சாந்தி எனது சாந்தி
தோற்றம்
| சாந்தி எனது சாந்தி | |
|---|---|
| இயக்கம் | டி. ராஜேந்தர் |
| தயாரிப்பு | டி. ராஜேந்தர் |
| கதை | டி. ராஜேந்தர் |
| இசை | டி. ராஜேந்தர் |
| நடிப்பு | டி. ராஜேந்தர் ராதா சிலம்பரசன் வெண்ணிற ஆடை மூர்த்தி |
| ஒளிப்பதிவு | டி. ராஜேந்தர் |
| படத்தொகுப்பு | பி. ஆர். சண்முகம் |
| கலையகம் | சிம்பு சினி ஆர்ட்ஸ் |
| விநியோகம் | சிம்பு சினி ஆர்ட்ஸ் |
| வெளியீடு | 18 ஏப்ரல் 1991 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சாந்தி எனது சாந்தி (Shanti Enathu Shanti) என்பது 1991 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை டி ராஜேந்தர் எழுதி இயக்கித் தயாரித்தார். ராஜேந்தர் தானே படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் ராதாவுடன் நடித்தார். படம் 18 ஏப்ரல் 1991 அன்று வெளியிடப்பட்டது. இதில் நடித்ததற்காக சிலம்பரசன் 12வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதில் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது வென்றார்.
நடிகர்கள்
[தொகு]- டி. ராஜேந்தர்
- ராகேஷ்
- நீதா புரி
- சிலம்பரசன்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- சக்கரவர்த்தி (குரல்: நாசர் பின்னணிக் குரல் கொடுத்தார்)
- வினோத்
- விஸ்வநாத்
- அலி
- இடிச்சபுளி செல்வராசு
- சுமித்ரா
- ஒய். விஜயா
- டிஸ்கோ சாந்தி
- சந்தியா
- ஸ்ரீபாரதி
- ஸ்ரவந்தி
- ராதா
- ரோஜா ரமணி
- அனுராதா
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு டி. ராஜேந்தர் அனைத்துப் பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார்.[1][2]
- "இதழ்கள் உரசும்" - மனோ
- "பூமேலே காதல்" - மனோ
- "என் உயிரின் உயிரே" - மனோ
- "ஒண்ணு ரெண்டு" - எஸ். ஜானகி
- "சுந்தரியின் ராங்கி" - மனோ
- "யே ராசா" - எஸ். ஜானகி
- "பொண்ணு ஃபாலோ" - மனோ
- "காதல் இல்லை" - மனோ