சோலையம்மா (திரைப்படம்)
சோலையம்மா | |
---|---|
இயக்கம் | கஸ்தூரி ராஜா |
தயாரிப்பு | ஜோதி ராஜா |
கதை | கஸ்தூரி ராஜா |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கே. பி. அகமது |
படத்தொகுப்பு | லன்சி - மோகன் |
கலையகம் | கற்பக ஜோதி பிலிம்ஸ் |
வெளியீடு | திசம்பர் 11, 1992 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சோலையம்மா (solaiyammaa) என்பது 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கஸ்தூரி ராஜா எழுதி, இயக்கி ஜோதி ராஜாவால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ராகுல், சுகன்யா, கரிகாலன் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தேவாவால் இயற்றப்பட்ட இசை மற்றும் கே. பி. அகமது ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் டிசம்பர் 11, 1992 அன்று வெளியானது.[1][2]
கதைச்சுருக்கம்
[தொகு]சோலையம்மா (சுகன்யா) தாயற்ற பெண். தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள். அவர்களின் உறவினரான பால்ராஜ்ஜிற்கு (ராகுல்) திருமணம் செய்வதாக நிச்சயம் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலும் செய்தனர். வைரவன் (கரிகாலன்) ஊரில் பெரும் அராஜகத்தன்மையோடும் பெண்களின் கற்பை சூறையாடியும் வந்தான். ஒரு நாள் இரவு சோலையம்மாவின் வீட்டினுள் நுழைந்து சோலையம்மாவிடம் தவறாக நடக்க முயன்றான். ஆனால் சோலையம்மாவோ அவனை எதிர்த்து தாக்கினாள். இதனால் அவன் அங்கிருந்து தப்பித்து சென்றுவிடுகிறான். ஆனால் ஊர்க்காரர்கள் உட்பட சோலையம்மாவின் உறவினர்கள் எல்லாம் வைரவன் அவளை கற்பழித்து விட்டான் என்றே கூறுகிறார்கள். இதன் பின்னர் சோலையம்மாவின் தந்தை தற்கொலை செய்துக்கொள்கிறார். வைரவனோ அவளை தன்னுடன் ஒர் இரவு தங்கும்படி தொந்தரவு செய்கின்றான். அதன் பின்னர் சோலையம்மா என்ன செய்தாள் என்பதே மீதிக்கதையாகும்.
நடிகர்கள்
[தொகு]- ராகுல் - பால்ராஜ்
- சுகன்யா - சோலையம்மா
- கரிகாலன் - வைரவன்
- சனகராஜ் - பால்ராஜின் தந்தை
- செந்தில் - மைனர்
- வினு சக்ரவர்த்தி
- ஜெய்கணேஷ்
- காந்திமதி - இருளாயி
- இடிச்சப்புளி செல்வராசு
- ராகவி
- நிசா
- சத்யன்
- சேலம் மதி
- ஜி. ஆர். இராமச்சந்திரன்
- குண்டு கல்யாணம்
- பெரிய கருப்பு தேவர்
- கருப்பு சுப்பையா - மாரிமுத்து
- டி. கே. எஸ். கருப்பையா
- பக்கோடா காதர்
இசை
[தொகு]இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். கஸ்தூரி ராஜா இத்திரைப்படத்தின் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.[3][4][5] [6][7]
எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|---|
1 | "பண்ணாரி மாரியம்மா" | எஸ். ஜானகி | 4:54 |
2 | "கூவுற குயிலு சேவல" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:56 |
3 | "மஞ்சத் தண்ணி ஊத்து" | கங்கை அமரன், எஸ். ஜானகி | 4:47 |
4 | "மேற்குத் தொடர்ச்சி மல" (ஆண்) | பி. ஜெயச்சந்திரன் | 5:08 |
5 | "மேற்குத் தொடர்ச்சி மல" (பெண்) | எஸ். ஜானகி | 5:00 |
6 | "ஊரோரம் கம்மாக்கரை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:55 |
7 | "பொம்பளங்கள கும்புடுங்கடா" | கிருஷ்ணராஜ் | 5:10 |
8 | "ராசா இளையராஜா" | கங்கை அமரன், எஸ். ஜானகி | 5:16 |
9 | "தாமிரபரணி ஆறு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ். ஜானகி | 4:54 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Filmography of en solaiyamma". cinesouth.com. Archived from the original on 24 December 2004. பார்க்கப்பட்ட நாள் 2014-03-13.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Solaiyamma (1992) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-03-13.
- ↑ "MusicIndiaOnline — Solaiyamma(1992) Soundtrack". mio.to. Archived from the original on 2014-03-13. பார்க்கப்பட்ட நாள் 2014-03-13.
- ↑ "Solaiyamma : Tamil Movie". hummaa.com. பார்க்கப்பட்ட நாள் 2014-03-13.
- ↑ "Solaiyamma Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-03-13.
- ↑ "Solaiyamma". JioSaavn. 1 January 1992. Archived from the original on 24 March 2022. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022.
- ↑ "Solaiyamma (1992)". Raaga.com. Archived from the original on 13 March 2014. பார்க்கப்பட்ட நாள் 13 March 2014.