சேத்துப்பட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சேத்துப்பட்டு
CHETPET
சிறப்பு நிலை பேரூராட்சி
சேத்துப்பட்டு நகரம்
சேத்துப்பட்டு நகரம்
அடைபெயர்(கள்): சேத்பட்
சேத்துப்பட்டு is located in தமிழ் நாடு
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு is located in இந்தியா
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
ஆள்கூறுகள்: 12°27′59″N 79°21′02″E / 12.4665154°N 79.3506284°E / 12.4665154; 79.3506284ஆள்கூறுகள்: 12°27′59″N 79°21′02″E / 12.4665154°N 79.3506284°E / 12.4665154; 79.3506284
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
வருவாய் கோட்டம்செய்யாறு
சட்டமன்றத் தொகுதிபோளூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
நிர்மாணித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைசிறப்பு நிலை பேரூராட்சி
 • Bodyசேத்துப்பட்டு பேரூராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்ஆரணி
 • மக்களவை உறுப்பினர்திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு. சேகரன்
 • மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
பரப்பளவு[1]
 • மொத்தம்72
பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்19,827
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு606801
இந்தியாவில் தொலைபேசி எண்கள்91-4181
வாகனப் பதிவுTN 97
ஊராட்சி ஒன்றியம்சேத்துப்பட்டு
சென்னையிலிருந்து தொலைவு147 கி.மீ
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு48 கி.மீ
போளூரிலிருந்து தொலைவு29 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு26 கிமீ
செஞ்சியிலிருந்து தொலைவு28 கிமீ
வந்தவாசியிலிருந்து தொலைவு30 கிமீ
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு69 கிமீ
இணையதளம்சேத்துப்பட்டு பேரூராட்சி

சேத்துப்பட்டு (ஆங்கிலம்:Chetpet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் சேத்துப்பட்டு வட்டம் மற்றும் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் 18 பேரூராட்சி உறுப்பினர்களுடன் கூடிய சிறப்பு நிலைப் பேரூராட்சியும் அமைந்துள்ளது. இந்த நகரம் போளூர் (சட்டமன்றத் தொகுதிக்கும்) மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

அமைவிடம்[தொகு]

சேத்துப்பட்டு தேர்வுநிலை பேரூராட்சி விழுப்புரம் - ஆரணி நெடுஞ்சாலையும் மற்றும் போளூர்-வந்தவாசி-சென்னை நெடுஞ்சாலையில் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் திருவண்ணாமலையிலிருந்து 43 கி.மீ தூரத்திலும், ஆரணி நகருக்கு 26 கி.மீ தூரத்திலும் உள்ளது. இதனருகே உள்ள போளூர் தொடருந்து நிலையம் 26 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கே வந்தவாசி 28 கிமீ; தெற்கே செஞ்சி 25 கிமீ,வடக்கே 18 கி.மீ  தொலைவில் பெரணமல்லூர் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

7.50 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 69 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி போளூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [2]

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,745 வீடுகளும், 19,827 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 83.43% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1029 பெண்கள் வீதம் உள்ளனர். [3]

நிர்வாகம் மற்றும் அரசியல்[தொகு]

இந்நகரம் சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. சேத்துப்பட்டு நகரம்,தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த நகரை சேத்துப்பட்டு பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.

பேரூராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்றத் தொகுதி போளூர் (சட்டமன்றத் தொகுதி)
சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.வி.சேகரன்
மக்களவைத் தொகுதி ஆரணி மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர் திரு.எம்.கே. விஷ்ணு பிரசாத்

வருவாய் வட்டம்[தொகு]

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் சேத்துப்பட்டு வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டம் ஆரணி வட்டத்தின் தெற்குப் பகுதிகளையும் மற்றும் போளூர் வட்டத்தின் கிழக்கு பகுதிகளையும் கொண்டு 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த வட்டத்தில் 76 வருவாய் கிராமங்களையும், 1,46,806 மக்கள் தொகையையும் கொண்டது. அதுமட்டுமில்லாமல் இந்த வட்டத்தில் சேத்துப்பட்டு பேரூராட்சி மற்றும் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது.

போக்குவரத்து[தொகு]

சாலை வசதிகள்[தொகு]

சேத்துப்பட்டு நகரத்தில் இருந்து சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது.

1. விழுப்புரம் -செஞ்சி - சேத்துப்பட்டு - ஆரணி - ஆற்காடு சாலை

2. போளூர் - சேத்துப்பட்டு - வந்தவாசி - சென்னை சாலை

3. சேத்துப்பட்டு - திருவண்ணாமலை சாலை

4. சேத்துப்பட்டு - பெரணமல்லூர்- செய்யார் சாலை

ஆகிய சாலைகள் சேத்துப்பட்டு நகரத்தை இணைக்கிறது.

பேருந்து வசதிகள்[தொகு]

இதனையும் காண்க:சேத்துப்பட்டு பேருந்து நிலையம்

சேத்துப்பட்டு நகரத்தில் பேருந்து போக்குவரத்து நிர்வாக வசதிக்காக விழுப்புரம் - ஆரணி நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 24 மணி நேரத்திற்கும் இயக்கப்படுகிறது.

இரயில் போக்குவரத்து வசதிகள்[தொகு]

சேத்துப்பட்டு நகரில் இரயில் சேவைகள் ஏதுமில்லை. இருந்தாலும் அருகிலுள்ள போளூர் தொடருந்து சந்திப்பு (26 கிமீ) மற்றும் ஆரணி ரயில் நிலையம் (36 கிமீ) ஆகிய ரயில் நிலையம் மூலம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கிருந்து திருவண்ணாமலை, வேலூர், பெங்களூரு, சென்னை, திருப்பதி, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருச்சி, நாகர்கோவில் ஆகிய நகரங்களுக்கு இரயில் சேவைகள் உள்ளது.

கோவில்கள்[தொகு]

யோகராமா திருக்கோயில்[தொகு]

இந்த கோயில் சேத்துப்பட்டுக்கு அருகிலுள்ள போளூர் - சென்னை சாலை நெடுங்குணம் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்து கடவுள் விஷ்ணுவுக்கு யோக ராம கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ராமர் ஒரு சின் முத்ரா தோரணையில் தனது வில் இல்லாமல் ஹனுமனின் வேத ஓதத்தைக் கேட்கவில்லை.தீர்காச்சலம் மலையின் அடிவாரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். 7 நாள் கார் திருவிழா, 10 வது நாள் இந்திரவிமன திருவிழா அனைத்து சமூகங்களின் பங்களிப்புடன் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அல்லது கானு என்று அழைக்கப்படும் பொங்கலின் இரண்டாவது நாளில், ஸ்ரீ ராமச்சந்திரா ஜெகநாதபுரம், அரசம்பட்டு, வேப்பம்பட்டு, வில்லிவனம், சேத்துபட்டு பஜார் மற்றும் பஜம்பேட்டை வழியாக செல்லும் மலையைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார். வைகாசி விசகம் (மே-ஜூன்) கருடசேவை, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, அனைத்து சனிக்கிழமையும், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு , தீபாவளி, பொங்கல் ஆகிய நல்ல நாட்களில் கூட்டமாக இருக்கும் போது மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படுகின்றன[[1]].

ஆதாரங்கள்[தொகு]

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). பார்த்த நாள் 21 June 2017.
  2. சேத்துப்பட்டு பேரூராட்சியின் இணையதளம்
  3. Chetpet Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்துப்பட்டு&oldid=2893463" இருந்து மீள்விக்கப்பட்டது