நாட்டுப்புறப் பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாட்டுப்புறப் பாட்டு
இயக்கம்கஸ்தூரி ராஜா
தயாரிப்புவிஜயலட்சுமி கஸ்தூரி ராஜா
கதைகஸ்தூரி ராஜா
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுகிச்சாஸ்
படத்தொகுப்புஎல்.கேசவன்
கலையகம்கஸ்தூரி மங்கா கிரியேஷன்ஸ்
வெளியீடுபெப்ரவரி 9, 1996 (1996-02-09)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாட்டுப்புறப் பாட்டு (Naattupura Paattu) என்பது 1996 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜாவின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இந்த திரைப்படத்தில் சிவகுமார், செல்வா, குஷ்பூ, மனோரமா, கவுண்டமணி, செந்தில் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா தயாரிப்பில், இளையராஜா இசையில், 9 பிப்ரவரி 1996 ஆம் ஆண்டு வெளியானது.[2]

கதைச்சுருக்கம்[தொகு]

பாரிஜாதம் (குஷ்பூ) ஒரு பிரபல கரகாட்டம் ஆடும் கலைஞர். திருமணத்திற்கு பிறகு ஆட அனுமத்திக்கும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று பாரிஜாதத்தின் தாய் பட்டம்மா எதிர்பார்த்தார். அதன் படியே, மற்றோரு கரகாட்ட கலைஞரான பழனிசாமியை (சிவகுமார்) மணந்தாள் பாரிஜாதம். பொறுப்பில்லாமல் இருக்கும் பழனிசாமியின் தம்பி கோட்டைசாமியை, பாரிஜாதம் நல்வழிப்படுத்துகிறாள். கோட்டைசாமிக்கும் மாலாவிற்கும் திருமணம் ஆனது. பணக்கார நாயக்கருக்கு (வினு சக்ரவர்த்தி) பாரிஜாதத்திற்கும் தவறான தொடர்பு இருப்பதாக பரவிய வதந்தியை தாங்க முடியாமல், பாரிஜாதத்தைப் பிரிந்து வாழ்கிறான் பழனிசாமி.

பிறகு ஒரு நாள், காட்டமுத்துவின் தங்கை மானபங்கப்படுத்தப்பட்டதால், அவள் தற்கொலை செய்துகொள்கிறாள். அதற்கு காரணமானவர்களை கோட்டைசாமி தட்டிக்கேட்டதால், திருவிழாவில் ஆடும் வாய்ப்பு தட்டிப்போனது. அதனால், கோட்டைசாமியும் மாலாவும் துயரத்திற்கு உள்ளானார்கள். அவ்வாறாக ஒரு சமயம், ஆட்டத்தின் பொழுதே மாலா இறந்து விடுவதால், அவளின் இழப்பை தாங்காமல் கோட்டைசாமி மதுவிற்கு அடிமையாகிறான். பழனிசாமி தன் குழந்தையை தனியே வளர்த்துவர, பாரிஜாதம் கரகாட்டம் ஆடுவதை நிறுத்த நேரிடுகிறது.

பல ஆண்டுகளுக்கு பிறகு, பழனிசாமியின் மகன் வேல்பாண்டி (பிரேம்) அமராவதியை (அனுஷா) காதலிக்கிறான். கோட்டைசாமி தன் எதிரிகளை பழிவாங்கினானா? பாரிஜாதமும் பழனிசாமியும் இணைந்தனரா? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.

நடிகர்கள்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

கஸ்தூரி ராஜா எழுதிய பாடல் வரிகளுக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.[3][4]"ஒத்த ரூபா" என்ற பாடல் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Saravanan, T. (13 November 2015). "In love with village vistas". The Hindu இம் மூலத்தில் இருந்து 24 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180124124506/http://www.thehindu.com/features/metroplus/society/in-love-with-village-vistas/article7872936.ece. 
  2. "A-Z Continued..." INDOlink. Archived from the original on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 9 April 2015.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "Nattupura Pattu". AVDigital (in ஆங்கிலம்). Archived from the original on 12 July 2023. பார்க்கப்பட்ட நாள் 12 July 2023.
  4. "Nattupura Pattu". JioSaavn. 16 September 2017. Archived from the original on 12 July 2023. பார்க்கப்பட்ட நாள் 12 July 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டுப்புறப்_பாட்டு&oldid=3835366" இலிருந்து மீள்விக்கப்பட்டது