அனுபிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்பு
Anubis standing.svg
கருப்புக் குள்ள நரித் தலையும், மனித உடலுடன் கொண்ட அனுபிஸ் கடவுளின் ஒரு கையில் செங்கோல் மற்றும் மறு கையில் ஆங்க் எனும் மந்திரத் திறவுகோலுடன் காட்சியளிக்கும், புது எகிப்து இராச்சிய காலத்திய ஓவியம்
துணைஅனுபுத்
பெற்றோர்கள்நெப்திஸ்-சேத், ஒசைரிஸ் (பழைய மற்றும் புது எகிப்து இராச்சியம்), அல்லது இரா (பழைய எகிப்து இராச்சியம்).
சகோதரன்/சகோதரிவெப்வநெத்
குழந்தைகள்கேப்பெச்செத்
சடலத்தை மம்மிபடுத்தும் நிகழ்ச்சியில் அனுபிஸ் கடவுள்
மம்மியின் இருதயத்தை எடை போடும் அனுபிஸ் கடவுள்

அனுபிஸ் அல்லது இன்பு அல்லது அன்பு (Anubis or Inpu, Anpu) பண்டைய எகிப்தியர்களின் இறப்பு, சடலத்தை மம்மிப்படுத்தல், சடலத்தை பதப்படுத்தல், இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கையை முடிவு செய்தல், இறந்தவர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுச் சின்னங்களை காத்தல் மற்றும் பாதள உலகத்திற்கான கடவுள் ஆவார். இக்கடவுள் கருப்பு நிற குள்ள நரியின் முகமும், மனித உடலும் கொண்டது.[1][2][3] எகிப்திய மன்னர்களின் கல்லறைச் சுவர்களில் இக்கடவுளின் உருவம் ஓவியமாக வரையப்பட்டிருக்கும். இக்கடவுள் மம்மிகளையும், கல்லறைகளையும் பாதுகாப்பதாக எகிப்தியர்கள் நம்பி வழிபட்டனர். இக்கடவுள் இறந்த மம்மிகளின் இருதயத்தை தராசில் வைத்து எடை பார்த்து, இறந்தவர்களை மேல் உலகத்திற்கு அல்லது பாதள உலகத்திற்கு அனுப்பும் அதிகாரம் கொண்டது.[4]

வளம் கொழிக்கும் நைல் நதியின் கருப்பு நிற வண்டல் மண் போன்று, அனுபிஸ் கடவுளின் முகமும் கருப்பு நிற குள்ள நரியின் முகமும், மனித உடலுடன் ஓவியங்களில் தீட்டப்பட்டுள்ளது. மேலும் அனுபிஸ் கடவுள் ஒரு கையில் மேல் உலகத்தின் திறவு கோலான ஆங்கையும், ஒரு கையில் செங்கோலும் கையில் ஏந்தி இருக்கும். மம்மியின் வாய் திறப்புச் சடங்கின் போது இன்பு கடவுள் அருகில் இருப்பதாக எகிப்தியர்கள் நம்பினர். எகிப்தியர்கள் இக்கடவுளை அனுபிஸ் அல்லது இன்பு அல்லது அன்பு என அழைத்தனர். ஆனால் எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச மன்னர்கள் இக்கடவுளை அனுபிஸ் என அழைத்தனர். அனுபிஸ் கடவுள் வழிபாடு பழைய எகிப்திய இராச்சிய காலம் முதல் எகிப்தை ஆண்ட கிரேக்கத் தாலமி வம்சத்தினர் காலம் வரை நிலவியது.

படக்காட்சிகள்[மூலத்தைத் தொகு]

இதனையும் காண்க[மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[மூலத்தைத் தொகு]

  1. "African golden jackals are actually golden wolves". 9 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Golden jackal: A new wolf species hiding in plain sight". 9 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. Koepfli, Klaus-Peter; Pollinger, John; Godinho, Raquel; Robinson, Jacqueline; Lea, Amanda; Hendricks, Sarah; Schweizer, Rena M; Thalmann, Olaf et al. (2015). "Genome-wide evidence reveals that African and Eurasian golden jackals are distinct species". Current Biology 25 (16): 2158–2165. doi:10.1016/j.cub.2015.06.060. பப்மெட்:26234211. http://www.cell.com/current-biology/pdf/S0960-9822(15)00787-3.pdf. பார்த்த நாள்: 9 August 2015. 
  4. "Papyrus from the Book of the Dead of Ani". Britishmuseum.org. 15 June 2012 அன்று பார்க்கப்பட்டது.

ஆதார நூற்பட்டியல்[மூலத்தைத் தொகு]

மேலும் படிக்க[மூலத்தைத் தொகு]

வெளி இணைபுகள்[மூலத்தைத் தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபிஸ்&oldid=3583539" இருந்து மீள்விக்கப்பட்டது