ஜொகூர் அரச இராணுவப் படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜொகூர் அரச இராணுவப் படை
Royal Johor Military Force
Askar Timbalan Setia Negeri Johor
عسكر تيمبلن ستيا نڬري جوهر
ஜொகூர் அரச இராணுவப் படையின் சின்னம்
உருவாக்கம்11 மே 1886; 137 ஆண்டுகள் முன்னர் (1886-05-11)
நாடு Malaysia
பற்றிணைப்பு ஜொகூர் சுல்தான்
வகைதனியார் இராணுவம், அரச காவலர், தரைப்படை
பொறுப்பு* முதன்மை: ஜொகூர் சுல்தான், அரச குடும்பம், அரச சொத்துக்களைப் பாதுகாத்தல்.
அளவு425[1]
அரண்/தலைமையகம்சுல்தான் இப்ராகிம் முகாம், ஜொகூர் பாரு
சுருக்கப்பெயர்(கள்)"சுல்தானின் சொந்த மெய்க்காப்பாளர்கள்"[2]
"சுல்தானின் படைகள்"[3]
பாதுகாவலர்ஜொகூர் சுல்தான்
குறிக்கோள்(கள்)உண்மையுடன் கீழ்ப்படியுங்கள்
(Taat dengan setia)
நிறம்
  • அலகு:          நீலம் - மஞ்சள்
  • நிறம்:      பச்சை
ஆண்டு விழாக்கள்11 மே மாதம்
சண்டைகள்
தளபதிகள்
படைத்தலைவர்சுல்தான் இப்ராகிம் இசுகந்தர், ஜொகூர் சுல்தான்
கட்டளை அதிகாரிமேஜர் ஜெனரல் துங்கு இசுமாயில் இட்ரிஸ், ஜொகூர் பட்டத்து இளவரசர்
வானூர்திகள்
உலங்கு வானூர்திசிக்கோர்ஸ்கி S-76

ஜொகூர் அரச இராணுவப் படை (ஆங்கிலம்: Royal Johor Military Force (JMF); மலாய்: Askar Timbalan Setia Negeri Johor; சீனம்: 柔佛御林军) என்பது ஜொகூர் மாநிலத்தின் அரச பாதுகாப்புப் படை; மற்றும் ஜொகூர் சுல்தானின் தனியார் அரசக் காவலர் படையும் ஆகும். மலேசியாவில் இன்றும் செயல்பாட்டில் உள்ள மிகப் பழமையான இராணுவப் பிரிவு; மற்றும் மலேசியாவில் ஒரு மாநில அரசால் பராமரிக்கப்படும் ஒரே இராணுவப் படையும் ஆகும்.[3][2]

இந்தப் பாதுகாப்புப் படை ஜொகூர் சுல்தானின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இதன் தலைமையகம் ஜொகூர் பாருவில் உள்ள சுல்தான் இப்ராகிம் முகாமில் அமைந்துள்ளது.[4]

பொது[தொகு]

1946-ஆம் ஆண்டில் மலாயா கூட்டமைப்பில் ஜொகூர் மாநிலம் இணையும் போது தன்னுடைய அரச பாதுகாப்புப் படையைத் தக்க வைத்து கொள்ள முடியும் எனும் துணை விதி, மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டது.[5] மலேசிய அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணை (Ninth Schedule of the Constitution of Malaysia), மலேசிய நாட்டின் வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவப் படைகளுக்கு மலேசிய கூட்டாட்சி அரசாங்கம் மட்டுமே பொறுப்பு என்று கூறுகிறது.[6]

எந்த வகையான அவசரகாலம்; மற்றும் ஆயுத மோதல்களின் போது மலேசிய ஆயுதப் படைகளின் கீழ் ஜொகூர் அரச பாதுகாப்புப் படை ஈடுபடும்.[7]

நவீன இராணுவப் படை[தொகு]

