உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய தரைப்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய தரைப்படை
Malaysian Army
Tentera Darat Malaysia
تنترا دارت مليسيا
மலேசிய தரைப்படையின் சின்னம்
உருவாக்கம்1 மார்ச்சு 1933; 91 ஆண்டுகள் முன்னர் (1933-03-01)
நாடு மலேசியா
வகைஇராணுவம்
பொறுப்புநிலப் போர்
அளவு80‚000 போர் வீரர்கள்[1][2]
50,000 இருப்பு பணியாளர்கள்[1]
பகுதி மலேசிய பாதுகாப்பு படைகள்
பாதுகாவலர்மலேசிய அரசர்
குறிக்கோள்(கள்)துணிச்சலான விசுவாசம்
(Gagah Setia); ("Strong and Loyal")
நிறம்     சிகப்பு;      தங்கம்
ஆண்டு விழாக்கள்மார்ச் 1-ஆம் தேதி
சண்டைகள்
இணையதளம்army.mil.my
தளபதிகள்
தலைமைத் தளபதிமலேசிய அரசர், சுல்தான் இப்ராகிம் இசுகந்தர்
தரைப்படைத் தளபதிமுகமட் அபிசுடின் ஜந்தான்
Colonel of
the Regiment
தெங்கு முகமட் பவுசி
படைத்துறைச் சின்னங்கள்
கொடி

மலேசிய தரைப்படை ஆங்கிலம்: Malaysian Army; மலாய்: Tentera Darat Malaysia) என்பது மலேசிய பாதுகாப்பு படைகளில் உள்ள மூன்று படைப்பிரிவுகளில் பெரிய பிரிவாகும்.

மலேசியாவின் எல்லை கண்காணிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, அமைதி நிலைநாட்டல், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின்போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும் ஈடுபடுகின்றது. மலேசியத் தரைபடை மலேசிய தற்காப்பு அமைச்சின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.

மலேசிய இராணுவத்தில் மலேசிய தரைப்படை மட்டும் ‘அரச’ என்ற பட்டத்தைப் பெறவில்லை. இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவப் படைகள் மற்றும் படைப்பிரிவுகளுக்கு ‘அரச’ பட்டம் வழங்கப்படுகிறது. மற்ற மலேசிய கடற்படை; மலேசிய வான்படை ஆகிய இரு படைகளும் ‘அரச’ என்ற பட்டத்துடன் செயல்படுகின்றன.

சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் தலைமைத் தளபதியாக பொறுப்பு வகிக்கிறார்.

வரலாறு

[தொகு]

1 மார்ச் 1861-இல், பினாங்கு தன்னார்வ ரைபிள் பிரிவு (Penang Volunteer Rifle) எனும் பெயரில் மலேசியாவின் முதல் இராணுவப் பிரிவு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1915 முதல் 1936 வரை மற்றும் ஒரு பிரிவு இயங்கியது. அதன் பெயர் மலாயா மாநிலங்களின் தன்னார்வ ரைபிள் பிரிவு (Malay States Volunteer Rifle).

1933 ஆம் ஆண்டு சனவரி 23-ஆம் தேதி, மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தலைமை மன்றம், மலாய் படையணி (Malay Regiment) சட்ட முன்வரைவை நிறைவேற்றியபோது நவீன மலேசிய இராணுவப்படை தோன்றியது. அதைத் தொடர்ந்து, மார்ச் 1, 1933-இல், 25 இளைஞர்களைக் கொண்டு மலாய் இராணுவத்தில் ஒரு தற்காலிகப் பிரிவு உருவாக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போர்

[தொகு]

இந்தப் படைப்பிரிவு 1 சனவரி 1938-இல் மலாயா சிப்பாய் படைப்பிரிவின் முதல் படைத்துறைப் பிரிவு என முழு படைத்துறைப் பிரிவாகத் தொடர்ந்தது. மலாயாவில் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு, 1941 டிசம்பர் 1 அன்று இரண்டாம் படையணி நிறுவப்பட்டது.

இந்த இரண்டு படைத்துறைப் பிரிவுகளும் சப்பானிய இராணுவத்திற்கு எதிரான போரில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தின. போருக்குப் பிறகு, நாடு கம்யூனிச அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. மற்றும் 1948-இல் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டது. 1950 வாக்கில் மலாயா சிப்பாய் படைப்பிரிவின் பலம் ஏழு படைத்துறைகளாக அதிகரிக்கப்பட்டது.

அமைப்பு

[தொகு]

உத்திசார்ந்த அமைப்பு

[தொகு]
சிங்கப்பூர் போர் நடைபெறுவதற்கு முன்னர் மலேசியத் தரைப்படையினரின் போர்ப் பயிற்சிகள்.

