அந்தோனி எவிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அந்தோனி எவிசு
Antony Hewish
பிறப்புமே 11, 1924(1924-05-11)
போவி, இங்கிலாந்து
இறப்பு13 செப்டம்பர் 2021(2021-09-13) (அகவை 97)
தேசியம்ஐக்கிய இராச்சியம்
துறைகதிர்வீச்சு வானியல்
பணியிடங்கள்
கல்விகிங்சு கல்லூரி, டாண்டன்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (இளங்கலை, முனைவர்)
ஆய்வேடுபால்வெளிக் கதிர்வீச்சு அலைகளின் அலைவுகள் (1952)
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஜோசெலின் பெல் பர்னல்[1]
அறியப்படுவதுதுடிவிண்மீன்கள்
விருதுகள்
துணைவர்மார்ஜரி ரிச்சார்ட்சு[2]

அந்தோனி எவிசு (Antony Hewish, 11 மே 1924 – 13 செப்டம்பர் 2021) ஒரு பிரித்தானிய கதிர்வீச்சு வானியலாளர் ஆவார். இவர் 1974 இல் இயற்பியலில் நோபல் பரிசை கதிர்வீச்சு வானியலாளரான மார்ட்டின் இரைலுடன் இணைந்து பெற்றுள்ளார் . இவருக்கு இப்பரிசு கதிர்வீச்சு பொருள்வில்லைத் தொகுப்பை உருவாக்கியதற்காகவும் துடிவில்ண்மீன்களைக் காண்பதில் அதன் பங்களிப்புக்காகவும் தரப்பட்டுள்ளது. இவருக்கு அரசு வானியல் கழகத்தின் எடிங்டன் பதக்கமும் 1969 இல் வழங்கப்பட்டுள்ளது.[3][4][5]

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் டாவுண்டன் கிங் கல்லூரியில் பயின்றார். இவரது கேம்பிரிட்ஜ் கோன்வில்லி, கையசு கல்லூரி, பட்டப்படிப்பு போரால் தடைப்பட்டுள்ளது. இவர் மாற்றாக அரசு வான்கல நிறுவனத்திலும் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிருவனத்திலும் மார்ட்டின் இரைலுடன் பணிபுரிய நேர்ந்துள்ளது. இவர் 1946 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பி வந்து தன் பட்டப்படிப்பை முடித்துள்ளார். உடனே இவர் இரைலின் குழுவில் அதாவது கேவண்டிழ்சு வானியற்பியல் குழுவில் கேவண்டிழ்சு ஆய்வகத்தில் சேர்ந்துள்ளார். இவர்1952 இல் முனைவர் பட்டம் பெற்றார்.[6]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

எவிழ்சு மான்செசுட்டர், கேம்பிரிட்ஜ், எக்சேட்டர் உட்பட, ஆறு பல்கலைக்கழகங்களில் தகைமைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் பெல்ஜியம் கலை, அரிவியல் அரசு கல்விக்கழகம், அமெரிக்க்கலை, அறிவியல் கல்விக்கழகம், இந்தியத் தேசிய அறிவியல் கல்விக்கழகம் ஆகியவற்றின் அயல்நாட்டு உறுப்பினர் ஆவார். இவரது மற்ற தகைமைகள், விருதுகளில் பின்வருவன அடங்கும்:[2]

 • இவர் 1968 இல் அரசு கழகத்தில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[7]
 • எடிங்டன் பதக்கம், அரசு வானியல் கழகம் (1969)
 • டெல்லிஞர் பொற்பதக்கம், பன்னாட்டு கதிர்வீச்சு அறிவியல் ஒன்றியம் (1972)
 • ஆல்பர்ட் ஏ. மைக்கேல்சன் பதக்கம், பிராங்ளின் நிறுவனம் (1973, ஜோசெலின் பெல் பர்னலுடன் கூட்டாக]][8]
 • இயற்பியலில் நோபல் பரிசு (மார்ட்டின் இரைலுடன் ) (1974)
 • அக்சு பதக்கம், அரசு கழகம் (1977)
 • இவர் 1998 இல் இயற்பியல் நிறுவனத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (FInstP)[2]

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் மார்யோரி எலிசபெத் காதரைன் இரிச்சர்ட்சை 1950 இல் மண்ந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. இவரது மகன் ஓர் இயற்பியலாளர் ஆவார். இவரது மகள் ஆங்கில ஆசிரியர் ஆவார்.[5][5]

மேற்கோள்கள்[தொகு]

 1. Bell, Susan Jocelyn (1968). The Measurement of radio source diameters using a diffraction method. repository.cam.ac.uk (PhD thesis). University of Cambridge. doi:10.17863/CAM.4926. வார்ப்புரு:EThOS.
 2. 2.0 2.1 2.2 HEWISH, Prof. Antony. Who's Who. 2015 (online ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் ). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc. http://www.ukwhoswho.com/view/article/oupww/whoswho/U19992. 
 3. Hewish, A (1975). "Pulsars and High Density Physics.". Science 188 (4193): 1079–1083. 13 June 1975. doi:10.1126/science.188.4193.1079. பப்மெட்:17798425. Bibcode: 1975Sci...188.1079H 
 4. "Antony Hewish". nobel-winners.com. 2006. 16 December 2015 அன்று பார்க்கப்பட்டது.
 5. 5.0 5.1 5.2 "Janus: The Papers of Professor Antony Hewish". Cambridge University Library. 2015. 16 December 2015 அன்று பார்க்கப்பட்டது.
 6. Hewish, Antony (1952). The Fluctuations of Galactic Radio Waves (PhD thesis). University of Cambridge.
 7. "Professor Antony Hewish FRS". London: அரச கழகம். 2015-11-17 அன்று மூலம் பரணிடப்பட்டது.
 8. "Franklin Laureate Database – Albert A. Michelson Medal Laureates". Franklin Institute. 2013-12-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 சூன் 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனி_எவிசு&oldid=3454417" இருந்து மீள்விக்கப்பட்டது