உள்ளடக்கத்துக்குச் செல்

விஸ்வநாத் (1996 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஸ்வநாத்
இயக்கம்கே. கெளதம் கிருஷ்ணா
தயாரிப்புபி. வீரமுத்து
கதைகே. கெளதம் கிருஷ்ணா
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுகே. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புஉதயசங்கர்
கலையகம்ஜானகி அம்மாள் மூவிஸ்
வெளியீடுஆகத்து 16, 1996 (1996-08-16)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விஸ்வநாத் 1996 ஆம் ஆண்டு சரவணன் மற்றும் சுவாதி நடிப்பில், தேவா இசையில், கே. கௌதம் இயக்கத்தில், பி. வீரமுத்து தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2]

கதைச்சுருக்கம்[தொகு]

விஸ்வநாத் (சரவணன்) சிறையிலிருந்து தப்பிக்கிறான். அவன் புகைப்படத்தை செய்தித்தாள்களில் வெளியிட்டு மாநிலம் முழுவதும் காவல்துறை தேடுகிறது. ஒரு நாள் தன் வீட்டருகே விஸ்வநாத்தை பார்க்கும் சுவாதி (சுவாதி) அவனைக் கண்டு அஞ்சி ஓடுகிறாள். சுவாதி தன் சகோதரி சிந்துவுடன் (சிந்து) தங்கியிருக்கிறாள். சிந்து ஒரு நாள் மயக்கமடைந்து விழ, அவளுக்கு விஸ்வநாத் சிகிச்சையளிக்கிறான். அவன் ஒரு மருத்துவர் என்று அறிந்துகொள்ளும் சுவாதி அவன் சிறைக்கைதியான காரணத்தைக் கேட்க விஸ்வநாத் அவன் சோகக்கதையைக் கூறுகிறான்.

மைக்கேலுக்குச் (பிரகாஷ் ராஜ்) சொந்தமான மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் விஸ்வநாத். பணம் மட்டுமே மைக்கேலின் குறிக்கோள். விஸ்வநாத் நோயாளிகளின் நலனில் அக்கறை செலுத்துபவன். இவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நிகழ்கிறது. எனவே அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறி வேறொரு மருத்துவமனையில் பணிபுரிகிறான். விஸ்வநாத் விலகியதால் நோயாளிகள் வருவது குறைந்து மைக்கேல் நட்டமடைகிறான். விஸ்வநாத் பணிபுரியும் மருத்துவமனை லாபகரமாக இயங்குகிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு சட்டவிரோதமாக தீவிரவாதிகளுக்கு சிகிச்சையளிக்கிறான் மைக்கேல். அவர்களிடம் உள்ள ஆயுதங்களை விஸ்வநாத்தின் மருத்துவமனையில் பதுக்கிவைத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். மருத்துவமனையை சோதனையிடும் காவல்துறை விஸ்வநாத்தை கைது செய்கிறது. தன் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி அறிந்த அவன் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஜெனிபரை (மோகினி) கொன்றுவிடுகிறான் மைக்கேல்.

தப்பியோடிய விஸ்வநாத்தைக் கைது செய்யும் பொறுப்பு காவல் அதிகாரி ராஜ்குமாரிடம் (ராதாரவி) ஒப்படைக்கப்படுகிறது. சுவாதி விஸ்வநாத்தை காதலிக்கிறாள். விஸ்வநாத் தான் நிரபராதி என்று நிரூபித்து தண்டனையிலிருந்து தப்பினானா? என்பது மீதிக்கதை.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர் வாலி.[3]

வ. எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 கர்த்தரை பார்த்தேன் எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:49
2 1,2,3,4,5,6, என் போன் சித்ரா 4:34
3 ஜில் என்று வீசுது உண்ணிமேனன், சுஜாதா மோகன் 4:10
4 மாமா நான் உனக்கு சித்ரா 4:14
5 கோங்குரா மனோ, சுவர்ணலதா 4:02

மேற்கோள்கள்[தொகு]

  1. "விஸ்வநாத்".
  2. "விஸ்வநாத்". Archived from the original on 2010-12-23. பார்க்கப்பட்ட நாள் 2019-02-26.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "விஸ்வநாத்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்வநாத்_(1996_திரைப்படம்)&oldid=3941538" இலிருந்து மீள்விக்கப்பட்டது