மலேசியத் தரைப்படையில் தற்போது 18 படைப்பிரிவு (Corps) மற்றும் படை அணிகள் (Regiments) உள்ளன. இவை 3 முக்கிய கூறுகளாக தொகுக்கப்பட்டுள்ளன;

  • போர்ப் பிரிவு
  • போர்முனை ஆதரவுப் பிரிவு
  • ஆதரவு பிரிவு

ஐந்து பெரும் பிரிவுகள்

[தொகு]

மலேசிய தரைப்படையின் அனைத்துப் பிரிவுகளும் மற்றும் படை அணிகளும் தற்போது ஐந்து பெரும் பிரிவுகளாக (Divisions) உள்ளன. இந்த ஐந்து பிரிவுகளில் 2-ஆவது, 3-ஆவது மற்றும் 4-ஆவது பிரிவு எனும் மூன்று பிரிவுகளும் தீபகற்ப மலேசியாவில் மேற்கு கள இராணுவ தலைமையகத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

மற்ற இரண்டு பிரிவுகளான 1-ஆவது பிரிவு மற்றும் 5-ஆவது பிரிவு; கிழக்கு மலேசிய போர்னியோவை அடிப்படையாகக் கொண்டவை. அவை கிழக்கு கள இராணுவ தலைமையகத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

21-ஆவது சிறப்பு சேவைக் குழு (இராணுவத்தின் சிறப்புப் படைகள்), 10-ஆவது வான்குடை படைப்பிரிவு மற்றும் இரண்டு இராணுவ விமானப் படைப்பிரிவுகள் சுதந்திரமான அமைப்புகளாகும்.

தரவரிசை அமைப்பு

[தொகு]

மலேசிய இராணுவம் பிரித்தானிய இராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட தரவரிசை அமைப்பைப் பயன்படுத்துகிறது. மலேசிய இராணுவ தரவரிசை அமைப்பு அடிநிலை (Private) முதல் ஜெனரல் (General) வரை 17 நிலைகளைக் கொண்டுள்ளது.

இந்த தரவரிசைகள் 2 முக்கிய குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன: அதிகாரி (Officer); மற்றும் பிற தரவரிசைகள் (Other Ranks). இதில் படைத்துறைப் பணி வகிக்காத அதிகாரி (Non-Commissioned Officer) தரவரிசைகள் அடங்கும்.[3]

இராணுவத் தரவரிசை

[தொகு]
பதவி பொது அதிகாரி
மார்சல் அட்மிரல் லெப்டினன்ட் ஜெனரல் மேஜர் ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் கர்னல் லெப்டினன்ட் கர்னல் மேஜர் கேப்டன் லெப்டினன்ட் இரண்டாவது லெப்டினன்ட் போர் வீரர்கள்
மலாய் பெயர் Fil Marsyal Jeneral Leftenan Jeneral Mejar Jeneral Brigedier Jeneral Kolonel Leftenan Kolonel Mejar Kapten Leftenan Leftenan Muda Pegawai Kadet
தோள்கச்சை
பதவி அதிகாரிகள்; வீரர்கள்
வாரண்ட் அதிகாரி I வாரண்ட் அதிகாரி II பணியாளர் சார்ஜென்ட் சார்ஜென்ட் கார்போரல் சிப்பாய் பிரைவேட்.
மலாய் பெயர் Pegawai Waran I Pegawai Waran II Staf Sarjan Sarjan Koperal Lans Koperal Prebet
கைப்பட்டை

படைப் பிரிவுகள்

[தொகு]

மலேசியத் தரைப்படை 18 படைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: இந்த 18 படைப்பிரிவுகள் போர் துருப்புக்கள், போர் ஆதரவு துருப்புக்கள் மற்றும் ஆதரவுப் படைகள் என பிரிக்கப்பட்டு உள்ளன:

ACV-300 தரைப்படை வாகனம்
மலேசிய இராணுவ வீரர்கள்
அரச மலாய் ரெஜிமென்ட் கெளரவ காவலர்
தரைப்படையினரின் செயல்விளக்கம்
தரைப்படையினரின் கவச வாகனச் செயல்விளக்கம்

