும் இன்னொரு படை வீரனும் தப்பி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலாடூன்_(திரைப்படம்)&oldid=2911571" இலிருந்து மீள்விக்கப்பட்டது