பார்வதி என்னை பாரடி
| பார்வதி என்னை பாரடி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | வி.சேகர் |
| தயாரிப்பு | கே.ஆர்.ஜி |
| கதை | வி.சேகர் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | சரவணன் ஸ்ரீபார்வதி ஸ்ரீவித்யா ஜனகராஜ் விஜயகுமார் சார்லி வாசுவிக்ரம் காஜா ஷெரிப் லலிதாகுமாரி |
| படத்தொகுப்பு | ஏ.பி.மணிவண்ணன் |
| வெளியீடு | சூலை 23, 1993 |
பார்வதி என்னை பாரடி (Parvathi Ennai Paradi) வி. சேகர் இயக்கத்தில் 1993-ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். சரவணன், புதுமுகம் ஸ்ரீபார்வதி, ஸ்ரீவித்யா, ஜனகராஜ், சார்லி, வாசுவிக்ரம், காஜா ஷெரிப், லலிதாகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர். கே. ஆர். கங்காதரன் தயாரிப்பில், இளையராஜாவின் இசையமைப்பில் 1993 சூலை 23 அன்று இப்படம் வெளியானது.[1][2][3][4]
வகை
[தொகு]நடிகர்கள்
[தொகு]- சரவணன்
- புதுமுகம் ஸ்ரீபார்வதி
- விஜயகுமார்
- ஸ்ரீவித்யா
- ஜனகராஜ்
- சார்லி
- வாசுவிக்ரம்
- காஜா ஷெரிப்
- லலிதாகுமாரி
- கோவை பாபு
- எல்.ஐ.சி. நரசிம்மன்
- இடிச்சபுளி செல்வராஜ்
- பசி நாராயணன்
- தங்கராஜ்
- சிங்கமுத்து
கதைச்சுருக்கம்
[தொகு]செல்வந்தரான ராஜதுரை (விஜயகுமார்), ஊரில் மிகவும் மதிக்கத்தக்க நபராவார். அவரின் குறும்புக்கார மகள் பார்வதி (ஸ்ரீபார்வதி) . ராஜதுரையின் ஊரில் உள்ள கல்லூரிக்கு தமிழ் ஆசிரியராக வருகிறார் வெங்கடராமன் (ஜனகராஜ்). வேங்கடராமனிடம் தனிப்பாடம் பயில்கிறாள் பார்வதி. வேங்கடராமனின் மனைவி காயத்ரி (ஸ்ரீவித்யா) மற்றும் மகன் சிவா (சரவணன்).
அநீதியை தாங்க முடியாத, முன் கோபம் கொண்டவன் சரவணன். கல்லூரியில் படிக்கும் பொழுது, மந்திரியின் மகனை சரவணன் அடித்ததால், அவன் கல்லூரியில் இருந்து விலக்கப்பட்டான். பின்னர், செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை செய்கிறான் சரவணன். அந்த நிறுவனத்தின் முதலாளியுடன் மோதல் ஏற்பட்டு, சரவணனுக்கு சிறை செல்ல நேரிடுகிறது
மீண்டும் ஊர் திரும்பும் சிவா, தன் பெற்றோரிடம் செல்கிறான். முதலில் பார்வதியுடன் மோதல் ஏற்பட்டு. பின்னர் அதுவே காதலாக மாறுகிறது. ராஜதுரையின் உருவினார் ரமேஷ் (வாசு விக்ரம்) பார்வதியை திருமணம் செய்ய விரும்புகிறான். இறுதியில் பார்வதியை யார் மணந்தார் எனபதே மீதிக் கதையாகும்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[5][6] முத்துத்தேரே என்ற பாடல் பகாடி இராகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.[7][8][9]
| பாடல் | பாடியோர் | வரிகள் | நீளம் |
|---|---|---|---|
| "சின்ன பூங்கிளி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வாலி | 5:01 |
| "காதலில் மாட்டாமல்" | மலேசியா வாசுதேவன் | பிறைசூடன் | 2:28 |
| "கொம்புகள் இல்லாக் காளைய" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா, குழுவினர் | 4:41 | |
| "மானுக்கும் மீனுக்கும்" | எஸ். ஜானகி, குழுவினர் | கங்கை அமரன் | 5:04 |
| "முத்துத்தேரே தேரே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 4:28 | |
| "பார்வதி என்னைப் பாரடி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி | 5:04 |
| "சூரியனைக் கண்டவுடன்" | எஸ். ஜானகி | 5:05 | |
| "வாலிபரே வாலிபரே" | மலேசியா வாசுதேவன், குழுவினர் | 4:45 |
வரவேற்பு
[தொகு]இப்படம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Paarvathi Ennai Paaradi (1993) Movie Details".
- ↑ "www.gomolo.com". Archived from the original on 2018-07-16. Retrieved 2019-03-01.
- ↑ "www.cinesouth.com". Archived from the original on 2004-11-15. Retrieved 2019-03-01.
- ↑ "jointscene.com". Archived from the original on 2010-02-04. Retrieved 2019-03-01.
- ↑ "Parvathi Ennai Paradi". JioSaavn. 18 September 2017. Archived from the original on 6 December 2022. Retrieved 6 December 2022.
- ↑ "Parvathi Ennai Paradi / Vaa Vaa Vasanthame". AVDigital. 18 September 2017. Archived from the original on 6 December 2022. Retrieved 6 December 2022.
- ↑ "தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 19 ] : T.சௌந்தர்". Inioru. 1 June 2014. Archived from the original on 27 February 2021. Retrieved 18 April 2024.
- ↑ "play.raaga.com".
- ↑ "mio.to". Archived from the original on 2020-09-29. Retrieved 2019-03-01.
- ↑ "The Indian Express".
