ஒண்ணா இருக்க கத்துக்கணும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இயக்குனர் வி.சேகர்
தயாரிப்பாளர் செ.கண்ணப்பன்(ஏ.வி.எம்)
எஸ்.தமிழ்செல்வி
எஸ்.எஸ்.துரை ராஜு
ஆர். விஜய்
கதை வி.சேகர்
நடிப்பு சிவகுமார்
ஜீவா
கவுண்டமணி
செந்தில்
வினு சக்கரவர்த்தி
மனோரமா
எஸ்.எஸ்.சந்திரன்
சார்லி
கோவை சரளா
சௌந்தர்
குமரிமுத்து
சூர்யகாந்த்
இசையமைப்பு இளையராஜா
ஒளிப்பதிவு ஜி.ராஜேந்திரன்
ராஜராஜன்
படத்தொகுப்பு ஏ.பி.மணிவண்ணன்
வெளியீடு நவம்பர்20, 1992

ஒண்ணா இருக்க கத்துக்கணும், 1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.

வகை[தொகு]

சமூகத் திரைப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

தன் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை ஆடு மாடுகள் போன்று நடத்துகிறார் அந்த ஊர் பண்ணையார். கல்வியறிவு இல்லாத அந்த மக்கள் தங்களை அறியாமலே அந்த அடிமைத்தனத்தில் வாழ்கின்றனர். ஊருக்குப் புதிதாக வரும் பள்ளிகூட வாத்தியார் அம்மக்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறார். அம்மக்களுக்கும் அவர்களது அறியாமையையும் அதன் காரணமாய் அவர்கள் முன்னேறாமல் இருப்பதையும் பண்ணையாரால் சுரண்டப்படுவதையும் உணர்த்துகிறார். தன்னிலை உணரும் மக்களின் நிலை என்ன, அந்த பண்ணையாரின் நிலை என்ன என்பதை விளக்கும் அருமையான திரைச்சித்திரம். நாட்டில் உள்ள பல ஊர்களில் புரையோடிப்போய் இருக்கும் சாதிகொடுமைகளைக் கட்டும் சமூகத் திரைப்படம் இது.