த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ்
The Silence of the Lambs
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜோனதன் டேம்
தயாரிப்புகேன்னேத் உட்
எட்வர்ட் சாக்ஸ்சன்
ரான் ரோஸ்மேன்
திரைக்கதைடெட் தெல்லி
இசைஹவார்ட் ஷோர்
நடிப்புஜோடி பாஸ்டர்
அந்தோணி ஹோப்கின்ஸ்
ஸ்காட் கிலன்
டெட் லெவின்
ஒளிப்பதிவுடாக் புஜிமொடோ
படத்தொகுப்புகிரைக் மெக்கே
விநியோகம்ஒரையன் பிக்சர்கள்
வெளியீடுபெப்ரவரி 14, 1991 (1991-02-14)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$19 மில்லியன் (135.9 கோடி)[1]
மொத்த வருவாய்ஐஅ$272.74 மில்லியன் (1,950.5 கோடி)[1]

த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (ஆங்கிலம்:The Silence of the Lambs) 1991 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். கேன்னேத் உட், எட்வர்ட் சாக்ஸ்சன், ரான் ரோஸ்மேன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஜோனதன் டேம் ஆல் இயக்கப்பட்டது. ஜோடி பாஸ்டர், அந்தோணி ஹோப்கின்ஸ், ஸ்காட் கிலன், டெட் லெவின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.

இளமையான் பி.வி.கூ பயிலுநர் கிளாரிசு சுடார்லிங் ஆக ஜோடி பாஸ்டர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். சுடார்லிங் திடீரென பயிற்சியிலிருந்து எடுக்கப்பட்டு பஃபல்லோ பில் என்று தொடர் கொலையாளியினை பிடிக்க களத்தில் இரக்கப்படுகிறார். இத்தொடர் கொலையாளி தனது பெண் இரைகளின் தோல்களை உறித்தெடுக்கும் பழக்கம் கொண்டவர். இதற்காக தற்போது சிறையிலுள்ள உளநோய் மருத்துவர் மற்றும் தன்னின உயிருண்ணி தொடர் கொலையாளி ஹானிபல் லெக்டரின் உதவியினை நாடுகிறார். லெக்டராக அந்தோணி ஹோப்கின்ஸ் நடித்துள்ளார்.[2]

பிப்ரவரி 14, 1991 அன்று இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் $272.7 மில்லியன் வருவாயினை ஈட்டியது. இத்திரைப்படத்தினைத் தயாரிப்பதற்கு $19 மட்டுமே செலவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

அகாதமி விருதுகள் வரலாற்றில் ஐந்து விருதுகள் - சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, மற்றும் சிறந்த தழுவியத் திரைக்கதை - வென்ற மூன்றாவது திரைப்படம் இதுவே. இட் ஹாப்பன்டு ஒன் நைட் (1934) மற்றும் ஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (1975)) இந்த ஐந்து விருதுகளையும் வென்ற பிறத் திரைப்படங்கள் ஆகும்.

சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்ற முதல் மற்றும் கடைசி திகில் திரைப்படம் இதுவே. இன்றுவரை ஆறு திகில் திரைப்படங்கள் மட்டுமே இவ்விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.[3]

தற்காலம் வரை பல்முறை விமர்சகர்களால் திரைப்பட வரலாற்றில் சிறந்தத் திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2018 இல் எம்பையர் மாத இதழின் 500 சிறந்த திரைப்படங்களில் இத்திரைப்படம் 48 ஆம் இடம் பிடித்தது..[4] அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் இத்திரைப்படத்தினை ஐந்தாவது சிறந்த திரைப்படம் எனவும் மிகச்சிறந்த திகில் திரைப்படம் எனவும் கருதுகிறது. அமெரிக்கக் காங்கிரசு நூலகம் இத்திரைப்படத்தினை கலச்சார ரீதியாகவும், கண்டுகளிக்கவும் முக்கியத்துவமானத் திரைப்படமாக கருதுகிறது.[5] 2001 ஆம் ஆண்டு இத்திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக ஹானிபல் வெளியிடப்பட்டது. ஹாப்கின்சு அதில் நடித்துள்ளார். இதன்பிறகு இரண்டு முற்தொடர்ச்சி திரைப்படங்கள் வெளியிடப்பட்டன, அவை: ரெட் டிராகன் (2002) மற்றும் ஹானிபல் ரைசிங்கு (2007).

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]