போர்ப் படை

[தொகு]
  • அரச மலாய் படையணி(Rejimen Askar Melayu DiRaja)- முதன்மையான படை; முக்கியமாக மலாய்க்காரர்களைக் கொண்டது; மொத்தம் 25 படைத்துறைப் பிரிவுகள்: 20 தரைப்படைத்துறைப் பிரிவுகள், 2 இயந்திரமய தரைப்படைதுறைப் பிரிவுகள், 2 வான்வழி படைத்துறைப் பிரிவுகள்; ஒரு தளவாட ஆதரவு படைத்துறைப் பிரிவு; 10-ஆவது வான்வழிப் படைத்துறை
  • அரச ரேஞ்சர் படையணி(Rejimen Renjer DiRaja) - முதன்மைப் படை: 9 படையணிகள்
  • எல்லைப் படையணி (Rejimen Sempadan) - 2008-இல் நிறுவப்பட்டது; நாட்டின் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளது; 2008-க்கு முன், உள்நாட்டு பாதுகாப்பு தயார்நிலை படையணி.[4]
  • கவச வாகன படையணி(Kor Armor DiRaja) - 5 படையணிகள்: 4 கவச வாகன படையணிகள், 1 போர் முனை படையணி

போர்முனை ஆதரவுப் படை

[தொகு]
  • அரச பீரங்கி படையணி(Rejimen Artileri Diraja) - தரைப்படைகள், வான் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவுப் படையணி[5]
  • அரச தகவல் தொடர்பு படையணி(Rejimen Semboyan Diraja) - தகவல் செயல்பாடுகள், தகவல் தொடர்பு உத்திகள், மின்னணு செயல்பாடுகள், ராடார் முன் எச்சரிக்கை படையணி
  • அரச இராணுவ காவலர் படையணி(Kor Polis Tentera DiRaja) - இராணுவ ஒழுக்கத்தைப் பேணுதல்; மற்ற வீரர்களின் நடத்தையைக் கட்டுப்படுத்துதல்; இராணுவ இடங்களைப் பாதுகாத்தல்; படையினரின் குற்றச் செயல்களைக் கையாளுதல்
  • அரச இயந்திர படையணி(Rejimen Askar Jurutera DiRaja) - இலக்குகளை வெடிக்கச் செய்வது; வெடிக்கச் செய்து இராணுவ வசதிகளை உருவாக்குவது
  • அரச மின்சார இயந்திர படையணி(Kor Jurutera Letrik dan Jentera DiRaja)- இராணுவ வாகனங்கள், மின் உற்பத்தி வசதிகள் போன்றவற்றைப் பழுது பார்ப்பது
  • அரச ஆபத்து படையணி(Kor Risik DiRaja)- உளவு பார்த்தல்; இராணுவச் சூழ்நிலைகளைக் கண்காணித்தல்; எதிர்-உளவு உத்திகள்; உளவியல் தந்திரங்களில் நிபுணத்துவப் பணிகள்

ஆதரவுப் படை

[தொகு]
  • அரச ஆயுதப் படையணி (Kor Ordnans DiRaja)- வெடிமருந்துகள், மருந்து, உணவு மற்றும் பிற பொருட்களைப் போர்முனைக்கு கொண்டு செல்லுதல்
  • பொதுச் சேவை படையணி(Kor Perkhidmatan Am)- இராணுவ மேலாண்மைப் பணிகள்
  • அரச மருத்துவவ் படையணி(Kor Kesihatan DiRaja) - மருத்துவர்கள்; மருத்துவச் சேவைகள்; அறுவை சிகிச்சைகள; கள மருத்துவமனைகள்[6]
  • அரச சேவை படையணி(Kor Perkhidmatan DiRaja)- தளவாட சேவைகளை; வீரர்கள் போக்குவரத்து; வாகனங்களின் பாகங்களை சரிசெய்தல்
  • சமயத்துறை படையணி(Kor Agama Angkatan Tentera)- இராணுவத்தில் மத விழாக்க: மத விவகாரங்களைக் கையாளும் பொறுப்பு

தயார்நிலைக் குழு

[தொகு]
  • வத்தானியா வீரர்கள் படையணி(Rejimen Askar Wataniah)- இரண்டாம் நிலை தன்னார்வத் தேசிய பாதுகாப்புப் படை; எந்த நேரத்திலும் நாட்டுக்குச் சேவை செய்யும் பொதுமக்கள சார்ந்த படையணி

சிறப்புப்பணிக் குழு

[தொகு]
  • சிறப்பு நடவடிக்கை படையணி (Pasukan_Gerakan_Khas Rejimen Gerak Khas) - தந்திர உத்திகள், பயங்கரவாத எதிர்ப்புத் தந்திரங்கள்; சிறப்பு இராணுவ பணிகள்; உயரடுக்கு போர் வீரர்கள்.
  • வான் தரைப்படை அணி(Pasukan Udara Tentera Darat)- உலுங்கூர்தி போக்குவரத்து; வான்வழி ஆதரவு; வான்வழி உளவு

வான் தரைப்படை அணி

[தொகு]
அகசுதாவெசுட்லேண்ட் AW109 இலகுரக உலங்கூர்திகள்.

