விஜய்பூர், உத்தராகண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஜய்பூர்
विजयपुर
பிஜய்பூர்
மலை வாழிடம்
Vijaypur.jpg
விஜய்பூர் is located in Uttarakhand
விஜய்பூர்
விஜய்பூர்
உத்தராகண்ட மாநிலத்தில் விஜய்பூரின் அமைவிடம்
விஜய்பூர் is located in இந்தியா
விஜய்பூர்
விஜய்பூர்
விஜய்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°50′N 79°55′E / 29.84°N 79.92°E / 29.84; 79.92ஆள்கூறுகள்: 29°50′N 79°55′E / 29.84°N 79.92°E / 29.84; 79.92
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
மாவட்டம்பாகேசுவர்
பெயர்ச்சூட்டுவிஜய் லால் ஷா
பரப்பளவு
 • மொத்தம்1 km2 (0.4 sq mi)
ஏற்றம்[1]2,050 m (6,730 ft)
மக்கள்தொகை (2011)[2]
 • மொத்தம்89
 • அடர்த்தி89/km2 (230/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி
சமசுகிருதம்
 • பேசும் மொழிகுமாவுனி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்263640[3][4]
தொலைபேசி இணைப்பு எண்059628
வாகனப் பதிவுஉகே 02
இணையதளம்uk.gov.in

விஜய்பூர் (Vijaypur), அதிகாரப்பூர்வமாக பிஜய்பூர் என்று அழைக்கப்படும் இது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் பாகேசுவர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலை வாழிடமாகும். பாகேசுவரிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், காந்தாவிலிருந்து 5 கி.மீ தூரத்திலும் பாகேசுவர்-சௌகோரி நெடுஞ்சாலையில் அடர்த்தியான பைன் மரக் காடுகளுக்கு மத்தியில் இக்கிராமம் அமைந்துள்ளது. [5]

இது 2050 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் பனி மூடிய இமயமலை சிகரங்களான திரிசூல், நந்தா தேவி, நந்தா கோட் ஆகியவற்றின் பரந்த காட்சிகளுக்காகவும் இது அறியப்படுகிறது.[1] குமாவுனின் 8 முக்கியக் கோயில்களில் ஒன்றான தௌலிநாக் கோயில் இங்கு அமைந்துள்ளது. பெரிநாக், கலிநாக், பெனிநாக், கார்கோடக்நாக், பிங்லெநாக், கர்ஹரிநாக், அத்குலிநாக் ஆகியவை மற்ற கோயில்களாகும்.

ஆர்வமுள்ள இடங்கள்[தொகு]

தௌலிநாக் கோயிலைச் சுற்றியுள்ள பைன் காடுகள்

தௌலிநாக் கோயில்[தொகு]

இங்குள்ள ஒரு மலையுச்சியில் தௌலிநாக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் விஜய்பூரிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு முக்கியமாக விஜயதசமியின் போது பக்தர்கள் வருகை தருகின்றனர். பஞ்சமி மேளா என்பது இங்கு கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான திருவிழாவாகும். [6]

தேயிலைத் தோட்டங்கள்[தொகு]

இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. [7] வெகு காலத்திற்குப் பிறகு, குசராத்தி வர்த்தகர் விஜய் லால் ஷா என்பவரால் இந்த தோட்டங்கள் கையகப்படுத்தப்பட்டது. அவர் இந்த நகரத்திற்கு சுயமாக மறுபெயரிட்டார்.

போக்குவரத்து[தொகு]

பாகேசுவரிலிருந்து 30 கி.மீ தூரத்திலும், காந்தாவிலிருந்து 5 கி.மீ. தூரத்திலும் தேசிய நெடுஞ்சாலை எண் 309 ஏவில் விஜய்பூர் அமைந்துள்ளது . [8] விஜய்பூரிலிருந்து அருகிலுள்ள காந்தா, கோட்முன்யா மற்றும் உதியாரி வளைவு நோக்கிச் செல்ல தனியார் வாடகை - வாகனங்கள் கிடைக்கின்றன. உத்தராகண்டம் மாநில போக்குவரத்து நிறுவனம் நடத்தும் பேருந்துகள் கிராமத்தை பாகேசுவர், அல்மோரா, பெரிநாக், தில்லி போன்ற நகரங்களுடன் இணைக்கின்றன. இது கைலாச மானசரோவர் பாதையில் அமைந்துள்ளது. [9]

புகைப்படங்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Goyal, Ashutosh (May 2014) (in en). RBS Visitors Guide INDIA - Uttarakhand: Uttarakhand Travel Guide. Data and Expo India Pvt. Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789380844794. https://books.google.com/books?id=Eeo6CQAAQBAJ&pg=PT447. 
  2. Bijaypur Population - Bageshwar, Uttarakhand
  3. "Pin Code of Vijaypur in Uttarakhand".
  4. "Pin Code: VIJAIPUR, BAGESHWAR, UTTARAKHAND, India, Pincode.net.in".
  5. "Vijaypur | Uttarakhand".
  6. "Dhauli Nag Temple in Bageshwar, Uttarakhand".
  7. Sati, Vishwambhar Prasad (2014) (in en). Towards Sustainable Livelihoods and Ecosystems in Mountain Regions. Cham: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783319035338. https://books.google.com/books?id=qD-3BAAAQBAJ. பார்த்த நாள்: 13 May 2017. 
  8. Maiṭhāṇī, Vācaspati (2004) (in hi). Gaṛhavāla Himālaya kī deva saṃskr̥ti: eka sāmājika adhyayana. Gāndhī Hindustānī Sāhitya Sabhā. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788186198223. https://books.google.com/books?id=AksqAQAAMAAJ. பார்த்த நாள்: 13 May 2017. 
  9. Chamaria, Pradeep (in en). Kailash Manasarovar on the Rugged Road to Revelation. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170173366. https://books.google.com/books?id=kMyL80uBsEUC. பார்த்த நாள்: 13 May 2017. 

வெளி இணைப்புகள்[தொகு]