இடிச்சப்புளி செல்வராசு
இடிச்சப்புளி செல்வராசு | |
---|---|
பிறப்பு | 1939 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 30 ஜனவரி 2012 இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1970–2010 |
இடிச்சப்புளி செல்வராசு அல்லது இடிச்சப்புளி செல்வராஜ் (இறப்பு: சனவரி 30, 2012, அகவை: 72) தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவை நடிகராக நூற்றுக்கும் கூடுதலான திரைப்படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சின்ன வாத்தியார் என்ற திரைப்படத்தில் கவுண்டமணி, செந்திலுடன் நடித்துள்ளார். மற்றொரு நகைச்சுவை நடிகரான பாண்டுவின் அண்ணன் ஆவார். எம்.ஜி.ஆரின் இதயக்கனி மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.[1]
இவருக்கு செல்லம் என்ற மனைவியும் வசந்தி என்ற மகளும் உள்ளனர். சனவரி 30, 2012 அன்று காலமானார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "மூத்த நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்". 2014-03-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-01-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Comedian Idichapuli Selvaraj Passes Away