உள்ளடக்கத்துக்குச் செல்

பைசிக்கிள் தீஃவ்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைசிக்கிள் தீவ்ப்ஸ்
இயக்கம்வித்தோரியோ டி சில்கா
தயாரிப்புகியுசெப்பெ அமெதோ
கதைலூகி பர்த்தோலினி,
சீசர் சவார்த்தினி
நடிப்புலம்பேர்டோ மக்கியோரானி,
என்சோ ஸ்டையோலா
விநியோகம்Ente Nazionale Industrie Cinematografiche (இத்தாலி)
Arthur Mayer & Joseph Burstyn Inc. (US)
வெளியீடுநவம்பர் 24, 1948 (இத்தாலி)
ஓட்டம்93 நிமிடங்கள்
மொழிஇத்தாலியன்

பைசிக்கிள் தீஃவ்ஸ் (Bicycle Thieves)திரைப்படம் இத்தாலி மொழியில் வெளிவந்த கலைப்படமாகும்.பிரபல கலைப்பட இயக்குனரான வித்தோரியொ டி சில்காவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படமே இந்தியக் கலைப்பட இயக்குனரானசத்யஜித் ராயைத் திரைப்பட இயக்குனராக மாற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வகை

[தொகு]

கலைப்படம்

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இரண்டாம் உலக யுத்தத்தின் காலப்பகுதியில் இத்தாலி நாட்டில் வாழ்ந்த அந்தோனியோ சுவரொட்டிகள் ஒட்டும் வேலை செய்து வருகிறார். அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் சட்டப்படி ஒரு மிதிவண்டியை வைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமானதாகக் கருதப்பட்டது. அந்தோனியோவின் மனைவியும் இவருக்கு தம்மிடம் இருந்த பொருளை விற்று அவருக்கு மிதிவண்டியொன்றை வாங்கித் தருகின்றார். அவர் மிதிவண்டியை நிறுத்திவிட்டு சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருக்கும்போது அந்த மிதிவண்டியும் திருட்டுப் போய்விடுகின்றது. திருட்டுப் போன மிதிவண்டியினைத் தேடி அலைகின்றனர் அந்தோனியோவும் அவரின் மகனும். இவ்வாறு பல இடங்களில் தேடியும் கிடைக்கப் பெறாத அந்த மிதி வண்டிக்காக ஒரு மிதிவண்டியைத் திருட நினைத்து திருடவும் சென்றார் அந்தோனியோ ஆனால் அம்மிதிவண்டிக்குச் சொந்தக்காரனோ அதனைப் பார்த்து பின்னர் மன்னித்து அனுப்புகின்றார். இவ்வாறு நடக்கும் காலத்தில் தனது வேலையை திரும்பப் பெறவும் முயற்சிக்கின்றார் அந்தோனியோ.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசிக்கிள்_தீஃவ்ஸ்&oldid=2915983" இலிருந்து மீள்விக்கப்பட்டது