தன்னின உயிருண்ணி
தன்னின உயிருண்ணி (கானிபாலிசம்) இச்சொல் ஸ்பானிய மொழியிலிருந்து வந்த சொல் ஆகும். ஒரு இனத்தை சேர்ந்த உயிரினம் அதே இனத்தைச் சேர்ந்த இன்னொரு உயிரியை கொன்று உண்டு வாழ்பனவைகளை தன்னின உயிர் உண்ணி என் அமைக்கப்படுகின்றது. இச்சொல் விலங்கியல் அறிவியல் சொல்லாகப்பயன்படுத்தப்படுகின்றது.
(உ.தா இராசநாகம் என்ற பாம்பினம் தன் இனத்தைச் சேர்ந்த பிற பாம்பினங்களையே பொரும்பாலும் உண்டு வாழ்கின்றது இதை தன்னின உயிர் உண்ணி (கானிபாலிசம்) என்று அழைக்கின்றனர், குறிப்பு;-விலங்கியல் வகையில் உணவுக்காக தன்னினம் சார்ந்த உயிர்களை கொல்லுபவை (ஒப்பியோப்பேகி))
(கானிபாலிசம் என்ற ஆங்கில வார்த்தை விலங்கியலைத்தவிர பிற இடங்களிலும் வேறு பொருள் கொண்டவைகாளாகப் பயன்படுத்தப் படுகின்றது- உ.தா விமானக் கட்டுமானத்தளங்களில்)
மனிதர்களில் தன்னின உயிருண்ணிகள்
[தொகு]
முற்காலங்களில் மனிதர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தக் காலத்தில் இம்மாதிரி மனிதர்களை வேட்டையாடி மனிதர்களே உண்ணும் வழக்கம் இருந்து வந்த்து இவர்களை (நரமாமிச) மனித ஊனுண்ணி அ நரமாமிச பட்சிணி (ஆங்-ஆன்ந்த்ரோபோப்பேகி-(கானிபால்)) என்று அழைத்தனர்.
- இவர்கள் இரண்டுப்பிரிவாக பிரிக்கப்பட்டனர்.
- தன் பிரிவைச்சார்ந்த மனிதர்களை உண்பவர்கள் (என்டோகானிபாலிசம்)
- வெளிப்பிரிவைச் சார்ந்த மனிதர்களை உண்பவர்கள் (எக்டோ கானிபாலிசம்)
- மேலும் இவர்கள் இரண்டுப் பிரிவாகப் பிரிக்கப்படுகின்றனர்
- உணவுக்காக ஒரு உயிருள்ள மனிதனைக் கொள்வர்களை மனிதக் கொலை தன்னின உயிர் உண்ணி. (ஹோமிசைட் கானிபாலிசம்)
- முன்பே இறந்தவரின் உடலை உண்பவர்களை உணவுக்காண இறந்த மனிதனை உண்ணும் தன் இன உயிர் உண்ணி (நெக்ரோ கானிபாலிசம்)
மனிதன் தன்னின உயிருண்ணிகளாக வாழ்ந்த இடங்கள்
[தொகு]மனித தன்னின உயிர் உண்ணிகளாக முற்காலங்களில் ஐரோப்பிய நாடுகள்,[1][2] ஆப்பிரிக்கா[3], தென் அமெரிக்கா[4],சீனா[5], இந்தியா[6],ஆஸ்திரேலியா,வட அமெரிக்கா[7], சாலமன் தீவுகள், நியூசிலாந்து[8] ,புதிய கலிடோனியா, புதிய கென்யா, சுமத்ரா மற்றும் பிஜூத் தீவுகளில் மதசம்பிராதாயங்களுக்காகவும், காட்டுவாசிகளின் போர் புரியும் தன்மைகளுக்காவும் தன்னின உயிருண்ணிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். பிஜூத் தீவுகளில் இவ்வின மக்கள் வாழ்ந்த்தாக சான்றுகள் உள்ளன.
