விஜய்பூர், உத்தராகண்டம்
விஜய்பூர் विजयपुर பிஜய்பூர் | |
---|---|
மலை வாழிடம் | |
ஆள்கூறுகள்: 29°50′N 79°55′E / 29.84°N 79.92°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
மாவட்டம் | பாகேசுவர் |
பெயர்ச்சூட்டு | விஜய் லால் ஷா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1 km2 (0.4 sq mi) |
ஏற்றம்[1] | 2,050 m (6,730 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 89 |
• அடர்த்தி | 89/km2 (230/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி சமசுகிருதம் |
• பேசும் மொழி | குமாவுனி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 263640[3][4] |
தொலைபேசி இணைப்பு எண் | 059628 |
வாகனப் பதிவு | உகே 02 |
இணையதளம் | uk |
விஜய்பூர் (Vijaypur), அதிகாரப்பூர்வமாக பிஜய்பூர் என்று அழைக்கப்படும் இது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் பாகேசுவர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலை வாழிடமாகும். பாகேசுவரிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், காந்தாவிலிருந்து 5 கி.மீ தூரத்திலும் பாகேசுவர்-சௌகோரி நெடுஞ்சாலையில் அடர்த்தியான பைன் மரக் காடுகளுக்கு மத்தியில் இக்கிராமம் அமைந்துள்ளது. [5]
இது 2050 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் பனி மூடிய இமயமலை சிகரங்களான திரிசூல், நந்தா தேவி, நந்தா கோட் ஆகியவற்றின் பரந்த காட்சிகளுக்காகவும் இது அறியப்படுகிறது.[1] குமாவுனின் 8 முக்கியக் கோயில்களில் ஒன்றான தௌலிநாக் கோயில் இங்கு அமைந்துள்ளது. பெரிநாக், கலிநாக், பெனிநாக், கார்கோடக்நாக், பிங்லெநாக், கர்ஹரிநாக், அத்குலிநாக் ஆகியவை மற்ற கோயில்களாகும்.
ஆர்வமுள்ள இடங்கள்[தொகு]
தௌலிநாக் கோயில்[தொகு]
இங்குள்ள ஒரு மலையுச்சியில் தௌலிநாக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் விஜய்பூரிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு முக்கியமாக விஜயதசமியின் போது பக்தர்கள் வருகை தருகின்றனர். பஞ்சமி மேளா என்பது இங்கு கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான திருவிழாவாகும். [6]
தேயிலைத் தோட்டங்கள்[தொகு]
இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. [7] வெகு காலத்திற்குப் பிறகு, குசராத்தி வர்த்தகர் விஜய் லால் ஷா என்பவரால் இந்த தோட்டங்கள் கையகப்படுத்தப்பட்டது. அவர் இந்த நகரத்திற்கு சுயமாக மறுபெயரிட்டார்.
போக்குவரத்து[தொகு]
பாகேசுவரிலிருந்து 30 கி.மீ தூரத்திலும், காந்தாவிலிருந்து 5 கி.மீ. தூரத்திலும் தேசிய நெடுஞ்சாலை எண் 309 ஏவில் விஜய்பூர் அமைந்துள்ளது . [8] விஜய்பூரிலிருந்து அருகிலுள்ள காந்தா, கோட்முன்யா மற்றும் உதியாரி வளைவு நோக்கிச் செல்ல தனியார் வாடகை - வாகனங்கள் கிடைக்கின்றன. உத்தராகண்டம் மாநில போக்குவரத்து நிறுவனம் நடத்தும் பேருந்துகள் கிராமத்தை பாகேசுவர், அல்மோரா, பெரிநாக், தில்லி போன்ற நகரங்களுடன் இணைக்கின்றன. இது கைலாச மானசரோவர் பாதையில் அமைந்துள்ளது. [9]
புகைப்படங்கள்[தொகு]
-
தௌலினாக் கோயில்
-
பனிப்பொழிவுக்குப் பிறகு விஜய்பூர்
-
தேயிலை தோட்டங்கள், விஜய்பூர்
-
விஜய்பூரில் தேசிய நெடுஞ்சாலை 309ஏவில் மைல்கல்
-
விஜய்பூரின் ஒரு காட்சி
மேலும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Goyal, Ashutosh (May 2014) (in en). RBS Visitors Guide INDIA - Uttarakhand: Uttarakhand Travel Guide. Data and Expo India Pvt. Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789380844794. https://books.google.com/books?id=Eeo6CQAAQBAJ&pg=PT447.
- ↑ Bijaypur Population - Bageshwar, Uttarakhand
- ↑ "Pin Code of Vijaypur in Uttarakhand". www.mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 13 May 2017.
- ↑ "Pin Code: VIJAIPUR, BAGESHWAR, UTTARAKHAND, India, Pincode.net.in". pincode.net.in. பார்க்கப்பட்ட நாள் 13 May 2017.
- ↑ "Vijaypur | Uttarakhand". ukuttarakhand.com. Archived from the original on 30 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 13 May 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Dhauli Nag Temple in Bageshwar, Uttarakhand". www.discoveredindia.com. பார்க்கப்பட்ட நாள் 13 May 2017.
- ↑ Sati, Vishwambhar Prasad (2014) (in en). Towards Sustainable Livelihoods and Ecosystems in Mountain Regions. Cham: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783319035338. https://books.google.com/books?id=qD-3BAAAQBAJ. பார்த்த நாள்: 13 May 2017.
- ↑ Maiṭhāṇī, Vācaspati (2004) (in hi). Gaṛhavāla Himālaya kī deva saṃskr̥ti: eka sāmājika adhyayana. Gāndhī Hindustānī Sāhitya Sabhā. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788186198223. https://books.google.com/books?id=AksqAQAAMAAJ. பார்த்த நாள்: 13 May 2017.
- ↑ Chamaria, Pradeep (in en). Kailash Manasarovar on the Rugged Road to Revelation. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170173366. https://books.google.com/books?id=kMyL80uBsEUC. பார்த்த நாள்: 13 May 2017.