1886-ஆம் ஆண்டு நவீன ஜொகூரின் முதல் சுல்தானான சுல்தான் அபு பக்கரின் ஆட்சியின் போது ஜொகூர் அரச பாதுகாப்புப் படை நிறுவப்பட்டது.[8]

மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் மற்றும் மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் அமைப்புகளில், ஜொகூர் மாநிலம் மட்டுமே அதன் நவீன இராணுவப் படையைக் கொண்ட முதல் மற்றும் ஒரே மலாய் மாநிலம் ஆகும். அந்தக் காலக்கட்டத்தில் வேறு எந்த மலாய் மாநிலமும் அதன் சொந்த இராணுவத்தைக் கொன்டிருக்கவில்லை.[3]

ஆங்கிலோ-ஜொகூர் உடன்படிக்கை[தொகு]

1885-ஆம் ஆண்டு சுல்தான் அபு பக்கர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா ஆகியோரால் இலண்டன், ஐக்கிய இராச்சியத்தில் ஆங்கிலோ-ஜொகூர் உடன்படிக்கை கையெழுத்தானது. அதன் அடிப்படையில், அமைதியை நிலைநாட்டவும், வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து சிங்கப்பூர், ஜொகூர் பிரதேசங்களைப் பாதுகாக்கவும் அந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.[9]

அதன் பின்னர் ஜொகூர் அரச இராணுவப் படை தோற்றுவிக்கப்பட்டு; இன்று வரையில் செயல்பாட்டில் உள்ளது. இந்தப் படையின் தளபதியாக ஜொகூர் சுல்தான் பொறுப்பு வகிக்கிறார்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sultan Ibrahim proposes Johor govt involve JMF personnel during disasters".
  2. 2.0 2.1 "Titah Ucapan Penuh D.Y.M.M Sultan Ibrahim Ibni Almarhum Sultan Iskandar Sultan Yang Dipertuan Bagi Negeri Dan Jajahan Takluk Johor Darul Ta'zim". Demi Rakyat Johor. 11 May 2016. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
  3. 3.0 3.1 3.2 Tunku Shahriman Tunku Sulaiman (December 2004). "The Johore Military Forces: The Oldest Army Of Malaysia Regulars In The Peninsula". Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society. https://tunkushahriman.wordpress.com/2009/11/26/the-johore-military-forces-the-oldest-army-of-malaysia-regulars-in-the-peninsula/. 
  4. "Askar Timbalan Setia Negeri Johor (TSN)". Sang Jakas Biru. 21 April 2011. பார்க்கப்பட்ட நாள் 12 June 2019.
  5. "Johor crown prince warns that state may secede if Putrajaya breaches federation's terms". The Straits Times (Kuala Lumpur). 16 October 2015. http://www.straitstimes.com/asia/se-asia/johor-crown-prince-warns-that-state-may-secede-if-putrajaya-breaches-federations-terms. 
  6. "Di Sebalik Nama: JMF". Radio Televisyen Malaysia. 31 December 2016. Archived from the original on 2021-12-15. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
  7. New, Jo-Lyn (19 June 2015). "Why is Johor the only Msian state with its own private army?". CILISOS. http://cilisos.my/why-is-johor-the-only-malaysian-state-with-its-own-private-army/. 
  8. Dang Ku Puteri (6 March 2018). "Askar Timbalan Setia Negeri Johor/Johor Military Forces: Sebuah Pengenalan". The Patriots. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
  9. "Interesting Fact-History of Johor-Formation of Johor Military Force". JOHOR Southern Tigers. 17 April 2011. பார்க்கப்பட்ட நாள் 13 June 2019.
  10. "The Sultan's Troop". The Straits Times. 13 November 1948. https://pbs.twimg.com/media/DkYZMQGUwAEy8lN.jpg. 

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொகூர்_அரச_இராணுவப்_படை&oldid=3937829" இலிருந்து மீள்விக்கப்பட்டது