தற்பொழுதும் இம்மாதிரி உண்ணும் முறைகள் குற்ற செயல்களாக செய்யப்படுகின்றன. மனிதர்களில் சிலர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இம்மாதிரி உணவுமுறைகளை கையாள்கின்றனர். சட்டத்தின்படி தடைசெய்யபட்டாலும் இம்மாதிரி செயல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்கள் தன்னின உயிருண்ணிகளாக வாழக் காரணங்கள்
[தொகு]- மனிதர்கள் தன்னின உயிருண்ணிகளாக முற்காலங்களில் வாழக்காரணங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டவை.
- அவர்களாகவை வகுத்துக்கொண்ட கலாச்சார விதிமுறைகளுக்காவும்,
- உணவு பஞ்சம் ஏற்பட்ட நிலையில் வேறு வழி செய்வதியறியா நிலையினாலும்,
- மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தன்னிலை மறந்த நிலையிலும்,
மனிதர்கள் இம்மூன்று காரணங்களுக்காவும்தான் இவ்வுணவு முறையை கையாண்டிருப்பர் எனக் கூறப்படுகின்றது.
இந்தியாவின் சமீபத்திய தன்னின உயிருண்ணி
[தொகு]இது 2006, 2007[9],ஆண்டுக்குமிடையே நடந்த ஒரு குற்ற நிகழ்வாகும் உத்திரபிரதேச மாநிலத்தில் தில்லி புற நகர் பகுதியான நொய்டாவில்[9] உள்ள நிதாரி கிராமத்தில் உள்ள தொழிலதிபர் மொகிந்தர் சிங்[9] மற்றும் அவருடைய காவலாளி மற்றும் பணியாளாரன மணிந்தர் சிங் இருவரும் சேர்ந்து சுமார் 30 சிறுமியர்கள் மற்றும் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியபின் அவர்களின் உடல் உறுப்புகளை தின்றதாக வாக்குமூலத்தில் குற்றவாளிகளே உறுதி[9] செய்த அதிர்ச்சி நிகழ்வு, இந்தியாவின் தன்னின உயிருண்ணிகளுக்கு எடுத்துக்காட்டாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "உண்ணக்கூடிய உயிரற்றவைகள்". Archived from the original on 2010-03-16. Retrieved 2009-04-13.
- ↑ "சுசில், பி: போரின் துவக்கம் மதிப்பாய்வு: வன்முறைகளின் முற்கால வரலாறு", ஜின் கல்லைன் மற்றும் ஜின் ஜம்மித்". Archived from the original on 2007-09-01. Retrieved 2021-08-31.
- ↑ தன்னின உயிருண்ணி - நேசிப்பதை தெரிந்துகொள் 1911
- ↑ ஹேன்ஸ் ஸ்டேடன் டுப்பிநம்பாஸ் பற்றியவைகள்
- ↑ ஒகாடா ஹைட்ஐரோ, சூகோக்கு இகெய்சி பரணிடப்பட்டது 2009-05-04 at the வந்தவழி இயந்திரம், டோக்கியோ: ஷின்ஷோகன், 1997, பக்கங்கள். 130-143
- ↑ இந்து தன்னின உயிருண்ணிகள் என்ற இந்திய ஆவணத்தை உற்றுநோக்குகையில்
- ↑ "இந்திய பழங்கால தன்னின உயிருண்ணிகளின் ஆய்வகச் சோதனை முடிவுகளின்படி". Archived from the original on 2008-07-06. Retrieved 2009-04-13.
- ↑ தன்னின உயிருண்ணி, அ மனித ஊனுண்ணி (நரமாமிசம் பட்சிணி) -- பிரிட்டானிகா இணையத்தளம் தகவற்களஞ்சியம்
- ↑ 9.0 9.1 9.2 9.3 யாழ் தமிழ் கருத்துக்களம் மொகிந்தரின் தொடர் கொலைகள்[தொடர்பிழந்த இணைப்பு]செய்தி 04.01.2007,