ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்
இயக்கம்பாலு ஆனந்த்
தயாரிப்புமுகமது அலி
கதைபாலு ஆனந்த்
இசைமன்சூர் அலி கான்
நடிப்பு
ஒளிப்பதிவுநந்தலால்
படத்தொகுப்புகேஎம்பி குமார்
கலையகம்ராஜ் கென்னடி பிலிம்ஸ்
வெளியீடுசூன் 24, 1993 (1993-06-24)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் என்பது 1993ல் வெளியான தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை பாபு ஆனந்த் இயக்கியிருந்தார். மன்சூர் அலி கான் மற்றும் நந்தினி என்போர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் நாகேஷ், ஜெய்கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் எஸ். எஸ். சந்திரன் ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படம் 24 ஜூன் 1993 ல் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் தலைப்பு மிக நீளமாக தலைப்பாக தமிழ் திரையுலகில் பார்க்கப்படுகிறது.[1][2][3][4]

கதை[தொகு]

குலோத்துங்கன் (மன்சூர் அலிகான்) ஒரு சாமர்த்தியமான திருடன். காவலர் உடையில் சென்று தனது திருட்டினை மேற்கொள்வான். தான் திருடிய பொருட்களை இராபின் ஊட் போல வசதியற்ற ஏழைகளுக்கு வழங்கி வருகிறான். வழக்கறிஞர்(நாகேஷ்), சுப்ரமணியன் (ஜெய்கணேஷ்) மற்றும் இவரது மனைவி ஷாலு (அபிலாஷா ) ஆகிய மூவரும் ஒரு பெரிய செல்வந்தரின் வாரிசான ராதிகாவின் (நந்தினி), சொத்துகளுக்கு பாதுகாவலர்கள் ஆவர். ஷாலு ராதிகாவின் முழுச் சொத்துகளையும் அடைய நினைத்து சுவாமியின் உதவியுடன் ராதிகாவை போதை மருந்துக்கு அடிமையாக்கி அவளை மனதளவில் பாதிப்படைய விரும்புகிறாள். ஒரு நாள் ராதிகா வீட்டிலிருந்து வெளியேறி குலோத்துங்கனிடம் வந்து சேர்கிறாள். அந்த நேரத்தில் அவன் மது அருந்தியிருந்ததால் ராதிகாவிடம் தவறாக நடந்து கொள்கிறான். இறுதியில் அவளுடைய பாதுகாவலர்கள் அவளைத் தேடிக் கண்டு பிடிக்கின்றர்.

பின்னர், ஷாலு குலோத்துங்கனை ராதிகாவின் கணவனாக நடிக்க வைக்கிறான். அவனும் நடிப்பிற்காக ராதிகாவை மணக்கிறான். பிறகு உண்மை அறிந்த அவன் ஷாலுவிடமிருந்து ராதிகாவைக் காப்பாற்ற முடிவெடுக்கிறான். இதற்கிடையில் குலோத்துங்கனின் எதிரியான ராவுடன் (ஸ்ரீஹரி) சேர்ந்து கொண்டு சுப்பரமணியத்தை கொலை செய்து அந்தப் பழியை குலோத்துங்கன் மேல் போடுகிறாள். நேர்மையான காவல் அதிகாரி குரு சுப்ரமணியன் (நெப்போலியன்) இதை துப்பறிய வருகிறார். பின்னர் என்னவாயிற்று என்பது படத்தின் கதைச் சுருக்கமாகும்.

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]