மலேசியத் தரைபடை ஆங்கிலம்: Army Air Corps; மலாய்: Pasukan Udara Tentera Darat) அரச மலேசிய விமானப்படை அதிகாரிகளைக் கொண்டு இந்த வான் தரைப்படை அணி இயங்குகிறது. வான் தரைப்படை அணி ஒரு புதிய அணியாகும். இந்த அணி போக்குவரத்துத் திறன், வான் ஆதரவு, இலகுரக உலங்கூர்திகளைப் பயன்படுத்தி உளவு பார்ப்பது போன்ற செயல்களுக்குப் பொறுப்பு வகிக்கிறது.. இந்த அலகு தற்போது மூன்று படைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது.

  • 881 வான் படைப்பிரிவு
  • 882 வான் படைப்பிரிவு
  • 883 வான் படைப்பிரிவு

வான் தரைப்படை அணியின் படைத் தளம் ஜொகூர், குளுவாங் நகர்ப் பகுதியில் உள்ளது. 2019-ஆம் ஆண்டில், இந்த வான் அணியில் 10 அகசுதாவெசுட்லேண்ட் AW109 இலகுரக உலங்கூர்திகள்; மற்றும் 14 சிகோர்சுகி S61A-4 நடுத்தர உலங்கூர்திகள்; கூடுதலாகச் சேர்க்கப்பட்டன.[7][8]

882 வான் படைப்பிரிவில் அதன் பழைய சிகோர்சுகி S61A-4 க்கு பதிலாக புதிய சிகோர்சுகி UH-60 பிளாக்ஆக் உலங்கூர்திகளைப் பெற்றது. அதே வேளையில், 2022-ஆம் ஆண்டில், 883 வான் படைப்பிரிவில் 6 MD530G ரக இலகு ரக உலங்கூர்திகள் சேர்க்கப்பட்டன.[9][10]

மலேசிய தரைப்படையின் தளவாடங்கள்

[தொகு]

தகரிகள்

[தொகு]
மாதிரி படம் தயாரிப்பு வகை மாதிரி எண்ணிக்கை விவரங்கள்
PT-91 இலகு தகரி  போலந்து முதன்மை போர் தகரி PT-91M 48 சுடுகலன்: 125 மி.மீ. குழல் விட்டம் - 2A46MS தகரி சுடுகலன்
FV-101 சுகார்பியன் இலகு தகரி  ஐக்கிய இராச்சியம் இலகு தகரி 26 சுடுகலன்: 90 மி.மீ. குழல் விட்டம்(மீட்கப்பட்டு விட்டது)[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 International Institute for Strategic Studies (15 February 2023). The Military Balance 2023. London: Taylor & Francis. p. 270. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-00-091070-9.
  2. International Institute for Strategic Studies (25 February 2021). The Military Balance 2021. London: Routledge. p. 281. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-03-201227-8.
  3. "Mohammad dilantik Panglima Angkatan Tentera, Affendi bersara". hmetro. 6 September 2023. https://www.hmetro.com.my/mutakhir/2023/09/1007018/mohammad-dilantik-panglima-angkatan-tentera-affendi-bersara. 
  4. "Rejimen sempadan ditubuh". Utusan Malaysia. 30 January 2008. http://ww1.utusan.com.my/utusan/special.asp?pr=PR11&y=2008&dt=0130&pub=Utusan_Malaysia&sec=Muka_Hadapan&pg=mh_10.htm. 
  5. "Malaysia To Buy Starstreak V-Shorads Missiles". Defense World. 30 July 2015. பார்க்கப்பட்ட நாள் 19 October 2015.
  6. "Malaysian Flag Flying High in Afghanistan". Bernama. NAM News Network. 24 October 2010. பார்க்கப்பட்ட நாள் 25 October 2010.
  7. Ibrahim, Adnan (12 March 2018). "PUTD terima pesawat baharu Jun ini". Berita Harian. https://www.bharian.com.my/berita/nasional/2018/03/398644/putd-terima-pesawat-baharu-jun-ini. 
  8. "Janes | Latest defence and security news".
  9. "Black Hawk Diperoleh Secara Sewaan, Penutup Jurang Sementara Ketiadaan Nuri". 11 March 2023.
  10. "MD530G Delivery Date".
  11. "Scorpions to be Retired – Malaysian Defence". Archived from the original on 2021-03-08. பார்க்கப்பட்ட நாள் 2020-10-30.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_தரைப்படை&oldid=4108110" இலிருந்து மீள்விக்கப்பட்டது