வெற்றி படிகள்
வெற்றி படிகள் (Vetri Padigal) மனோபாலா இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. சரவணன், கே. கணேஷ், கே. ராமராஜா ஆகியோர் தயாரிப்பில், இளையராஜா இசையில் 15 மார்ச் 1991 ஆம் தேதி வெளியானது. ராம்கி, நிரோஷா, ஆர். சரத்குமார், ஸ்ரீவித்யா, வி. கே. ராமசாமி, ஜெய்கணேஷ், வினு சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2][3] இது ஒரு மராட்டிய படத்தின் மறுஆக்கமாகும்.
நடிகர்கள்
[தொகு]ராம்கி (நடிகர்), நிரோஷா, சரத்குமார், ஸ்ரீவித்யா, வி. கே. ராமசாமி, ஜெய்கணேஷ், வினு சக்ரவர்த்தி, சனகராஜ், தியாகு (நடிகர்), கிட்டி (நடிகர்), டிஸ்கோ சாந்தி, பேபி விசித்ரா, தளபதி தினேஷ், பொன்னம்பலம், ஹல்வா வாசு, ரவிசங்கர், ரவீந்திரநாத், கன்னியப்பன், பாண்டியன், சக்திவேல், வெள்ளை சுப்பையா, வரதராஜன், சின்னி ஷண்முகம்.
கதைச்சுருக்கம்
[தொகு]ஒரு கொள்ளை கும்பல் தமிழ் நாட்டையே மிரட்டுகிறது. அந்த கும்பலை பிடிக்க, மகேஷ் என்ற காவல் அதிகாரி நியமிக்கப்படுகிறார். கணவனை இழந்த, கண் தெரியாத தன் சகோதரி வித்யாவுடன் (ஸ்ரீவித்யா) மகேஷ் வாழ்ந்து வருகிறார் விமலாவை மகேஷ் விரும்பியதால், மகேஷ் மீது அதிகம் கோவம் கொள்கிறார் குருஜி (ஆர். சரத்குமார்).
கடந்த காலத்தில், மகேஷின் இளமை காலத்தில் காவல் தொழிலை அறவே வெறுத்தான் மகேஷ். தனது மாமா காவல் அதிகாரியாக ஒரு கொள்ளை கும்பலை பிடிக்க போகும் பொழுது வெடி குண்டு வெடித்து இறக்க நேரிட்டு, அதில் மகேஷின் சகோதரி கண்களை இழக்கிறார். அதனால், தேச விரோதிகளை பழிவாங்க ஒரு காவல் அதிகாரியாகிறான் மகேஷ். பின்னர் அந்த கொள்ளை கும்பல் பிடிபட்டதா? விமலாவை யார் மணந்தார்? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.
ஒலிப்பதிவு
[தொகு]திரைப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் இளையராஜா ஆவார். வாலி மற்றும் சிவா பாடல்களின் வரிகளை எழுதினர். 4 பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 1991 ஆம் ஆண்டு வெளியானது.[4][5]
ட்ராக் | பாடல் | பாடியவர் | நீளம் |
---|---|---|---|
1 | எனது திட்டங்கள் | சாய்பாபா, எஸ். ஜானகி | 4:47 |
2 | கனவு பலித்தது | எஸ். பி. பி. எஸ். ஜானகி | 4:59 |
3 | ஒரு காத்து | சாய்பாபா, எஸ். ஜானகி | 4:33 |
4 | உன்னை காக்கும் | இளையராஜா | 1:22 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "http://spicyonion.com".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://www.cinesouth.com". Archived from the original on 2007-08-15. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
{{cite web}}
: External link in
(help)CS1 maint: unfit URL (link)|title=
- ↑ "http://www.jointscene.com". Archived from the original on 2012-04-04. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
{{cite web}}
: External link in
(help)CS1 maint: unfit URL (link)|title=
- ↑ "http://music.ovi.com". Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://mio.to". Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
{{cite web}}
: External link in
(help)|title=
வெளி இணைப்புகள்
[தொகு]- 1991 திரைப்படங்கள்
- 1991 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- சரத்குமார் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- மனோபாலா இயக்கிய திரைப்படங்கள்
- ஸ்ரீவித்யா நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஜனகராஜ் நடித்த திரைப்படங்கள்
- ஜெய்கணேஷ் நடித்த திரைப்படங்கள்